December

தகுதியற்றோரிடம் காட்டும் கிருபை

December 30

“And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan’s sake?” (2 Sam. 9:1)

Mephibosheth was a grandson of King Saul, who had repeatedly tried to take David’s life. He therefore came from a rebel family that might have expected to be wiped out when David came to the throne. In addition to that, Mephibosheth was a helpless cripple, having been dropped by his nurse when he was young. The fact that he lived in someone else’s home in Lo-debar, meaning “no pasture,” suggests that he was impoverished. Lo-debar was on the east side of the Jordan and therefore “afar off” from Jerusalem, God’s dwelling. There was no merit in Mephibosheth as far as David’s favor was concerned.

In spite of all that, David inquired concerning him, sent messengers after him, brought him to the royal palace, assured him that there was nothing to fear, enriched him with all Saul’s land, provided him with a retinue of servants to wait on him and honored him with a permanent place at the king’s table as one of the king’s sons.

Why did David show such mercy, grace and compassion to one who was so unworthy? The answer is “for Jonathan’s sake.” David had made a covenant with Jonathan, the father of Mephibosheth, that he would never cease to show kindness to Jonathan’s family. It was an unconditional covenant of grace (1 Sam. 20:14-17).

Mephibosheth realized this, for when he was first ushered into the king’s presence, he prostrated himself and said that “a dead dog” like he did not deserve such kindness.

It should not be difficult for us to find ourselves in this picture. We were born of a rebel, sinful race under the condemnation of death. We were morally deformed and paralyzed by sin. We too dwelt in a land of “no pasture,” spiritually starved. Not only were we doomed, helpless and impoverished, we were “afar off” from God, without Christ and without hope. There was nothing in us to draw forth God’s love and kindness.

Yet God sought us, found us, delivered us from the fear of death, blessed us with all spiritual blessings in the heavenlies, brought us to His banqueting table, and raised the banner of His love over us.

Why did He do it? It was for Jesus’ sake. And it was because of His covenant of grace under which He chose us in Christ before the foundation of the world.

The fitting response for us is to prostrate ourselves in His presence and say, “What is thy servant, that thou shouldest look upon such a dead dog as I am?”

டிசம்பர் 30

யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். 2.சாமு.9:1

தகுதியற்றோரிடம் காட்டும் கிருபை

தாவீதின் உயிரைக் குடிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்த அரசனாகிய சவுலின் பேரனே மேவிபோசேத் என்பவன். தாவீது அரியணையில் அமர்ந்த பின்னர், அவனுடைய எதிரியின் குடும்பத்தைச் சேர்ந்த மேவிபோசேத் கொன்று போடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அவன் நடக்கக்கூடாத முடவன். அவன் சிறுவனாக இருந்தபோது அவனைப் பராமரித்த தாதி அவனைக் கீழே போட்டுவிட்டாள். இப்பொழுதோ அவன் வேறொருவனுடைய வீட்டிலே வசித்துக் கொண்டிருந்தான். ‘மேய்ச்சல் இல்லாத” என்னும் பொருளுடைய லோதேபாரில் குடியிருந்தான். அவன் வறுமையுற்றிருந்தான் என்பதை லோதேபார் என்னும் பெயர் வெளிப்படுத்துகிறது. லோதேபார் யோர்தான் நதிக்குக் கிழக்கே இருந்த காரணத்தினால் தேவனுடைய வாசஸ்தலமாகிய எருசலேமை விட்டு தொலைதூரத்தில் இருந்தது. தாவீதின் தயவு பெறத்தக்க ஏதொரு சிறப்பும் மேவிபோத்தினிடத்தில் காணப்படவில்லை.
இவையாவும் இவ்விதமாக இருந்தபோதும், தாவீது அவனைக் குறித்து விசாரித்தான். அவனைத் தேடி ஆட்களை அனுப்பினான். அரண்மணைக்குக் கொண்டுவந்தான், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று உறுதியளித்தான். அவனுக்குப் பணிவிடைசெய்ய ஒரு பரிவாரத்தையே கொடுத்தான். எல்லாவற்றிக்கும் மேலாக அரசனின் பந்தியிருப்பில், இளவசரர்களுக்கு அளிப்பது போன்று நிரந்தரமாக ஓரிடத்தைக் கொடுத்து அவனைக் கனப்படுத்தினான்.
இவ்வகையில் இரக்கத்தையும், கிருபையையும், பரிவையும், தாவீது அவனிடத்தில் காண்பிக்கத்தக்க வகையில் என்ன மேன்மையை அவன் உடையவனாயிருந்தான்? அதன்விடை ‘யோனத்தான் நிமித்தம்” என்னும் சொற்றொடரில் அடங்கியிருக்கிறது. மேவிபோசேத்தின் தகப்பனாகிய யோனத்தானின் குடும்பத்தாருக்குத் தயைபாராட்டுவதை நிறுத்திவிடமாட்டேன் என்று தாவீது அவனோடு உடன்படிக்கை செய்திருந்தான். இது நிபந்தனையற்ற கிருபையின் உடன்படிக்கையாகும். (1.சாமு.20:14-17).
முதல்முறையாக அரசனின் சமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது மேவிபோசேத் இதனை உணர்ந்தான். அரசனின் அடிமுன்னர் வீழ்ந்து, ‘செத்தநாய்” என்று தன்னைத் தாழத்;திப் பணிந்து கொண்டான். இப்பேற்றைப் பெறுதற்குத் தனக்கு எவ்விதத்திலும் தகுதியில்லை என்பதை இங்ஙனம் அவன் அறிக்கை செய்தான்.
இந்த சித்திரத்தில் நம்மை இருத்திப் பார்ப்பதில் எவ்விதச் சிரமமும் இல்லை. கலகக்காரர்களும் பாவம் நிறைந்தவர்களுமாகிய இனத்தில் பிறந்து மரண ஆக்கினைக்குக் கீழாயிருந்தோம். ஒழுக்கத்தின் அடிப்படையில் உருவற்றுப் போனவர்களாயும், பாவத்தினால் முடமாகிப்போனவர்களாகவும் இருந்தோம். ‘மேய்ச்சல் அற்ற” நிலத்தில் வாழ்ந்தோம். ஆவிக்குரிய வகையில் பசிப்பிணி பிடித்தவர்களாகவும் இருந்தோம். நாம் உதவியற்றவர்களும், வறுமையுற்றவர்களும், அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தோம். அதற்கும் மேலாக தேவனைவிட்டுத் தூரமானவர்களாகவும், கிறிஸ்து அற்றவர்களாகவும், நம்பிக்கை அற்றவர்களாகவும், இருந்தோம். தேவனுடைய அன்பைப் பெறுவதற்கும் அவருடைய தயவை அடைவதற்கும் நம்மிடத்தில் எவ்விதத் தகுதியும் இல்லாதிருந்தோம்.
இருந்தபோதிலும், தேவன் நம்மை நாடினார், கண்டடைந்தார், சாவின் அச்சத்திலிருந்து விடுவித்தார். விண்ணுலக நற்பேறுகளால் ஆசீர்வதித்தார். அவருடைய விருந்துசாலைக்கு அழைப்பித்து தமது நேசத்தின் கொடியால் நம்மைத் தழுவிக்கொண்டார்.
இதனை அவர் செய்ததன் காரணம் யாது? கிறிஸ்துவின் நிமித்தம் அவர் இதைச் செய்தார். இவ்வுலகத் தோற்றத்திற்கு முன்னரே, அவருடைய கிருபை மிகுந்த உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்துவுக்குள்ளாக அவர் நம்மைத் தெரிந்து கொண்டதினாலே இதைச் செய்தார்.
இதற்கு உகந்த பதில், அவர் திருவடி முன்னர் தாழவிழுந்து, ‘செத்தநாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்க்கிறதற்கு, உமது அடியான் உம்மாத்திரம்? என்று கூறிப் பணிந்துகொள்வோம்.

