இரத்தப்பழியை நீக்கும் அணுகுமுறை
(வேதபகுதி: உபாகமம் 21:1-9) “கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்” (வச. 8). நிலம் கர்த்தருக்குச் சொந்தமானது, அதில் வாழும் மக்கள் வாடகைதாரர்கள். மக்களுடைய பாவங்கள் கர்த்தரைத் துக்கப்படுத்துவது மட்டுமின்றி நாட்டையும் அசுத்தப்படுத்துகிறது. இஸ்ரயேலில் அப்பாவிகளின் இரத்தம் சிந்தப்படுவது ஒரு மோசமான குற்றச்செயல் (உபா. 19:10,13). காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தபோது, பூமி ஆபேலின்…