பழையதும் புதியதும்
(வேதபகுதி: உபாகமம் 11:1-15) “நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டு வந்த எகிப்து தேசத்தைப்போல இராது.” (வச. 10). தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு இரண்டு காரியங்களை முன்வைக்கிறார். ஒன்று, கடந்த காலத்தில் எகிப்திலிருந்து காப்பாற்றி விடுதலையளித்த கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம நினைத்துக்கொள்வது (வச. 7), இரண்டு, கர்த்தர் அவர்களுக்கு முன்பாக வைத்திருக்கிற நல்ல ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்கும்படி அவரையே சார்ந்துகொள்வது (வச. 9). இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வந்ததைப் போலவே நாமும் இந்த உலகத்திலிருந்து பிரித்து…