கோத்திரப் பிரபுக்களின் காணிக்கைகள்
(வேதபகுதி: எண்ணாகமம் 7:1-89) “பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்” (வச. 10). இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் ஆண்டின் முதல் மாதம் முதல் தேதியிலே ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது *(காண்க யாத். 40). அந்த நாளிலே இஸ்ரயேல் புத்திரரின் கோத்திரப் பிரபுக்கள் தங்கள் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து தேவனுக்கென்று படைத்தார்கள். முதலாவது இவர்கள் வண்டிகளையும் மாடுகளையும் கொண்டுவந்தார்கள் (வச. 3). இவை லேவியர்களின் வேலைக்கு…