August

ஆணையில் உறுதி

August 27

“Lord, who shall abide in thy tabernacle? Who shall dwell in thy holy hill?…He that sweareth to his own hurt, and changeth not.” (Psa. 15:1, 4)

In Psalm 15, David is describing the person who is qualified to be a companion of the Great God. One of the aspects of this man’s character is that he stands by his word, even at great personal cost to himself. If he makes a promise or a commitment, he remains faithful to it.

Here, for example, is a Christian who is selling his house. A buyer comes along and agrees to pay the asking price. The seller agrees to the deal. Before any papers are signed, someone else offers $5,000 more for the house. Legally, perhaps, the seller can reject the first offer and thus make $5,000 more on the transaction. But morally he is obligated to be true to his spoken word. His testimony as a dependable Christian is at stake.

Or here is a believer who has an infected wisdom tooth. His dentist refers him to an oral surgeon who treats the tooth with an antibiotic, then makes an appointment for the extraction. After witnessing to the surgeon, the Christian leaves the office. On the way home he meets a friend who tells him where he can get the extraction done for half the amount. No doubt he could pay the surgeon for the work already done, then go to the other dentist. But should he?

Sue has just accepted a supper invitation from an older couple. Then the phone rings and she is invited to a pot-luck supper with a group of young people her own age. She is between a rock and a hard place. She doesn’t want to disappoint the older couple, yet she desperately wants to be with the young people.

The decision is often most difficult when large amounts of money are at stake. But no amount of money should induce us to break a promise, to go back on a commitment, to discredit our Christian testimony and to bring dishonor on the Name of the Lord. No matter what the cost may be, we must disprove Voltaire’s snide remark that “when it comes to money, all men are of the same religion.”

The man of God “always does what he promises, no matter how much it may cost” (TEV); he “keeps a promise even if it ruins him” (LB).

ஆகஸ்டு 27

கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். சங்.15:1,4.

ஆணையில் உறுதி

மேன்மைதாங்கிய தேவனின் உடன்தோழனாக விளங்குவதற்குத் தகுதிபெற்றவன் யார் என்பதை 15வது சங்கீதத்தில் தாவீது விளக்கமாகத் தந்திருக்கிறான். அவனுடைய குண நலங்களில் ஒன்று, அவன் சொல் தவறாதவன் என்பதாகும். அவனுக்குப் பெரும் இழப்பு ஏற்படினும் தனது சொல் தவறாதிருக்கிறான். வாக்குறுதி ஒன்றினை அவன் வழங்குவானாயின், அதற்கு உண்மையுள்ளவனாகத் தொடர்ந்து காணப்படுவான்.

ஒரு எடுத்துக் காட்டினைக் காணலாம். கிறிஸ்தவர் ஒருவர் தனது வீட்டினை விற்க விரும்புகிறார். சொன்ன விலைக்கு வாங்குவதற்கு ஒருவர் முன்வருகிறார். வாங்குபவரும் விற்பவரும் அந்த விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கின்றனர். எழுத்தின் மூலமாக அதை உறுதிசெய்வதற்கு முன்னர், வேறொருவர் அந்த வீட்டிற்குக் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறுகிறார். சட்டப்படி அந்த வீட்டை முதல் நபருக்கு விற்காமல், இரண்டாவது நபருக்கு விற்று மிகுதியான பணத்தை ஈட்டலாம். ஆனால் தான் உரைத்த சொற்களுக்கு அவர் உண்மையுள்ளவராக இருப்பதே நன்னெறியாகும். அக் கிறிஸ்தவனின் சாட்சிக்கு இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது.

வேறொரு கிறிஸ்தவர் பல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெறப் போயிருக்கிறார். சில மருந்துகளைக் கொடுத்த மருத்துவர் குறிப்பிட்ட சிகிட்சை அளிக்கும்படி ஒரு நாளைக் குறிக்கிறார். அந்த மருத்துவரிடம் கிறிஸ்துவைப் பற்றிச் சான்றளிக்கவும், கிறிஸ்தவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. திரும்பும் வழியில் தனது நண்பனைச் சந்தித்தார். அந்நண்பர் வேறொரு பல் மருத்துவரைத் தனக்குத் தெரியுமென்றும் அவர் அதே சிகிட்சையைப் பாதித் தொகைக்கு அளிப்பார் என்றும் கூறுகிறார். தனது நண்பருடைய ஆலோசனையின்படி புதிய மருத்துவரைக் கண்டு சிகிச்சை பெறுவதில் தவறில்லையெனினும், அக்கிறிஸ்தவர் அவ்வாறு செய்யலாமா?

