December

பாவத்திற்கு வழங்கும் மறுபெயர்கள்

December 18

“Woe unto them that call evil good, and good evil; that put darkness for light, and light for darkness; that put bitter for sweet, and sweet for bitter.” (Isa. 5:20)

God pronounces a woe on those who reverse moral standards, making sin respectable and suggesting that purity is something less than desirable. Herbert Vander Lugt cited three contemporary illustrations of how men tamper with moral distinctions. “First, I read an article which treated lightly the bad results of pornography, but deplored the ‘puritanical attitude of religionists.’ Second, I came across a newspaper account that told about a group of concerned parents who were trying to get an unmarried pregnant teacher removed from her job. The writer portrayed her as a beautiful person, while the moms and dads were made out to be villains. And third, I watched as a guest on a television program defended the hard rock, the drunkenness, and the use of drugs connected with a concert in which several young people were killed. He blamed our social problems on individuals who don’t like these kinds of gatherings.”

I would suggest two reasons why we are witnessing an increasing wave of moral reversals. First of all, people have abandoned the standards of absolutes that are found in the Bible. Now morality is a matter of one’s own interpretation. Secondly, the more that people indulge in sin, the more they feel that they must rationalize the sin as justifiable behavior and thus vindicate themselves.

Some who find it hard to justify sin resort instead to ad hominem arguments, that is, they attack the opponent’s character rather than answer his contentions. Thus, in the illustrations cited above, the libertarians attacked the “puritanical attitude of religionists,” they made out moms and dads as villains, and they blamed social problems on people who speak out against drunkenness, drugs and a rock concert in which several young people were killed.

In addition to those who reverse moral distinctions, there are those who satisfy themselves with blurring them. Unfortunately a large number of these are religious leaders. Instead of coming out squarely on the side of the Bible and calling sins by their right names, they pussyfoot around, implying that they’re really not that bad after all. Drunkenness is a sickness. Perversion is an alternate life style. Sex outside of marriage is allowable if it is culturally acceptable. Abortions, public nudity and prostitution are personal rights that should not be abridged.

Such confused thinking betrays a serious lack of moral intelligence. These perverse arguments are lies of the devil that eventually drown men in perdition.

டிசம்பர் 18

தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்றும் சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! ஏசாயா 5:20.

பாவத்திற்கு வழங்கும் மறுபெயர்கள்

பாவத்தை மதிப்பிற்குரியதாகவும், தூய்மை அவ்வளவு விரும்பத்தக்கது அல்ல என்றும் கருதச்செய்து ஒழுக்கப் பண்பின் தகுதியை முன்னுக்குப் பின்னாக முரண்பாடாக்கிறவர்களுக்கு எதிராக, இங்கே தேவன் சாபத்தைக் கூறியிருக்கிறார். தனது வாழ்நாளின்போது நடந்த மூன்று நிகழ்ச்சிகளைக் கூறி, மனிதன் எவ்வாறு நன்னெறி சார்ந்த மேன்மைகளை முறைகேடாக மாற்றியமைத்திருக்கிறான் என்பதை ஹெப்பர்ட் வேன்டர் லக்ட் என்பார் விளக்கியுள்ளார். ‘முதலாவதாக, கீழ்தரமான படங்களைப் பார்ப்பதில் உண்டாகும் கெட்ட விளைவுகளை அற்பமாக பாவித்து, பரிசுத்த வாழ்வை வலியுறுத்திக் கூறும் சமயச் சார்பை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வாசித்தேன். இரண்டாவதாக, திருமணமாகாத ஒரு ஆசிரியை பற்றி செய்தித்தாளில் வெளியாகியிருந்த ஒரு நிகழ்ச்சியாகும். அவளை வேலை பார்க்கும் பள்ளியிலிருந்து நீக்கும்படி முயற்சி செய்த மாணவிகளின் பெற்றோர்களைப் பற்றியதாகும் அந்தக் கதை. அதன் எழுத்தாளர் அந்த ஆசிரியை மிகவும் நேர்த்தியானவள் என்று புகழ்ந்தும், அவளை எதிர்த்துப் போராடிய பெற்றோர்கள் வன்முறையாளர்கள் என்று விமர்சித்தார். மூன்றாவதாக, ஒரு தொலைக்காட்சியை காண விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். குடிபோதையிலும் போதைமருந்துகளிலும் அகப்பட்டுக்கொண்டு பல வாலிபர்கள் குலுக்கி நடனமாடும் ஒரு நிகழ்ச்சியின்போது விபத்தின் காரணமாகக் கொலையுண்டனர். இப்படிப்பட்ட கூட்டங்களை விரும்பாதவர்களால் ஏற்பட்ட சமுதாயப் பிரச்சனையின் விளைவே அதற்குக் காரணம் என்னும் கருத்தை அத்தொலைக்காட்சியைத் தயாரித்தவர் அதில் வெளிப்படுத்தியிருந்தார்.

