கீழ்ப்படிதலின் ஆசீர்வாதம்
(வேதபகுதி: உபாகமம் 26:12-19) “… நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாய் இருப்பாய் என்றும், … நீ என் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும் அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்” (வச. 18,19). கர்த்தருடைய வழிகளில் நடப்பதற்கு மக்கள் ஒப்புக்கொண்ட காரணத்தால், அவர்கள் தம்முடைய சொந்த ஜனங்கள் என்று உறுதியளித்து, எல்லா இனங்களுக்கும் மேலாக அவர்களைச் சிறக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அவர்கள் உள்ளார்ந்த வகையில் ஏதோ தகுதி பெற்றவர்கள் என்பதால்…