May

மன்னிப்பும் இரக்கமும்

(வேதபகுதி: லேவியராகமம் 23:26-32) “அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்த நாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.” (வச. 27). இஸ்ரயேல் மக்களின் நாட்காட்டியில் சொல்லப்பட்டுள்ள பண்டிகைகளில் முக்கியமானது யாம் கீப்போர் என்று அழைக்கப்படுகிற “பாவநிவர்த்தி பெருநாள்” ஆகும். லேவியராகமம் பதினாறாம் அதிகாரத்தில் இந்தப் பண்டிகையைக் குறித்த முறைகள் மற்றும் ஆசாரியனின் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலோ இந்தப் பாவநிவர்த்தி நாளின்போது மக்கள் நடந்துகொள்ள…

May

கிறிஸ்துவுக்குள் நினைகூரப்படுதல்

(வேதபகுதி: லேவியராகமம் 23:23-25) “நீ இஸ்ரவேல் புத்திரரோடு சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காள சத்தத்தால் ஞாபகக்குறியாய் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வு நாளாய் இருப்பதாக” (வச. 24). பெந்தெகொஸ்தே பண்டிகை முடிந்து ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏழாம் மாதத்தில் இந்த எக்காளப் பண்டிகை வருகிறது. மக்கள் தங்கள் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிற தருணத்தில் எவ்வித ஆசரிப்பையும் கொடுக்காமல் கால இடைவெளிவிட்டு இந்தப் பண்டிகையை ஆசரிக்கும்படி செய்ததால், தேவன்…

May

கிறிஸ்துவுக்குள் ஒன்றாக…

(வேதபகுதி: லேவியராகமம் 23:15-22) “நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு, எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறின பின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள் மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்” (வச. 15,16). முதற்பலன்களின் பண்டிகை கொண்டாடி ஏழு வாரங்களுக்குப் பின்வரும் வாரத்தின் முதல் நாளில் வருவதால் இது வாரங்களின் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. ஐம்பதாம் நாளில் அனுசரிப்பதால் இது பெந்தெகொஸ்தே பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. முதற்பலன்களின் பண்டிகை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாக…

May

முதலாவது கர்த்தருக்கே

(வேதபகுதி: லேவியராகமம் 23:9-14) “நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள்போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையைஅறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டவரக்கடவீர்கள்” (வச. 10). தேவன் வாக்குத்தத்தம் செய்த கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்கள் போய்ச் சேர்ந்த பின், அங்கு அவர்கள் விவசாய வேலையில் ஈடுபட்டு, அறுவடை செய்யும்போது கைக்கொள்ளும்படி இந்த முதற்பலன்களின் பண்டிகை கொடுக்கப்பட்டது. அவர்கள் பாலைவனத்தில் பயணம் செய்யும்போது விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை, ஆகவே அவர்கள் பயண காலத்தில் இதை…

May

பரிசுத்தமான சபைகூடுதல்

(வேதபகுதி: லேவியராகமம் 23:4-8) “முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்தி நேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும். ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்க வேண்டும்” (வச.5,6). இஸ்ரயேல் மக்கள் ஆசரிக்கும்படி ஏழு பண்டிகைகளை ஆண்டவர் நியமித்தார். இப்பண்டிகைக் காலங்களில் அவர்கள் எருசலேமில் கூட வேண்டும். இது பரிசுத்தமான சபை கூடுதல் என்று அழைக்கப்பட்டது. முதலாவது பண்டிகை பஸ்கா. இது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதுடன்…

May

மெய்யான ஓய்வும் இளைப்பாறுதலும்

(வேதபகுதி: லேவியராகமம் 23:1-3) “ஆறுநாளும் வேலை செய்ய வேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்ய வேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக” (வச. 3). ஓய்வு நாள் படைப்பில் தொடங்குகிறது. தேவன் ஆறு நாளில் இப்பிரபஞ்சத்தைப் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதாவது அந்த நாளில் படைப்பின் எவ்விதச் செயலும் செய்யாமல் ஓய்ந்திருந்தார். சீனாய் மலையில் மோசேக்கு நியாயப்பிரமாணத்தை வழங்கியபோது, தன்னுடைய எல்லாக் கிரியைகளிலும் ஓய்வுநாளை மையமாகக் கொண்டிருக்கிறேன்…

May

பொறுப்பின் மேன்மையும் கடமையும்

(வேதபகுதி: லேவியராகமம் 22:1-33) “நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்” (வச. 33). நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக எகிப்திலிருந்து விடுதலையாக்கி, அங்கிருந்து உங்களை அழைத்துக்கொண்டு வந்தேன். இந்த வார்த்தைகளில் எவ்வளவு இரக்கமும், கருணையும் தெரிகிறது. நீங்கள் அங்கே உபத்திரவத்தை அனுபவித்தீர்கள், சுதந்தரத்தையும், சுயாதீனத்தையும் இழந்து கிடந்தீர்கள், கொடுமையாய் வேலை வாங்கப்பட்டீர்கள், இதிலிருந்து நான் உங்களை அற்புதமாக விடுவித்தேன். இப்பொழுது உங்களை ஆசீர்வாதமும், வளமும் கொண்ட வாக்குத்தத்த பூமிக்கு…

May

தேவ சேவைக்கான அழைப்பும் பொறுப்பும்

(வேதபகுதி: லேவியராகமம் 21:1-24) “மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரரர் அனைவரோடும் சொன்னான்” (வச. 24). ஆரோனும், அவன் குமாரரும் இஸ்ரயேல் மக்களின் தேவனுடைய ஆசாரியர் என்ற முறையில் அவர்களுடைய தனிப்பட்ட, குடும்ப, சமுதாய வாழ்க்கை எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதை இப்பகுதி போதிக்கிறது. பிரதான ஆசாரியர் என்ற முறையில் ஆரோனும், ஆசாரியர்கள் என்ற முறையிலும் அவனுடைய குமாரரும் இஸ்ரயேல் மக்களின் ஆவிக்குரிய தலைவர்கள் என்ற முறையில் நடத்தையிலும், குணத்திலும் ஒரு சிறந்த முன்மாதிரியான…

May

தேவன் நம்மோடு இருப்பதே பெலன்

(வேதபகுதி: லேவியராகமம் 20:1-27) “நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குக் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே” (வச. 24). உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே என்று தேவன் தம்மை வெளிப்படுத்தி, தம்மை இஸ்ரயேல் மக்களுடன் அடையாளப்படுத்துகிறார். இவர்கள் கடைப்பிடிக்கும்படி பல்வேறு கட்டளைக் கொடுத்துவிட்டு, நான் உங்களுக்கு நித்திய கடவுளாகவும், உங்களை அழைத்தவராகவும், வாக்குத்தத்த நாட்டில்…

May

அன்றாட நடக்கையில் தனித்துவம்

லேவியராகமம் 19:1-37 “என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளி நூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக” (வச. 19). நம்முடைய அன்றாட நடவடிக்கைகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் தேவனுடைய மக்கள் என்ற முறையில் உண்மை, நேர்மை, பரிசுத்தம், அன்பு, இரக்கம் போன்றவற்றை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை இவ்வேதபகுதி நமக்கு அறிவுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக, நாம் அணியும் ஆடைகள்…