May

கிறிஸ்துவுக்கொப்பாக மறுரூபமடைதல்

May 28

“But we all, with open face beholding as in a glass the glory of the Lord, are changed into the same image from glory to glory, even as by the Spirit of the Lord.” (2 Cor. 3:18)

The Bible teaches that we become like what we worship. That important insight is found in today’s text. Let’s break it down this way:

But we all—that is, all true believers;

with open or unveiled face—sin causes a veil between our faces and the Lord. When we confess and forsake the sin, we have an open or unveiled face;

beholding as in a glass—the glass or mirror is the Word of God, in which we behold

the glory of the Lord—meaning His moral excellence. In the Bible we gaze upon the perfection of His character, the beauty of all His works and ways;

are changed into the same image—we become like Him. We are changed by beholding. The more we are occupied with Him, the more like Him we become.

This change is

from glory to glory—from one degree of glory to another. The change does not take place all at once. It is a process that continues as long as we behold Him. The transformation of our character is effected

even as by the Spirit of the Lord—the Holy Spirit produces likeness to Christ in all those who gaze by faith upon the Savior as He is revealed in the Bible.

In The Tales of Nathaniel Hawthorne, it wasn’t Mr. Gathergold or General Blood and Thunder or Old Stony Phiz or the poet, but Ernest—who, gazing in quiet meditation on the Great Stone Face, eventually came to resemble it.

I heard once of a man who went daily to a Buddhist temple and sat with legs akimbo and arms folded, gazing upon the green statue. It was said that after years of this meditation, he actually came to resemble the Buddha. Whether that is true, I don’t know, but I do know that reverent occupation with the Son of God produces moral resemblance to Him.

The way to holiness is through gazing upon the Lord Jesus. It is not ordinarily possible to think of Christ and of sin at the same time. During those moments when we are taken up with Him, we are most free from sin. Our goal then should be to increase the percentage of our time when we are beholding Him.

மே 28

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 2.கொரிந்தியர் 3:18.

கிறிஸ்துவுக்கொப்பாக மறுரூபமடைதல்

நாம் எவரைத் தொழுதுகொள்கிறோமோ அவரைப்போல ஆவோம் என்று திருமறை கற்பிக்கிறது. இன்றைய நாளின் வசனத்தில் இதன் இன்றியமையாத தன்மை காணப்படுகிறது. ஆகையால் இதனைப் பகுத்தறிவது நல்லது.

நாமெல்லாரும் – அதாவது, அனைத்து உண்மையான விசுவாசிகளும், திறந்த முகமாய் – நமது முகத்துக்கும் கர்த்தருக்கும் இடையே திரையை உண்டாக்குவதற்குப் பாவம் காரணமாயிருக்கிறது. பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடுமோமென்றால், திறந்த முகமுடையவராய் இருப்போம்.

கர்த்தருடைய மகிமையை – கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்குணச் சிறப்பினையும், அதன் நிறைவையும், அவருடைய செயல்பாடுகளின் அழகையும், அவருடைய வழியையும், நாம் வேதத்தில் காண்கிறவர்களாக இருக்கிறோம்.

கண்ணாடியிலே காண்கிறதுபோல கண்டு – தேவ வார்த்தை கண்ணாடியாக இருக்கிறது. அந்தச் சாயலாகத்தானே மறுரூபப்படுகிறோம் – அவரைப்போல மாறுகிறோம். அவரைக் காண்பதால் அவரைப்போலாகிறோம். அவரோடு மிகுதியாய் ஈடுபாடு கொள்வதால், மிகுதியாக அவரைப் போலாவோம். அந்த மாற்றம் எத்தகையதாயிருக்கிறது.?

மகிமையின் மேல் மகிமையடைந்து – மகிமையின் ஒருபடியிலிருந்து அடுத்த படிக்கு உயர்வதை இது குறிக்கிறது. இந்த மாற்றம் ஒருவரது வாழ்வில் சடுதியாக நிகழ்வதில்லை. அவரை உற்றுக் காண்கிறபோது, மாற்றம நம்மிடத்தில் தொடர்ந்து நிகழ்கிறது. நமது குணநலத்தில் மாற்றம் ஏற்பட்டு மறுரூபப்படுகிறோம்.
ஆவியாயிருக்கிற கர்த்தரால் – திருமறையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிற வண்ணமாக அவரை நோக்கிப் பார்க்கிறவர்களிடத்தில் கிறிஸ்துவின் சாயலை ஆவியானவர் உருவாக்குகிறார்.

