July

கிறிஸ்துவைப் போலும் விசுவாசிகள்

July 19

“…as he is, so are we in this world.” (1 John 4:17b)

Here is one of those New Testament truths that shocks us by its sheer audacity. We would not dare to utter the words if we did not see them in the Bible. But they are gloriously true, and we can revel and rejoice in them.

In what sense are we like Christ in this world? Our minds almost automatically think first of the ways we are not like Him. We do not share with Him the attributes of deity, such as omnipotence, omniscience and omnipresence. We are full of sin and failure whereas He is absolutely perfect. We do not love as He loves, or forgive as He forgives.

How, then, are we like Him? The verse explains. “Herein has love been perfected with us that we may have boldness in the day of judgment, that even as he is, we also are in this world” (Darby). God’s love has so worked in our lives that we will not be terrified when we stand before the Judgment Seat of Christ. The reason for our confidence is that we have this in common with the Savior—judgment is behind us. We are like Him with respect to judgment. He bore the judgment of our sins on the Cross of Calvary and settled the sin question once for all. Because He took the punishment of our sins, we will never have to take it. We can confidently sing, “Death and judgment are behind me,/ grace and glory lie before,/ all the billows rolled o’er Jesus,/ there they spent their utmost power.” Just as judgment is forever past for Him, so it is past for us also, and we can say, “There is no condemnation,/ there is no hell for me,/ the torment and the fire,/ mine eyes shall never see./ For me there is no sentence,/ for me death has no sting:/ because the Lord who loves me/ will shield me with His wing.”

We are like Him not only with respect to judgment but also with respect to acceptance before God. We stand before God with the same favor that the Lord Jesus does, because we are in Him. “Near, so very near to God / I could not nearer be,/ for in the Person of His Son,/1 am as near as He.”

And finally, we are like Christ because we are loved by God the Father, just as Christ is. In His high-priestly prayer, the Lord Jesus said, “…thou…hast loved them, as thou hast loved me” (John 17:23b). Thus, it is no exaggeration for us to say, “Dear, so very dear to God,/ I could not dearer be./ The love wherewith He loves His Son,/ such is His love to me.”

So it is blessedly true that as Christ is, so are we in this world.

யூலை 19

அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். 1.யோவான் 4:17 

கிறிஸ்துவைப் போலும் விசுவாசிகள்

புதிய ஏற்பாட்டு சத்தியம் ஒன்று இங்கு துணிச்சலோடு உரைக்கப்பட்டிருப்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது. திருமறையில் இத்தகைய சொற்களைக் காணாதிருப்பின் அவற்றை உச்சரிப்பதற்கும் நாம் தயங்குவோம். ஆயின் மகிமை நிறைந்த உண்மையாகவே இவை விளங்குகின்றன. இவற்றில் நாம் மிகுந்த மனமகிழ்ச்சியும், பேருவகையும் கொள்கிறோம்.

இப்புவியில் வாழும்போது என்னென்னவற்றில் நாம் கிறிஸ்துவைப் போலிருக்கிறோம்?. இக்கேள்வியை செவிமடுத்த உடனேயே என்னென்னவற்றில் அவரைப்போல நாம் இல்லை என்று நமதுள்ளம் சிந்திக்கத் தொடங்கிறது. தனிச்சிறப்பு வாய்ந்த அவருடைய தெய்வீகப் பண்புகளாகிய சர்வவல்லமை, சர்வஞானம், சர்வவியாபகம், ஆகியவற்றில் நமக்குப் பங்கேதுமில்லை. நாம் பாவம் நிறைந்தவர்களாயிருக்கிறோம். அவரோ முற்றிலும் பூரணமானவர். அவரைப் போல நாம் அன்புகூருகிறதில்லை. அவரைப்போல மன்னிக்கிறதுமில்லை.

அவ்வாறாயின், எவ்வகையில் நாம் அவரைப்போல இருக்கிறோம்? ‘நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத் தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது, ஏனென்றால், அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்” என்னும் வசனம் இதனை விளக்குகிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய அன்பு ஆற்றியிருக்கின்ற செயலினாலே கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன் அச்சமின்றி நிற்போம். நாம் ஆக்கினை அடையப்போகிறதில்லை. ஆக்கினைத் தீர்ப்பைப் பொருத்தமட்டில் நாமும் அவரும் ஒன்று போல இருக்கின்றோம். நம்முடைய பாவங்களுக்காக தண்டனையைக் கல்வாரிசிலுவையில் அவர் ஏற்று, பாவத்தின் சாபத்தை ஒரேயடியாகத் தொலைத்தார். நாம் அடைய வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டதால், இனி அதை நாம் பெறப்போவதில்லை.

பாவத்தின் சீற்றம் இயேசுவை அமிழ்த்தின,
கோபத்தின் கொடுமை தொலைந்து போயின,
இறப்பும் ஒறுப்;பும் அகன்று சென்றன,
கருணையும் மகிமையும் என்மேல் தங்கின.

என்று நாம் மகிழ்ந்து பாடக்கடவோம். தண்டனை எவ்வாறு இயேசு கிறிஸ்துவைக் கடந்து சென்றுவிட்டதோ, அதுபோல நம்மையும் கடந்து சென்றுவிட்டது. ‘ஆக்கினையும் நரகமும் நான் அறியேன். கொடுமையும், தீப்பிழம்பும் எனக்கில்லை. அவற்றை என் கண்கள் காணா. எனக்கு எதிரான தீர்ப்பில்லை. சாவின் கூர் என்னைத் தாக்காது. கர்த்தரின் செட்டை மறைத்திடுமே! ” என்று உறுதியுடன் கூறக்கடவோம்.

