யாக்கோபிலிருந்து தோன்றும் நட்சத்திரம்
(வேதபகுதி: எண்ணாகமம் 24:12-25) “… ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்” (வச. 17). தேவனுடைய வழிகள் நம்மால் ஆராய்ந்து முடியாதவை. நம்முடைய எண்ணங்களைக் காட்டிலும் அவருடைய எண்ணங்கள் உயர்வானவை. நம்முடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறவர். நாம் நினைத்தபடி அவருடைய ஒரு கட்டத்துக்குள் அடக்கமுடியாதவர். பணத்துக்காக அஞ்சனம் பார்க்கிற ஒரு மனிதன் மூலமாகவும் தம்முடைய நோக்கத்தை, இஸ்ரயேலரைக் குறித்த எதிர்காலத் திட்டத்தை…