அதோனீராம் (Adoniram)

(கர்த்தர் மேன்மையடைந்தார்)


இவனுடைய பெயர் அதோராம் என்றும் குறித்துள்ளது (2.சாமு.20:24, 1.இராஐh.12:18). இவன் தாவீது, சாலோமோன், ரெகொபெயாம் என்பவர்களின் பகுதி விசாரிப்புக்காரன் (2.சாமு.20:24, 1.இராஐh.4:6). ரெகொபெயாம் பகுதிகள் வாங்கும்படி இவனை அனுப்பினபோது இஸ்ரவேலர் கலகம் பண்ணி, இவனைக் கல்லெறிந்து கொன்றார்கள் (1.இராஐh.12:18, 2.நாளா.10:18).