இஸ்ரயேல் என்னும் கர்த்தருடைய கண்மணி
(வேதபகுதி: உபாகமம் 32:1-14) “பாழான நிலத்திலும், ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (வச. 10). தேவன் தம்முடைய இறையாண்மையின்படி, எதிர்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தன்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அந்நிய தேவர்களைப் பின்பற்றுவார்கள் என்று அறிந்திருந்தார். ஆயினும் இந்த உடன்படிக்கையின் கர்த்தர் அவர்களை தொடர்ந்து நேசிக்கிறார். அவர்களை குடியமர்த்த யோசுவாவை நியமிக்கிறார். அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டதை நிறைவேற்றும்படி முனைப்புக் காட்டுகிறார். இத்தகைய சூழ்நிலையில்…