கிரேக்கரின் அரசாட்சிக் காலத்தில், இது சீரியாவின்
தலைநகராயிருந்தது. சிலூக்கஸ் நிக்கற்றோர் (Selecus Nicator)
என்பவன் இதை நிலைப்படுத்தி கி.மு. 33ல் தன்னுடைய தகப்பனின் பேரை இதற்குக்
கொடுத்தான். ஒரென்ரீஸ் (Orentes) ஆற்றின் தென் கரையில்
இது கட்டப்பட்டது. யூதரும், வேறு அநேக புறஐhதியாரும் இங்கே இருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் நாட்களின் பின் இங்கே இக்நேசியஸ்
(ஐபயெவரைள) என்பவன் நாற்பது வருடம் அத்தியட்ச குருவாயிருந்தபின்,
இரத்தச்சாட்சியாய் திரேசன் (Trazan) இராயனால்
கொல்லப்பட்டான். கிறிசொஸ்தம் (Chrisostan) என்பவர்
பிறந்ததும் இங்கேயே. எருசலேம் சபையில் பந்தி விசாரணைக்காரராக
தெரிந்துகொள்ளப்பட்ட ஏழுபேரில், நிக்கொலா எனப்பட்டவன் அந்தியோகியாப்
பட்டணத்தான் (அப்.6:5).
ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினால்
சிதறப்பட்டவர்கள் அந்தியோகியா வரைக்கும்போய், இயேசுவைக் குறித்து
பிரசங்கித்தபோது அநேகர் விசுவாசிகளானார்கள். எருசலேமிலுள்ள சபையார் இதைக்
கேள்விப்பட்டு பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள். அவன்போய்ப்
பார்த்தபின், சவுலைத் தேடும்படி தர்சுவுக்குப்போய் அவனை அழைத்துவந்து, இருவரும்
ஒரு வருஷகாலமாய் உபதேசம் பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவில்
சீசர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் வழங்கிற்று (அப்.11:19-26).
அந்நாட்களில் அகபு என்னப்பட்ட தீர்க்கதரிசி
அந்தியோகியாவுக்கு வந்து, உலகமெங்கும் கொடி பஞ்சம் உண்டாகுமென்று ஆவியானவராலே
அறிவித்தான். அப்பொழுது சீஷர்கள் பணம் சேகரித்து, யூதேயாவிலிருந்த சகோதரருக்கு
பர்னபா, சவுல் என்பவர்களுடைய கையில் கொடுத்து அனுப்பினார்கள் (அப்.11:2-7,30).
அந்தியோகியாப் பட்டணத்தில் சபை கூடியிருந்த வேளையில்
பர்னபா, சவுலும், பரிசுத்தஆவியினாலே தேவஊழியத்துக்காகப்
பிரித்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டு சின்ன ஆசியா எங்கும் திரிந்து,
சுவிசேஷத்தைப் பிரசங்கித்த பின், திரும்பவும் அந்தியோகியாவுக்கு வந்து நடந்த
சங்கதிகளை அறிவித்தார்கள் (அப்.13:11-12, 14:26-27).
சில யூதேயாக் கிறிஸ்தவர்கள் அந்தியோகியாவுக்கு
வந்து, சகோதரர் விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டார்களென்று
போதகம்பண்ணினதினிமித்தம் வாக்குவாதம் உண்டாகி, இந்த விஷயத்தைத்
தீர்த்துக்கொள்ளும்படி, பவுலும், பர்னபாவும் வேறு ஆட்களோடுகூட எருசலேமுக்குப்
போனார்கள். அங்கே செய்த தீர்மானத்தை எழுதி எடுத்துக்கொண்டு, அந்தியோகியாவுக்கு
வந்து, சபைக்கு ஒப்புக்கொடுத்தார்கள் (அப்.15:1-30).
பவுல் தன்னுடைய இரண்டாம், மூன்றாம் சுவிசேஷ
பிரயாணங்களை அந்தியோகியாவிலிருந்து துவங்கினான் (அப்.18:22-23).
ஒரு தடவை பவுல் அந்தியோகியாவில் சந்தித்த வேளையில்,
பேதுரு புறஐhதியருடன் சாப்பிடாத விஷயத்தில் பவுல் அவனில் குற்றம்பிடித்தான்
(கலா.2:11).
புறஐhதியாரின் தாய்ச்சபை அந்தியோகியாவிலிருந்தது.
2. பிசீதியா அந்தியோகியா:
இது சின்ன ஆசியாவிலுள்ள பிரிகியாவுக்குச் சேர்ந்தது.
இதுவும் சிலூகஸ் நிக்கேற்றர் என்பவனால் கட்டப்பட்டது.
இங்கே யூதருடைய nஐபஆலயமிருந்தது. பவுல் அங்கே இரண்டு
ஒய்வுநாளில் பிரசங்கித்தவேளையில் , சில யூதர் விசுவாசிகளானார்கள். வேறு சிலர்
விரோதிகளானார்கள். இவர்கள் பக்தியும், கனமுமுள்ள ஸ்திரிகளையுமும்,
முதலாளிகளையும் எடுத்துவிட்டு அப்போஸ்தலரைத் துன்பபப்படுத்தி, பட்டணத்தைவிட்டு
துரத்திவிட்டார்கள் (அப்.13:14-50).
இவ்விடமிருந்து சில யூதர் லீஸ்திராவுக்குப்போய்
பவுலைக் கல்லெறிந்தார்கள் (அப்.14:19).
பவுல் அந்தியோகியாவுக்குத் திரும்பப்போய் சீஷரைத்
திடப்படுத்தி, புத்தி சொன்னான் (அப்.14:21).
அந்தியோகியாவில் தனக்குண்டான பாடுகளைப்பற்றி, பவுல்
தீமோத்தேயுவுக்கு எழுதினான் (2.தீமோ.3:11).
இப்பொழுது இந்தப் பட்டணம் துருக்கி
தேசத்துக்குரியது.