August

வேதப்புரட்டன்

August 12

“A man that is a heretic, after the first and-second admonition, reject; knowing that he that is such is subverted, and sinneth, being condemned of himself.” (Titus 3:10, 11.)

When we think of a heretic, we usually think of someone who holds and propagates views that are contrary to the great fundamental truths of the faith. We think of men like Arius, Montanus, Marcion and Pelagius who lived in the second and third centuries AD.

I do not propose to reject that definition of heretic but to broaden it. A heretic, in the New Testament sense, also includes anyone who obstinately promotes a teaching, even of secondary importance; that causes division in the church. He may be true to the fundamentals and yet push some other teaching that causes strife because it differs from the accepted belief of the fellowship he is in.

Most modern translations read “factious man” instead of “heretic.” A factious man is stubbornly determined to ride his doctrinal hobbyhorse even if it will cause a split in the church. His conversation inevitably reverts to this pet subject. No matter where he turns in the Bible, he thinks he finds support for his view. He cannot minister the Word publicly without introducing it. He is a Johnny-one-note. He has only one string on his violin, and plays only one note on that string.

His behavior is utterly perverse. He completely disregards the thousand and one teachings in the Bible that would build up the saints in their faith, and majors on one or two deviant doctrines that serve only to create a schism. It may be that he harps on some particular aspect of prophecy. Or he may overemphasize a gift of the Spirit. Or his obsession may be with the five points of Calvinism.

When the church leaders warn him against pursuing his selfwilled crusade, he is unrepentant. He insists that he would not be faithful to the Lord if he did not teach these things. He will not be silenced. He has a “super-spiritual” answer for every argument that is used against him. The fact that he is creating strife and division in the church does not deter him in the least. He seems unmoved by the divine decree, “If any man destroys the temple of God, God will destroy him” (1 Cor. 3:17 NASB).

The Scripture says that this person is subverted, is sinning, and is self-condemned. He is subverted in the sense that he has a “moral twist” (Phillips), a “distorted mind” (NEB), is “warped” (NIV). He is sinning because the Bible condemns such behavior. And he knows it, in spite of his pious protestations. After two warnings the fellowship should shun him, hoping by this social ostracism to cause him to abandon his factiousness.

ஆகஸ்டு 12

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத் தீர்ப்புடையவனாய்ப் பாவம் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே. தீத்து 3:10-11

வேதப்புரட்டன்

வேதப்புரட்டர்களைக் குறித்துநாம் சிந்திக்கும் வேளையில், பொதுவாக விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்களுக்கு மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருப்போரையும், அக்கருத்துக்களைப் பறைசாற்றுவோரையுமே, நினைவு கூருகிறோம். இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரியு, மோன்டானஸ், மார்சியோன், பெலஜியஸ், போன்றோரைப் பற்றியே சிந்திக்கிறோம்.

வேதப்புரட்டர்கள் என்னும் சொல்லுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருளை நான் நிராகரிக்கவில்லை. அதற்கு மாறாக அதன் பொருளை விரிவாக்கம் செய்யவே விரும்புகிறேன். சபையில் பிரிவினையை உண்டாக்கக் கூடிய முக்கியமற்ற உபதேசத்தை ஆதரித்துப் பிடிவாதமாகப் போதிக்கும் ஒருவர் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில், வேதப்புரட்டரே ஆவார். அடிப்படைச் சத்தியங்களுக்கு அவர் உண்மையுள்ளவராக இருக்கலாம், ஆனாலும், தான் ஐக்கியம் கொண்டிருக்கும் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கருத்திற்கு மாறுபட்ட கருத்தைப் போதித்து சபையில் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்கிறார்.

சில ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் “வேதப்புரட்டர்” என்னும் சொல்லுக்குப் பதிலாக “தனி நோக்கம் கொண்ட போலியான மனிதன்” என்னும் சொல் கையாளப்பட்டிருக்கிறது. போலியான மனிதன் தனது கருத்தையே வலியுறுத்த விரும்புகிறான், சபையில் உண்டாகும் பிரிவினையைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. எந்தவொரு பொருளைக் குறித்து விசுவாசிகள் உரையாடினாலும், அந்த மனிதன் தனக்குப் பிடித்தமான பொருளுக்கு அதைத் திசை திருப்பிவிடுகிறான். திருமறையில் எப்பக்கத்தைத் திருப்பினாலும், அவனுடைய கருத்திற்கு அங்கே ஆதரவு இருப்பதாகவே எண்ணுகிறான். தனது சொந்தக் கருத்தை உட்புகுத்தாமல் அவனால் பிரசங்கம் செய்ய முடியாது. அவனுடைய வயலினில் ஒரு நரம்பு மட்டுமே இருக்கிறது. அவன் ஒரு ஸ்வரத்தை மட்டுமே இசைக்கிறான்.

அவனுடைய நடத்தை விபரீதமானதாக இருக்கிறது. பரிசுத்தவான்களை விசுவாசத்தில் ஊன்றிக் கட்டுவதற்குரிய பற்பல உபதேசங்களைத் திருமறையில் காண்கிறோம். அவற்றையெல்லாம் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, ஓரிரு வேற்றுமையான போதகங்களை மட்டும் வலியுறுத்தி, சபையில் பிரிவினையை உண்டுபண்ணுகிறான். தீர்க்கதரிசனத்தின் ஒருபகுதியை மட்டும் மீண்டும் மீண்டும் கூறி, ஆவியின் ஒரு வரத்தை மட்டும் வலியுறுத்திக் கூறுகிறான். அல்லது கால்வினின் ஐங்கோட்பாடுகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான்.

