June

அவிசுவாசம் ஆசீர்வாதத்துக்கு எதிரி

(வேதபகுதி: எண்ணாகமம் 13:1-33) “நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மால் கூடாது; அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்” (வச. 2). விசுவாசித்து நடவாமல் கண்டு நடப்பதே மனித மனதின் இயல்பு. கானான் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன் என்று தேவன் வாக்களித்துவிட்டார். அது எப்படிப்பட்ட தேசம் என்பதையும் பல தடவை சொல்லிவிட்டார். அதைச் சுதந்தரித்துக்கொள்வதே அவர்களுடைய பொறுப்பு. எப்பொழுது தேவ வார்த்தையை நம்ப மறுக்கிறோமோ அப்பொழுது நாம் உலக வழியைத் தேடுவோம். கானான் நாட்டை வேவு…

June

புறங்கூறுதல் வேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 12:1-16) “கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்” (வச. 2). ஒருவருடைய ஆவியின் கனியில் ஒன்றாகிய சாந்தகுணம் எப்பொழுது தெரியவரும்? தனக்கு எதிராகக் காரியங்கள் நடக்கும்போது மோசே தன்னுடைய சாந்தகுணத்தை வெளிப்படுத்தினான். எதிர்ப் பேசுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தும் பொறுமையுடன் இருந்தான். மேலும் மக்களை வழிநடத்துகிற தலைவர்கள்மேல் பொறாமையால் ஏற்படும் எதிர்ப்புகளை கைக்கொள்வதற்கு மோசேயின் வழி நல்லதோர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆரோனும் மிரியாமும் மோசேக்கு விரோதமாக…

June

முறுமுறுப்பும் அவிசுவாசமும்

(வேதபகுதி: எண்ணாகமம் 11:16-35) “அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று நீ இப்பொழுது காண்பாய் என்றார்” (வச. 23). தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய சிந்தையுடையவர்களாக இராமல் மாம்ச சிந்தையுடையவர்களாக இருந்தால் என்ன நடக்கும்? அவர்களை வழிநடத்தும் தலைவர்களையும் சோர்வுக்குள்ளாக்கும் என்ற துக்கமான செய்தியை இங்கே மோசேயின் வாயிலாகக் காண்கிறோம். இப்பொழுது மோசேயும் தேவனிடம் முறுமுறுக்கிறான், கோபங்கொள்கிறான். மோசே தன்னுடைய ஜெபத்தில், “நான்”, “எனக்கு”, “என்” என்ற வார்த்தைகளை…

June

இறைச்சிப் பிரியர்களின் முறுமுறுப்பு

(வேதபகுதி: எண்ணாகமம் 11:1-15) “இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்” (வச. 6). நம்முடைய வாழ்க்கையிலும் பழைய நினைவுகளின் தாக்கம் ஏற்படுவது இயல்பு. ஆயினும் அவை கர்த்தருக்கு விரோதமான அங்கலாய்ப்பாக அமையவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த மக்களுக்கு எகிப்தில் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. துரதிஷ்டவசமாக அவர்கள் அங்கு அனுபவித்த கொடுமைகள், செங்கல் சூளையில் வாங்கிய அடிகள், கூலி தராமல் ஏமாற்றப்பட்ட…

June

மூன்று நாள் பயணம்

(வேதபகுதி: எண்ணாகமம் 10:11-36) “அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்று நாள் பிரயாணம் போனார்கள்; மூன்று நாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படி அவர்கள் முன் சென்றது” (வச. 33). ஒவ்வொரு கோத்திரத்தாரும், அவரவருடைய இடத்தில், அவரவருடைய கொடிகளுடன், ஆசரிப்புக்கூடாரத்தைப் பின்பற்றி அணிவகுத்துச் செல்வது எத்தனை அற்புதமான காட்சி. கர்த்தருடைய மக்கள், நாங்கள் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள் என்று அறிக்கையிடுகிறார்கள். தங்களுடைய ஐக்கியத்தின் அழகையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறார்கள். விசுவாசிகள் இவ்வாறு செல்வதன் மூலம்…

