சகோதரர்களை மறந்துவிடவேண்டாம்
(வேதபகுதி: எண்ணாகமம் 32:20-42) “அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் பாதிக் கோத்திரத்தாருக்கும் எமோரியருடைய … தேசங்களையும் அவைகளிலுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்” (வச. 33). ரூபன் வழிவந்தவர்களும், காத் சந்ததியினரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் யோர்தானுக்கு இக்கரையில் தங்களுக்கான சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். பல நேரங்களில் இஸ்ரயேல் நாட்டின் தேசிய வாழ்க்கையோடும், சமய வழிபாடுகளுக்கும் இவர்கள் குடும்பமாக இணைந்து செல்ல முடியாமல் போவதற்கு இந்தத் தெரிந்தெடுப்பு ஒரு காரணமாக இருந்துவிட்டது. கர்த்தர்மேல் பெரும் வாஞ்சையும் விருப்பமும்…