மேலும், தேவனாலே ஏற்றுக்கொள்ளப்படுவதிலும் நாம் அவரைப்போல இருக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவ்விதமாக தேவனுடைய பிரியத்தைப் பெற்றிருக்கிறாரோ அவ்விதமாகவே நாமும், அவருடைய பிரியத்தைப் பெற்றிருக்கிறோம். அவருக்குள் நாம் இருக்கிறோம் என்பதே அதன் காரணமாகும். ‘அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்குள்ளாக நான் இருப்பதால், அவர் கொண்டிருக்கிற அடையக்கூடாத நெருக்கத்தை தேவனிடத்தில் பெற்றிருக்கிறேன்.

கிறிஸ்து எவ்வாறு தேவனால் அன்புகூரப்பட்டிருக்கிறாரோ, அவ்வாறே நாமும் பிதாவின் அன்புக்குப் பாத்திரராக இருக்கிறோம். மகா பிரதான ஆசாரியராக நமது கர்த்தர் ஏறெடுத்த மன்றாட்டில், ‘நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பாயிருக்கிறீர்.” என்று கூறினார் (யோவான் 17:23). ‘தேவனுக்குப் பிரியமானவன், இதனைக் காட்டிலும் அவரது பிரியத்தைப் பெறமுடியுமோ? தமது குமாரனிடத்தில் அவர் செலுத்துகிற அதே அன்பை என்னிடத்திலும் அவர் கொண்டிருக்கிறார்” என்று கூறுவது மித மிஞ்சின கூற்றாகாது.

ஆகவே, கிறிஸ்து எவ்வாறு இருக்கிறாரோ, அவ்வாறு நாமும் இவ்வுலகில் இருக்கிறோம்.

19. Juli

»… dass, gleichwie er ist, also auch wir sind in dieser Welt.« 1. Johannes 4,17b

Hier haben wir eine neutestamentliche Wahrheit vor uns, die uns durch ihre Kühnheit förmlich schockiert. Wir würden es nicht wagen, diese Worte auszusprechen, wenn wir sie nicht in der Bibel fänden. Aber sie sind wunderbarerweise wahr, und wir können uns an ihnen erfreuen und sie genießen.

In welchem Sinne sind wir wie Christus in dieser Welt? Wir denken fast immer automatisch daran, auf welche Weise wir nicht genauso wie Er sind. Wir teilen mit Ihm nicht die Eigenschaften Seiner Gottheit, wie z.B. Allmacht, Allwissenheit und Allgegenwart. Wir sind voller Sünde und Fehler, während Er absolut vollkommen ist. Wir lieben nicht, wie Er liebt, und vergeben nicht, wie Er vergibt.

Auf welche Weise sind wir also gleichwie Er? Der Vers erklärt es selbst. »Hierin ist die Liebe mit uns vollendet worden, damit wir Freimütigkeit haben am Tage des Gerichts, dass, gleichwie Er ist, also auch wir sind in dieser Welt.« Gottes Liebe hat in unserem Leben derart gewirkt, dass wir keine Angst haben werden, wenn wir vor dem Richterstuhl Christi stehen. Der Grund für unsere Zuversicht ist das, was wir mit Christus gemeinsam haben – das Gericht liegt hinter uns. Im Hinblick auf das Gericht sind wir wie Er. Er trug das Gericht für unsere Sünden am Kreuz auf
Golgatha und hat die Frage der Sünde ein für alle Mal gelöst. Weil Er die Strafe für unsere Sünden getragen hat, werden wir sie niemals zu tragen haben. Wir können mit zuversichtlicher Gewissheit singen:

»Tod und Gericht liegen hinter mir, Gnade und Herrlichkeit vor mir, alle Wellen gingen über Jesus hinweg, dort haben sie all ihre Kraft verbraucht. « Wie das Gericht für Ihn für immer Vergangenheit ist, so ist es auch für uns Vergangenheit, und wir können sagen:

»Es gibt keine Verdammnis, keine Hölle mehr für mich, die Qual und das Feuer werden meine Augen nie sehen. Für mich gibt es keine Verurteilung, für mich hat der Tod keinen Stachel: weil der Herr, der mich liebt, mich unter Seinen Flügeln schützen wird.«

Wir sind wie Er – nicht nur im Blick auf das Gericht, sondern auch im Blick auf unsere Annehmlichkeit vor Gott. Wir stehen vor Gott in dem gleichen Wohlgefallen wie der Herr Jesus, weil wir in Ihm sind.

»Nahe, so nahe bei Gott, ich könnte nicht näher sein, denn in der Person Seines Sohnes bin ich so nahe wie Er.«

Schließlich sind wir wie Christus, weil wir von Gott dem Vater ebenso geliebt werden wie Er. In Seinem so genannten hohepriesterlichen Gebet sagte der Herr Jesus: »… dass du … sie geliebt hast, gleichwie du mich geliebt hast« (Johannes 17,23b). So ist es also für uns keine Übertreibung zu sagen:

»Geliebt, so geliebt von Gott, ich könnte nicht mehr geliebt sein. Die Liebe, mit der Er Seinen Sohn liebt, ist die gleiche, die auch ich erfahre.« So ist es in herrlicher Weise wahr, dass gleichwie Christus ist, also auch wir sind in dieser Welt. Freuen wir uns!