அதோனியா (Adoniyah)

(கர்த்தர் என் கர்த்தர்)


1. எபிரோனில் ஆகித் என்பவள் பெற்ற தாவீதின் நான்காம் மகன் (2.சாமு.3:2-4).

தாவீது வியாதிப்பட்டிருந்தவேளையில் அதோனியா இராஜாவாக வர எத்தனித்து, யோவாப், அபியத்தார் என்பவர்களைச் சேர்த்துக்கொண்டான். ஆனால் சாதோக்கும், நாத்தானும் அவனுக்கு விரோதமாயிருந்தார்கள் (1.இராஜா.1:5-10).

பின்பு சாலோமோன் இராஜாவானபின், இவன் பயந்து ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்தபொழுது, சாலொமோன் அவனை வரவழைத்து விடுதலைபண்ணினான் (1.இராஜா.1:50-53).

அதன்பின் அதோனியா அபிசாக்கைத் தனக்கு மனைவியாக்கிக்கொள்ள முயன்றபோது, அவன் இராஜ்யத்தையும் நோக்குவானென்று எண்ணி, சாலொமோன் அவனைக் கொல்லுவித்தான் (1.இராஜா.2:13-25).

2. ஐனங்களுக்குப் போதனை செய்த ஒரு லேவியன் (2.நாளா.17:8).

3. நெகேமியாவோடு கூட உடன்படிக்கைக்கு முத்திரைபோட்டவர்களில் ஒருவன் (நெகே.10:16).