June

செய்தி சொல்லும் ஒலிகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 10:1-10) “சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளையங்களைப் பிரயாணப் படுத்துவதற்கும் உபயோகமான இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்து கொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித் தகட்டால் செய்யப்பட வேண்டும்” (வச. 2). கர்த்தருடைய மேகம் மக்களை வழிநடத்தும் வழிகாட்டியாக இருக்கிறது. வெள்ளிப்பூரிகைகள் மேகம் சொல்லும் செய்தியை மக்களிடத்தில் தெரிவிக்கும் வாயாக இருக்கின்றன. ஆசரிப்புக்கூடாரத்தில் எழும்பும் மேகம் அதைச் சூழக் கூடாரங்களில் குடியிருக்கும் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றிலும் அதன் அருகிலேயே குடியிருக்கும் ஆசாரியர்கள் அதைக் கண்டு பூரிகைகளை…

June

வழிநடத்தும் மகிமையின் மேகம்

(வேதபகுதி: எண்ணாகமம் 9:15-23) “மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளையமிறங்குவார்கள்” (வச. 17). ஆசரிப்புக்கூடாரத்தின் மேல் அக்கினிமயமான மேகம் இரவில் அமர்ந்தது, அது விடியற்காலை வரை இருந்தது, அது தினந்தோறும் இருந்தது. இது மக்களின் கண்களுக்குத் தெரியக்கூடிய அடையாளமாக இருந்தது. இது பாளையத்தின் நடுவில் இருந்தது. இஸ்ரயேல் மக்களை எதிரிகளிடமிருந்து காத்த இந்த மேகம் (யாத். 13:21-22) இப்பொழுது பயணத்தின் வழிகாட்டியாக இருக்கிறது. எதிரியிடமிருந்து நம்மைக் காத்த…

June

பாலைவனத்தில் முதலாம் பஸ்கா

(வேதபகுதி: எண்ணாகமம் 9:1-14) “அந்தப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்” (வச. 4). இஸ்ரயேலர் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற இரண்டாம் ஆண்டு பாலைவனத்தில் தங்களது முதலாவது பஸ்காவை ஆசரித்தார்கள். பஸ்கா பண்டிகை என்றால் நினைவுக்கு வருவது அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியும் தேவனுடைய வல்லமையுமே. கிறிஸ்துவே நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி. நம்முடைய இரட்சிப்பு கல்வாரியில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தையே முற்றிலும் சார்ந்ததாக இருக்கிறது. இவை மட்டுமின்றி, புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நம்முடைய ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவுக்குள்ளாகவே நாம்…

June

லேவியர் என்னும் அசைவாட்டும்பலி

(வேதபகுதி: எண்ணாகமம் 8:5-26) “லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கைiயாக்கி, இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள்.” (வச. 13,14). தேவன் லேவியர்களை ஆசரிப்புக்கூடாரத்தில் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் உதவி செய்யும்படியாக ஏற்படுத்தினார். இவர்கள் ஆசாரியர்களுக்குத் தத்தமாகக் கையளிக்கப்பட்டவர்கள். இவர்கள் தேவனால் சிறப்பான வகையில் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் தேவனுடையவர்கள். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நம்மையும்கூட தேவன் இவ்விதமாகவே தம்முடைய சிறப்பான பணிக்கு அழைக்கிறார். முதலாவது தேவன்…

June

விசுவாசிகள் என்னும் சுடர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 8:1-4) “நீ ஆரோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போதும் ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரிய வேண்டும் என்று சொல் என்றார்” (வச. 2). ஆசரிப்புக்கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலமும் மகாபரிசுத்த ஸ்தலமும் முற்றிலும் காற்றும் வெளிச்சமும் புகாத திரைகளால் மூடப்பட்டது. குறிப்பாக பரிசுத்த ஸ்தலத்துக்குள் ஆசாரியன் நாள்தோறும் செல்ல வேண்டும். அங்கு பணிவிடை செய்வதற்கு வெளிச்சம் அவசியம். ஆகவே முதலாவது ஆரோன் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். கிறிஸ்து நானே உலகத்தின் ஒளி என்றார்…