ஒரு மனிதனைக் குறித்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் நாள்தோறும் ஒரு பௌத்த ஆலயத்திற்குச் சென்று தன் கால்கள் கைகள் இரண்டையும் புத்தரைப்போல மடக்கி அமர்ந்த வண்ணமாக பச்சைநிற புத்தருடைய சிலையை நோக்கிக் கொண்டிருப்பானாம். அவ்வாறு பல ஆண்டுகள் அவன் தியானம் செய்தபிறகு, உண்மையாகவே புத்தரைப்போல தோற்றமளித்தானாம். இக்கதை உண்மையோ பொய்யோ, எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றை நான் அறிவேன். ஒழுக்கத்தில் கிறிஸ்துவுக்கு ஒப்பான சாயலை அடைவதற்கு, ஒரு விசுவாசி தேவனுடைய குமாரனோடு நாள்தோறும் கொள்ளும் பயபக்தியோடு கூடிய ஜக்கியம் காரணமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால் பரிசுத்தமடைவதற்குரிய வழியாக இருக்கிறது. ஒரே சமயத்தில் கிறிஸ்துவையும் பாவத்தையும் குறித்துச் சாதாரணமாகச் சிந்திக்க இயலாது. ஆனால், தொடர்ந்து அவரை நோக்கிப் பார்ப்போமென்றால் விண்ணுலகிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிற வேளையில், பெரும்பாலும் பாவத்திலிருந்து நாம் விடுவிக்கப்பட்டிருப்போம். ஆகவே, அவரை நோக்கிப்பார்ப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிடுவதையே நமது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

28. Mai

»Wir alle aber, mit aufgedecktem Angesicht die Herrlichkeit des Herrn anschauend, werden verwandelt nach demselben Bilde von Herrlichkeit, als durch den Herrn, den Geist.« 2. Korinther 3,18

Die Bibel lehrt, dass wir so werden wie das, was wir anbeten. Diese wichtige Einsicht finden wir in unserem heutigen Bibeltext. Wir können ihn folgendermaßen aufgliedern:

Wir alle aber – das heißt alle wahren Gläubigen; mit aufgedecktem Angesicht – Sünde ist wie ein Schleier zwischen unserem Gesicht und dem Herrn. Wenn wir Sünde bekennen und lassen, haben wir ein aufgedecktes Angesicht;

die Herrlichkeit des Herrn – damit ist Seine moralische Schönheit gemeint. In der Bibel sehen wir staunend die Vollkommenheit Seines Charakters, die Schönheit all Seiner Werke und Wege;

anschauend – diese Herrlichkeit schauen wir im Spiegel des Wortes Gottes an; werden verwandelt nach demselben Bilde – wir werden Ihm ähnlich. Wir werden verändert durch unser Anschauen. Je mehr wir uns mit Ihm beschäftigen, desto ähnlicher werden wir Ihm. Diese Veränderung geschieht

von Herrlichkeit zu Herrlichkeit – von einem Grad der Herrlichkeit zum nächsten. Die Verwandlung geschieht nicht auf einmal. Es ist ein Prozess, der so lange andauert, wie wir Ihn betrachten. Und diese Umwandlung unseres Charakters wird bewirkt

durch den Herrn, den Geist – der Heilige Geist bewirkt Christusähnlichkeit in all denen, die sich im Glauben mit dem Herrn beschäftigen, wie Er in der Bibel geoffenbart ist.

In den »Märchen von Nathaniel Hawthorne« war es nicht Herr Goldraff oder General Blut oder Donner oder Alt Hartherz oder der Dichter, sondern Ernst – der, indem er in stillem Nachdenken das Große Steinerne Angesicht betrachtete, schließlich diesem ähnlich wurde.

Ich hörte einmal von einem Mann, der täglich in einen buddhistischen Tempel ging und mit gekreuzten Beinen und verschränkten Armen die grüne Statue betrachtete. Man sagt, dass er nach jahrelanger Meditation tatsächlich dem Buddha ähnlich sah. Ich weiß nicht, ob das wahr ist, aber ich weiß, dass ehrfürchtige Beschäftigung mit dem Herrn moralische Ähnlichkeit mit Ihm bewirkt.

Der Weg der Heiligung geht über die Betrachtung des Herrn Jesus. Es ist im Allgemeinen unmöglich, gleichzeitig an Christus und an Sünde zu denken. In den Momenten, in denen wir von Ihm ergriffen sind, sind wir am meisten frei von Sünde. Unser Ziel sollte deshalb sein, den Prozentsatz unserer Zeit zu vergrößern, den wir unserer Betrachtung des Herrn widmen.