ஒழுக்கப் பண்பினைப்பற்றிய முரண்பாடான கருத்துக்கள் இன்றைய நாட்களில் அலைபோல எழுவதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல நான் முற்படுகிறேன். முதலாவதாக, வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள நிறைவான, மேன்மையான ஒழுக்கத்தின் தரத்தை மனிதர்கள் புறக்கணித்துவிட்டனர். இப்பொழுது ஒவ்வொருவரும் அவரவருடைய விருப்பதற்கு ஏற்ப ஒழுக்கத்தின் கூறுகளுக்குப் பொருள் கூறிக்கொள்கின்றனர். இரண்டாவதாக, மனிதர்கள் அதிகமாகப் பாவத்தில் ஈடுபடுகின்ற காரணத்தினால், பாவமுடைய நடத்தையை நியாயப்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றனர். அதற்காக பாவச் செயல்களுக்கு விளக்கம் கொடுத்து அதுவே பகுத்தறிவு என்று சொல்லித் தங்களைக் குற்றமற்றவர்கள் எனக் காட்டிக்கொள்கின்றனர்.

தங்களுடைய பாவத்தை நியாயப்படுத்தக் கூடாதவர்கள், எதிரிராளியின் நடத்தையைக் குற்றப்படுத்தி பேசுகின்றனர். மேற்கூறிய எடுத்துக்காட்டுக்களில், தன்னிச்சையின்படி வாழச் சுதந்திரம் உண்டு என்று வாதிடுவோர், “பரிசுத்தமாய் வாழவேண்டும் என்னும் சமயத்தாரைத் தாக்குகின்றனர். சீரிய எண்ணம் கொண்ட பெற்றோர்களை வன்முறையாளர் என்று சித்தரிக்கின்றனர். குடிபோதையையும், போதைமருந்துகளையும், குலுக்கி ஆடும் நடன நிகழ்ச்சிகளையும் எதிர்ப்போரை சமுதாயத்தில் பிரச்சனையை எழுப்புகிறவர்கள் என்று குற்றம் சுமத்துகின்றனர்.

நன்னெறி சார்ந்த பண்புகளை மாற்றி அமைக்க விரும்புகிறவர்களுக்கு உடந்தையாக, அவற்றைக் குறித்துத் தெளிவற்ற எண்ணம்கொண்ட ஏனையோரும் செயல்புரிகின்றனர். அவ்வாறு தெளிவற்ற விளக்கம் கொடுத்து அவர்கள் தங்களையே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர். இப்படிப்பட்டோரில் பெரும்பாலோர் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் என்பது சோகக் கதையாகும். வெளிப்படையாக வேதத்தை ஆதரித்து, பாவத்தை அதன் பெயர் சொல்லி அழைத்து அதனைக் கண்டிப்பதற்கு மாறாக, சுற்றி வளைத்துப் பேசி பாவம் அவ்வளவு கெட்டதல்ல என்று நினைக்கும்படி நடந்துகொள்கின்றனர். மது அருந்துவதை நோய் என்று அழைக்கின்றனர். நெறிபிறழ்ந்த இனச் சேர்க்கையை தாம்பத்ய வாழ்க்கைக்கு மாற்று என்று வர்ணிக்கின்றனர். சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் என்றால் திருமணம் ஆகாமலேயே கூடிவாழலாம் எனக் கூறுகின்றனர். கருச்சிதைவு, பொது இடங்களில் ஆடை அணியாமல் திரிவது, விபச்சாரம் ஆகியவை தனிப்பட்டவர்களது சுதந்திரம் என்றும் அதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமையில்லை என்றும் வாதிடுகின்றனர்.

