அத்தாலியாள் (Athaliah)

(கர்த்தர் மேன்மையடைகிறார்)

1. இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாப், யோசபேல் என்பவர்களின் மகள். யூதா இராஜாவாகிய யோராம் இவளை விவாகம் செய்தான் (2.இராஜா.8:18, 2.நாளா.21:6). இவளுடைய தாயாகிய யோசபேலிலிருந்த பெனிக்கேயாளின் குணக்குறிகள் இவளிலும் காணப்பட்டது.
யோராம் மரிக்கும்போது அவனுடைய குமாரன் அகசியா இராஜாவானான். ஒரு வருசத்தில் யெகூ அகசியாவைக் கொன்றுபோட்டான்.
அப்பொழுது அத்தாலியாள் இராஐவம்சத்தாராகிய தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றுபோட்டு, தானே இராஜ்ய பாரத்தை எடுத்துக்கொண்டாள் (2.நாளா.22.10). யோராமின் குமாரர் கொல்லப்பட்டபோது, அவனுடைய இளைய மகனாகிய யோவாசை, யோராமின் சகோதரியாகிய யோசேபியாத் தப்பவைத்தாள் (2.நாளா.22:11).
அந்தப் பொல்லாத ஸ்திரி என்று வேதாகமத்தில் சொல்லி இருப்பதே இந்த அத்தாலியாளின் ஞாபகக்குறி (2.நாளா.24:7).


2. அத்தாலியாள் என்ற பெயர் 1.நாளா.8:26 லும், எஸ்றா 8:7 லும் காணப்படுகிறது.