August

விசுவாசமா அல்லது பயமா?

(வேதபகுதி: உபாகமம் 1:16-33) “… கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்” (வச. 21). விசுவாசமும் பயமும் இணைந்து பயணிக்க முடியாது. பயம் குடியிருந்தால் விசுவாசம் ஓடிப்போகும். எங்கே விசுவாசித்து நடக்கிறோமோ அங்கே கடினமாக பாதையெல்லாம் எளிமையான பாதையாக மாறிப்போகும். ஓரேபிலிருந்து காதேஸ் பர்னேயாவிற்கு செல்லும் பாலைவன மார்க்கம் பயரங்கரமானதுதான் (வச. 19), ஆயினும் மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும் முன்னே சென்றால் கானானின் எல்லையும் தொட்டுவிடும் தூரம்தான். கர்த்தர் கட்டளைக்குத்…

August

உற்சாகமூட்டுதலின் அவசியம்

(வேதபகுதி: உபாகமம் 1:5-15) “… நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்ததுபோதும், நீங்கள் திரும்பிப் பிரயாணப்பட்டு, … போங்கள் ” (வச. 6,7). ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. கூடாரங்களில் தங்கியிருக்க ஒரு காலம் உண்டு, கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டு பயணிக்கவும் ஒரு காலம் உண்டு. பல வேளைகளில் நாம் எதற்காக அழைக்கப்பட்டோமோ அதை மறந்துபோனவர்களாவோ அல்லது எங்கு செல்ல வேண்டுமோ அதற்கு எதிரான திசையில் பயணிக்கிறவர்களாகவோ இருப்போம். நம்முடைய தூக்கத்தைக் களைந்து, நம்மைத் திருப்தியாக்கி வைத்திருக்கிற காரியங்களைவிட்டு எழுந்து…

August

நினைவூட்டுதலின் அவசியம்

(வேதபகுதி: உபாகமம் 1:1-4) “மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்” (வச. 4). இஸ்ரயேலர் இப்பொழுது வாக்குத்தத்த நாட்டின் எல்லைக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இந்த இளம் தலைமுறையினருக்கு முன்பாக இருப்பது ஒரு புதிய நாடு மட்டுமல்ல, ஒரு புதிய வாழ்க்கையும்தான். அங்கே இருப்பது பாலும் தேனும் ஓடுகிற நல்ல பூமியின் செழிப்பான வாழ்க்கை மட்டுமல்ல, கரடுமுரடான எதிரிகளைக் கையாள வேண்டிய கடினமான வாழ்க்கையும் கூடவே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை…

July

சுதந்தரத்தைக் கட்டிக்காத்த சகோதரரிகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 36:1-13) “கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்” (வச. 10). தேவன் ஒரு நாட்டுக்காக மட்டும் கரிசனையுள்ள தேவனல்ல, குடும்பங்களின்மீதும், தனிப்பட்ட நபர்களின்மேலும் அக்கறையுள்ள தேவனாக இருக்கிறார். தந்தையற்ற, சகோதரர்கள் யாருமில்லாத செலோப்பியாத்தின் மகள்களான, மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் ஆகியோரின் மேலும் தேவன் கவனம் வைக்கிறார். இவர்களுக்கு உரிய சுதந்தரத்தை அளித்து இவர்களுக்கான உரிமையை நிலைநாட்டினார். ஆதரவற்ற பெண்கள், விதவைகள், திக்கற்ற பெண்கள் ஆகியோரின்மேல் தேவன் சிறப்பான கவனம் செலுத்துகிறார்.…

July

அடைக்கலப்பட்டணங்களின் அவசியம்

(வேதபகுதி: எண்ணாகமம் 35:16-34) “நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை” (வச. 33). நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தை தீட்டுப்படுத்தாதிருங்கள் என்று கர்த்தர் கூறுகிறார் (வச. 34). குற்றங்களும் தீமைகளும் பெருகினால் குற்றவாளிகளும் பெருகுவார்கள். குற்றவாளிகள் பட்டணங்களையும் தேசத்தையும் வழிநடத்தும் நிலை நேரிடும். சில வகை குற்றங்கள் சரியென போதிக்கப்படும். மக்களின் நடுவில் தேவபயம் இல்லாமற்போகும். பழிவாங்குதலும், கொலைகளும் பெருகும்.…