30. Dezember

»Und David sagte: Gibt es vielleicht noch jemand, der vom Haus Sauls übrig geblieben ist, damit ich Gnade an ihm erweise um Jonathans willen?« 2. Samuel 9,1

Mephiboseth war ein Enkel von König Saul, der wiederholt versucht hatte, David zu töten. Er kam also aus einer rebellischen Familie, die zu erwarten hatte, dass sie ausgelöscht wurde, sobald David auf den Königsthron kam. Außerdem war Mephiboseth noch ein hilfloser Krüppel, da seine Amme ihn fallen gelassen hatte, als er noch klein war. Die Tatsache, dass er im Haus von jemand anders in Lo-Dabar wohnte (was »keine Weide« bedeutet), lässt darauf schließen, dass er auch verarmt war. Lo-Dabar war auf der Ostseite des Jordans und daher weit weg von Jerusalem,
dem Ort, wo Gott wohnte. Es war also kein Verdienst an Mephiboseth, womit er Davids Gnade hätte erreichen können.

Doch trotz alle dem erkundigte sich David nach ihm, schickte Botschafter nach ihm aus, ließ ihn in den königlichen Palast bringen, versicherte ihm, dass er nichts zu fürchten hätte, machte ihn reich mit dem ganzen Landbesitz Sauls, gab ihm ein Gefolge von Knechten, die ihn bedienen sollten, und ehrte ihn mit einem Platz am Tisch des Königs, wo er immer zusammen mit den Königssöhnen sitzen durfte.

Warum zeigte David einem Mann, der eigentlich unwürdig war, so viel Barmherzigkeit, Gnade und Mitgefühl? Die Antwort hieß: »um Jonathans willen«. David hatte mit Jonathan, dem Vater Mephiboseths, einen Bund geschlossen, dass er nie aufhören wollte, seiner Familie Gutes zu erweisen. Das war ein bedingungsloser Bund der Gnade (siehe dazu 1. Samuel 20,14-17).

Mephiboseth erkannte das, denn als er zum ersten Mal vor den König geführt wurde, warf er sich vor David auf die Erde und sagte, dass »ein toter Hund« wie er solche Freundlichkeit gar nicht verdiene.

Es sollte uns nicht schwer fallen, uns selbst in diesem Bild wiederzufinden. Wir sind als rebellierende, sündige Menschen geboren worden, die schon von Anfang an unter dem Todesurteil stehen. Wir wurden von der Sünde moralisch verbogen und gelähmt. Auch wir wohnten in einem Land, das »keine Weide« hatte, wir waren geistlich verhungert. Und wir waren nicht nur verurteilt, hilflos und verarmt, sondern auch weit weg von Gott, ohne Christus und ohne Hoffnung. Es war nichts an uns, was Gottes Liebe und Freundlichkeit hätte auf sich ziehen können.

Und doch suchte Gott nach uns, Er fand uns, erlöste uns von der Angst vor dem Tod, segnete uns mit allen geistlichen Segnungen in den himmlischen Örtern, führte uns an Seinen festlichen Tisch und erhob das Banner Seiner Liebe über uns. Und warum tat Er das alles? Er tat es um Jesu Christi willen. Und es geschah wegen Seines Gnadenbundes, unter dem er uns in Christus schon auserwählt hatte vor Grundlegung der Welt.

Unsere einzig richtige Antwort darauf ist, uns vor Ihm niederzuwerfen und zu sagen: »Was ist Dein Knecht, dass Du Dich einem toten Hund zugewandt hast, wie ich einer bin?«