இப்படிப்பட்ட குழப்பமான எண்ணங்கள் நன்னெறி அறிவைக் கெடுத்து விடுகின்றனர். இவ்வகை விபரீதமான வாக்குவாதங்கள் பிசாசின் தந்திரங்களாகும். இவற்றால் மனிதன் அழிவுக்குள் தள்ளப்படுகிறான். அதுவே அவனுடைய முடிவு.

18. Dezember

»Wehe denen, die das Böse gut nennen und das Gute böse, die Finsternis zu Licht machen und Licht zu Finsternis; die Bitteres zu Süßem machen und Süßes zu Bitterem!« Jesaja 5,20

Gott spricht hier ein »Wehe« über denen aus, die moralische Grundsätze auf den Kopf stellen, die die Sünde ehrbar machen und meinen, dass Reinheit etwas wenig Wünschenswertes sei. H. Vander Lugt hat drei zeitgenössische Beispiele dafür zitiert, wie die Menschen heute moralische Grenzen missachten oder unbekümmert verändern: »Zuerst habe ich einen Artikel gelesen, der einerseits die schlimmen Ergebnisse der Pornographie auf die leichte Schulter nahm, aber die ›puritanische Haltung der Frommen und Religiösen‹ bitter beklagte. Als Zweites fand ich einen
Zeitungsbericht, der von einer Gruppe besorgter Eltern sprach, die darauf drängten, dass eine unverheiratete schwangere Lehrerin aus ihrer Stelle entlassen würde. Der Autor des Artikels beschrieb sie als eine hübsche Person, während die Väter und Mütter als rechte Bösewichte dargestellt wurden. Und drittens sah ich, wie bei einer Fernseh-Talkshow ein Gast harte Rockmusik, Trunksucht und den Gebrauch von Drogen verteidigte im Zusammenhang mit einem Konzert, bei dem mehrere junge Leute umgekommen waren. Er schob die Schuld an unseren sozialen Problemen den Menschen zu, die solche Art von Veranstaltungen grundsätzlich nicht mögen.«

Ich sehe zwei Gründe für diese erschreckende Entwicklung. Zuerst einmal haben die Menschen die Grundsätze und absoluten Werte verlassen, die man in der Bibel findet. Heute ist Moral eine Sache der eigenen persönlichen Interpretation. Und zweitens: Je mehr diese Leute der Sünde nachgeben, desto mehr haben sie das Gefühl, dass sie ihre Sünde als ein rechtmäßiges Verhalten hinstellen und sich selbst verteidigen müssen. Andere, die es schwierig finden, Sünde direkt zu rechtfertigen, nehmen stattdessen ihre Zuflucht zu persönlichen Angriffen, das heißt, sie machen den Charakter ihres Gegners schlecht, anstatt auf seine im Streit geäußerte Meinung einzugehen. So wird es in den oben genannten Beispielen ja auch dargestellt: Die Vertreter der liberalen Moral greifen die »puritanische Haltung der Frommen« an, sie stellen die besorgten Mütter und Väter als Bösewichte dar, und sie schieben die Schuld an sozialen Problemen den Leuten in die Schuhe, die sich gegen Trunkenheit, Drogen und ein Konzert aussprechen, bei dem mehrere junge Leute getötet wurden.

Zu denen, die moralische Grenzen einfach umstoßen wollen, kommen noch diejenigen, die sich damit zufrieden geben, die Unterschiede zu verwischen und unkenntlich zu machen. Leider sind auch viele von ihnen führende Leute in den Kirchen. Anstatt sich deutlich auf die Seite der Bibel zu stellen und Sünden beim Namen zu nennen, schleichen sie wie die Katze um den heißen Brei und geben damit zu verstehen, dass solches Verhalten eigentlich letzten Endes gar nicht schlecht zu nennen sei. Nach ihren Worten ist Trunksucht eine Krankheit. Sexuelle Perversion ist nur ein
anderer Lebensstil. Geschlechtsverkehr außerhalb der Ehe ist erlaubt, wenn er von der umgebenden Kultur akzeptiert wird. Abtreibung, Nacktheit in der Öffentlichkeit und Prostitution sind persönliche Rechte jedes Menschen, die nicht eingeschränkt werden dürfen. Solch ein verwirrtes Denken zeigt, dass es hier bedrohlich an moralischer Einsicht fehlt. Und solche verdrehten Argumente sind Lügen des Teufels, der die Menschen schließlich ins endgültige Verderben zieht.