தன்னுடைய நோக்கத்தைக் கைவிடவேண்டும் என்று சபையை வழிநடத்துகிறவர்கள் எச்சரித்தாலும், தனது குற்றத்தை உணர்ந்து அவன் வருந்துகிறதில்லை. அவற்றைப் போதிக்கவில்லையென்றால் தான் கர்த்தருக்கு உண்மையற்ற விதத்தில் நடந்துகொள்வதாகக் கூறுகிறான். அவனை அமைதியாக இருக்கச் செய்ய முடியாது. அவனுக்கு எதிராக சொல்லப்படுகிற ஒவ்வொன்றிற்கும் “ஆவிக்குரிய முதல் தரமான” விடையைத் தருகிறான். சபையில் பூசலையும், பிரிவினையையும், உண்டாக்கிறோமே என்ற எண்ணம் அவனைத் தடை செய்கிறதில்லை என்பதே உண்மை. ‘ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்” என்னும் தெய்வீகக் கட்டளைக்கு அவன் அசைந்து கொடுப்பதில்லை. (1.கொரி:3:17).

இப்படிப்பட்டவர்களை களங்கம் உண்டாக்கிறவர்களென்றும், பாவம் செய்கிறவர்களென்றும், தங்களைத் தாங்களே குற்றப்படுத்திக் கொள்கிறவர்களென்றும், வேதம் வர்ணிக்கிறது. கொள்கையில் வேறுபட்டவர், எண்ணத்தில் சிதைந்து போனவர், மனக்கோட்டமுள்ளவர், என்னும் நிலைகளில் களங்கம் உடையவனாக அவன் இருக்கிறான். இப்படிப்பட்ட நடத்தைகளை வேதம் குற்றப்படுத்துவதால் அவன் பாவம் செய்கிறவனாயிருக்கிறான். இதனை அவன் பயபக்தியோடு மறுத்துரைத்தாலும், அவன் இவற்றை அறிந்திருக்கிறான். சபையிலிருந்து விலக்கி வைக்கப்படுவதினால் அவன் தனது போலியான தன்மையை விட்டொழிப்பான் என்ற நம்பிக்கையில், இரண்டு முறை எச்சரித்தபின் சபை ஐக்கியத்திலிருந்து அவனைப் புறம்பாக்கவேண்டும்.

12. August

»Einen sektiererischen Menschen weise ab nach einer ein- und zweimaligen Zurechtweisung, da du weißt, dass ein solcher verkehrt ist und sündigt, indem er durch sich selbst verurteilt ist.«
Titus 3,10.11

Wenn wir an einen Sektierer denken, dann stellen wir uns meist einen Irrlehrer vor, der den großen fundamentalen Wahrheiten des Glaubens widersprechende Ansichten verbreitet. Wir denken an Männer wie Arius, Montanus, Marcion und Pelagius, die in den ersten Jahrhunderten nach Christus lebten.

Ich will diese Definition eines Sektierers nicht ablehnen, sondern sie lediglich erweitern. Ein Sektierer im Neuen Testament ist auch jemand, der hartnäckig eine Lehre verbreitet – auch wenn sie von sekundärer Bedeutung ist –, die Spaltung in der Gemeinde verursacht. Er bekennt sich vielleicht zu den fundamentalen Glaubenslehren, betont aber immer wieder eine andere Lehre, die Zwiespalt verursacht, weil sie von der allgemeinen Überzeugung der Gemeinschaft abweicht, zu der er gehört.

Ein Sektierer ist hartnäckig entschlossen, sein lehrmäßiges Steckenpferd zu reiten, auch wenn es zu einer Gemeindespaltung führen sollte. Beim Gespräch kommt er unweigerlich immer wieder zu seinem Lieblingsthema zurück. Wo er sich in der Bibel auch hinwendet, überall glaubt er Hinweise für seine Ansicht zu finden. Er kann nicht öffentlich das Wort verkündigen, ohne sie zu erwähnen. Er ist ein richtiger Schmalspuringenieur. Er hat nur eine Saite auf seiner Violine, und darauf spielt er nur eine Note.

Sein Verhalten ist äußerst verdreht. Er missachtet völlig die 1001 Lehren in der Bibel, welche die Heiligen im Glauben auferbauen würden, und hegt und pflegt stattdessen eine oder zwei abweichende Lehren, die nur zu Spaltung führen. Vielleicht betont er einen besonderen Aspekt der Prophetie. Oder er redet andauernd von einer bestimmten Gabe des Geistes. Oder er ist besessen von den »fünf Punkten des Calvinismus «.

Wenn ihn die Ältesten der Gemeinde warnen, seinen eigenwilligen Feldzug nicht weiter fortzusetzen, ist er unbußfertig. Er beharrt darauf, dass er dem Herrn untreu wäre, wenn er diese Dinge nicht lehren würde. Er lässt sich nicht zum Schweigen bringen. Er hat eine »supergeistliche« Antwort auf jedes Argument, das gegen ihn vorgebracht wird. Die Tatsache, dass er in der Gemeinde Zwiespalt und Ärgernis anrichtet, schreckt ihn nicht im Geringsten ab. Er scheint unberührt von der Warnung Gottes: »Wenn jemand den Tempel Gottes verdirbt, den wird Gott verderben« (1.
Korinther 3,17).

Die Schrift sagt, dass ein solcher Mensch verkehrt ist und sündigt und durch sich selbst verurteilt ist. Er ist verkehrt in dem Sinn, dass er ein verzerrtes Denken hat. Er sündigt, weil die Bibel ein solches Verhalten verurteilt. Und er weiß es, trotz seiner frommen Beteuerungen. Nach zwei Warnungen sollte ihn die Gemeinde abweisen in der Hoffnung, dass diese gesellschaftliche Ächtung ihn dazu veranlasst, seine Parteisucht aufzugeben.