வயது முதிர்ந்த தம்பதி, ஒரு இளைஞனை இரவு விருந்துக்கு அழைத்திருந்தனர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான். சிறிது நேரத்தில் தொலைபேசி ஒலித்தது. அவனுடைய நண்பர்கள் அனைவரும் அதே இரவில், பெரிய விருந்துச்சாலை ஒன்றில் கூடி உண்டு மகிழ முடிவு செய்திருந்தனர். அந்த இளைஞனுக்கு பெருங்குழப்பம். வயது முதிர்ந்த தம்பதியை அவன் ஏமாற்ற விரும்பவில்லை. அந்த இளைஞனோடு சேர்ந்து விருந்துண்டு மகிழவும் மிகுந்த விருப்பம் கொண்டான்.

ஏற்படக்கூடிய இழப்பு மிகப்பெரிய தொகையாக இருந்தால் முடிவெடுப்பது மிகவும் கடினமாகும். எவ்வளவு பெரிய தொகையாக இருப்பினும், நாம் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது. நமது கிறிஸ்தவச் சாட்சிக்குப் பங்கம் வரும்படி நடப்போமென்றால் கர்த்தருடைய திருப்பெயருக்கு அது களங்கத்தை ஏற்படுத்திவிடும். ‘பணம் என்றால் எல்லா மதங்களும் ஒன்றுதான்” என்று தரக்குறைவாக வோல்ட்டேர் என்பவர் கூறியுள்ளதை தவறென்று நாம் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக எவ்வளவு விலை கொடுத்தாகிலும் தேவனுடைய மனிதன் தான் கொடுத்த வாக்குறுதியை எப்பொழுதும் நிறைவேற்றுகிறவனாக இருக்கிறான். அவனுடைய அழிவிற்கு அது காரணமாக இருப்பினும் அவன் தன்னுடைய வாக்குறுதியைக் காத்துக்கொள்கிறான்.

27. August

»Herr, wer darf in deinem Zelt weilen? Wer darf wohnen auf deinem heiligen Berg?… der, hat er zum Schaden geschworen, es nicht ändert.« Psalm 15.1.4

In Psalm 15 beschreibt David eine Person, die qualifiziert ist, Gemeinschaft mit dem großen Gott zu haben. Einer der Charakterzüge dieses Mannes ist, dass er zu seinem Wort steht, auch wenn es ihn persönlich viel kostet. Wenn er ein Versprechen oder eine Zusage gibt, dann hält er beides um jeden Preis ein.

Da ist zum Beispiel ein Christ, der sein Haus verkauft. Ein Käufer kommt vorbei und ist bereit, den geforderten Preis zu bezahlen. Der Verkäufer stimmt dem Handel zu. Bevor aber die Papiere unterzeichnet sind, bietet jemand anders 10000 Euro mehr für das Haus. Der Verkäufer kann nun vielleicht juristisch das erste Angebot fallen lassen und so 10000 Euro mehr bei dem Handel verdienen. Aber moralisch ist er seinem gesprochenen Wort verpflichtet. Sein Zeugnis als vertrauenswürdiger Christ steht auf dem Spiel.

Oder ein Gläubiger hat einen entzündeten Weisheitszahn. Sein Zahnarzt verweist ihn an einen Kieferchirurgen, der den Zahn mit einem Antibiotikum behandelt und dann einen Termin für das Ziehen ausmacht. Nachdem der Christ dem Chirurgen Zeugnis gegeben hat, verlässt er die Praxis. Auf dem Weg nach Hause trifft er einen Bekannten, der ihm eine Adresse gibt, wo er sich den Zahn zum halben Preis ziehen lassen kann. Natürlich könnte er den Chirurgen für den bereits geleisteten Teil der Behandlung bezahlen und dann zu dem anderen gehen. Aber sollte er das wirklich?

Susanne hat gerade einer Einladung zum Abendessen bei einem älteren Ehepaar zugesagt. Dann klingelt das Telefon, und sie wird zum Fondue bei einer Gruppe von jungen Leuten eingeladen. Sie steckt nun in einer richtigen Zwickmühle. Einerseits will sie das ältere Ehepaar nicht enttäuschen, andererseits möchte sie unbedingt mit ihren Altersgenossen zusammen sein.

Die Entscheidung ist oft am schwierigsten, wenn es um große Geldsummen geht. Aber kein Geldbetrag, wie hoch auch immer, sollte uns dazu verführen, ein Versprechen zu brechen, eine Zusage zurückzunehmen und dadurch unser Zeugnis als Christen zu diskreditieren und den Namen des Herrn zu verunehren. Egal was es kostet, wir müssen unbedingt Voltaires zynische Bemerkung widerlegen: »Wenn es um Geld geht, haben alle Menschen die gleiche Religion.«

Der Mensch Gottes »tut immer, was er verspricht, gleichgültig, wie viel es ihn kostet «; er »hält sein Versprechen, selbst wenn es ihn ruiniert«.