July

அடைக்கலப்பட்டணங்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 35:9-15) “கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றுபோட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப் பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள் ” (வச. 10). லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நாற்பத்தியெட்டு பட்ணங்களில் ஆறு அடைக்கலப்பட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன. ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரம் ஆகிய மூவரும் குடியேறி பகுதியாகிய யோர்தானுக்கு கிழக்கே மூன்று பட்டணங்களும், மீதமுள்ள கோத்திரங்கள் குடியேறிய கானானில் மூன்று பட்டணங்களும் ஏற்படுத்தப்பட்டன. கேதேஸ், சீகேம், எபிரோன், பேசேர், ராமோத், கோலான் என்பவையே அவை (யோசுவா 20:7,8). கைப்பிசகாய், முன்கூட்டியே திட்டமிடாமல், எவ்வித…

July

லேவியர்: கர்த்தருடைய ஊழியர்கள்

எண்ணாகமம் 35:1-8 “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு” (வச. 2). லேவியர்கள் தேவனுடைய வேலைக்காக அழைக்கப்பட்டவர்கள். இவர்களுடைய பணி ஆசரிப்புக்கூடாரத்தையும் அதைச் சார்ந்ததுமாகவே இருந்தது. ஆசாரிப்புக்கூடாரம் நிர்மாணிக்கப்பட்டது தொடங்கி, முப்பத்தெட்டு ஆண்டுகளாக பாலைவனத்தில் அதைச் சுமந்து வந்தவர்கள் இவர்களே. முந்தின அதிகாரத்தில் நாட்டைப் பங்கு பிரிக்கும் குழுவில் இவர்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் தங்களுடைய நிலை என்னவாகும் என இவர்கள் யோசித்திருக்கலாம். கர்த்தர்…

July

சுதந்தர நாட்டின் எல்லைகள்

எண்ணாகமம் 34:1-29 “கானான் தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது” (வச. 2). கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்க்கும்படி நினைவூட்டிய தேவன் இப்பொழுது எதிர்கால ஆசீர்வாதத்தின் எல்லைகளை முன்னோக்கிப் பார்க்கும்படி மோசேயின் மூலமாகப் பேசுகிறார். நாம் பெரும்பாலும் கடந்த காலத்தின் நினைவுகளில் மூழ்கிக்கிடக்கும் இயல்புடையவர்கள். சில சமயங்களில் கடந்தகால சுயபெருமையைப் பேசுவோம், அல்லது வீழ்ச்சியின் மனக்கிலேசத்தின் வருத்தத்தில் மூழ்கிக்கிடப்போம். நாம் இவற்றிலிருந்து விடுபட்டு, கடந்த காலத்தில் கர்த்தர் நமக்குச் செய்த கிருபையின் செயல்களை…

July

தனித்துவமான வாழ்க்கைக்கு அழைப்பு

(வேதபகுதி: எண்ணாகமம் 33:50-56) “அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்” (வச. 53). நீண்டகாலக் காத்திருப்பு நம்முடைய இருதயங்களை சோர்ந்துபோகச் செய்யும். ஆயினும் விரும்பியது கிடைக்கும் போது சோர்ந்துபோன இருதயங்கள் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் அடையும். இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவன அலைச்சலுக்குப் பின்னர், இப்பொழுது தேவன் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின கானானின் எல்லைக்கு வந்துவிட்டார்கள். இதுவே அவர்களுடைய இப்பூமிக்குரிய கனவு தேசம். இதுவரை நாடோடிகளாக, அந்நிய தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்த வாழ்க்கைக்கு முடிவு உண்டாகி, சுதந்தர…

July

தேவனே நமக்கு அடைக்கலம்

(வேதபகுதி: எண்ணாகமம் 33:1-49) “மோசே தனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன” (வச. 2). நித்திய கானானை நோக்கி இந்த உலகம் என்னும் வனாந்தரத்தின் வழியாக பயணம் செய்துகொண்டிருக்கிற நம்மில் பலருக்கு அடிக்கடியாக வீடு மாறின அனுபவம் இருக்கும். சென்னை வந்து பதினைந்து ஆண்டுகளில் நாங்கள் இதுவரை ஏழு வீடுகள் மாறியிருக்கிறோம். ஒவ்வொரு முறை வீடு மாறுவதற்கும் ஏதாவது ஒரு காரணம். அவற்றில் சில சந்தோஷமான…