அத்ரமலேக்கு (Adrammelech)

 (இராஜாவின் மேன்மை)



1. ஒரு தேவியின் பெயர். அசீரிய ராஜா செப்பர்வியரையும், செப்பாவாமியரையும் கொண்டுவந்து, சமாரியாவில் குடியேற்றினான். அவர்கள் தங்கள் தேவர்களாகிய, அத்ரமலேக்கையும், அன்னமலேக்கையும் கொண்டுவந்து, அவைகளைச் சேவித்து, பிள்ளைகளையும் தகனபலி கொடுத்தார்கள் (2.இராஜா.17:31). யூதரும் இவைகளை வணங்கினதாகத் தெரிகிறது.


2. சனகெரிப் என்பவனின் இரண்டு குமாரர் அவனை நினிவேயிலிருந்த ஒரு கோயிலில் வெட்டிக்கொன்றார்கள். அவர்களில் ஒருவனுடைய பேர் அத்ரமலேக்கு (2.இராஜா.19:37, ஏசா.37:38).