அந்திரேயா (Andrew)

(தைரியன்)



கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா ஊரிலிருந்த ஒரு மீன்பிடிப்பவன். யோவான் ஸ்நானனின் சீஷனாயிருந்து, பின் அப்போஸ்தலரில் ஒருவனானான். பேதுரு இவனுடைய சகோதரன்.

யோவான் ஸ்நானன் இயேசுவைப் பார்த்து, இதோ, தேவாட்டுக்குட்டி என்று சொன்னதைக் கேட்டு இவன் அவருக்குப் பின் சென்றான். பின்பு தனது சகோதரன் பேதுருவை அழைத்துக்கொண்டு அவரிடம் வந்தான் (யோ.1:40-41).

பின்பு சீமோனும் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கையில் இயேசு தம்மைப் பின்பற்றி வரும்படி அவர்களுக்குச் சொன்னவுடனே, அவருக்குப் பின் சென்றார்கள் (மத். 4:18-20).

பின்பு சீமோனும் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கையில் இயேசு தம்மைப் பின்பற்றி வரும்படி அவர்களுக்குச் சொன்னவுடனே, அவருக்குப் பின் சென்றார்கள் (மத்.4:18-20).

ஐயாயிரம் பேரைப் போஷித்த வேளையில், ஒரு பையன் கையில் ஐந்து அப்பங்களிலிருக்கிறதைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னவன் இவனே (யோ.6:8-9).

சில கிரேக்கர் இயேசுவைச் சந்திக்கவந்த செய்தியையும் இவன் அவருக்கு அறிவித்தான் (யோ.12:21-22).

கடைசி காலத்தில் எருசலேம் மேல் வரப்போகிற தேவதீர்ப்பைப்பற்றி இயேசுவினிடம் வினாவினவர்களில் ஒருவன் இவன் (மாற்.13:3-4).

இயேசு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபின் எருசலேமில் ஜெபத்தில் தரித்திருந்தவர்களுக்குள் இவனும் இருந்தான் (அப்.1:13).

பிற்காலங்களில் இவன் கிரேக்கு தேசத்திலும், ஆசியாவிலும், சுவிசேசத்தைப் பிரசங்கித்து, அகாயாவில் சிலுவையிலறையுண்டு மரித்தான் என்று சொல்லப்படுகிறது.

சுயதேசத்திலும் பிற தேசத்திலும், இவனே முதல் சுவிஷேகன் என்று சொல்லத்தகும் (யோ.1:42, 12:21).