அஸ்தோத் (Ashdod)

(கோட்டை)


இது பெலிஸ்தியருடைய ஐந்து முக்கிய பட்டணங்களில் ஒன்று. மத்தியதரைக் கடலிலிருந்து மூன்று மைலுக்கப்பால் யோப்பா, காசா என்ற பட்டணங்களுக்கிடையிலிருந்தது. துவக்கத்தில் ஏனாக்கியர் இங்கே இருந்தார்கள் (யோசு.11:22). அஸ்தோத்தும் அதின் கிராமங்களும் பின்பு யூதாவின் சுதந்தரமாயிற்று (யோசு.15:46-47).

பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து அஸ்தோத்திலிருந்த கோயிலுக்குக் கொண்டுபோய், தாகோனண்டையில் வைத்தார்கள். மறுநாள் தாகோன் முகங்குப்பற தரையில் விழுந்து கிடந்தது (1.சாமு.5:1-3).

உசியா, யூதாவின் இராஐhவாயிருந்த காலத்தில் அஸ்தோத்தின் அலங்கத்தை இடித்துப்போட்டு பட்டணங்களைக் கட்டினான் (2.நாளா.26:6).

நெகேமியா எருசலேமின் அலங்கத்தைக் கட்டினபோது, அஸ்தோத்தியர் அதைத் தடுக்க முயன்றார்கள் (நெகேமி.4:7). பின்பு அஸ்தோத் ஐhதிகளான ஸ்திரிகளை யூதர் சேர்த்துக்கொண்டதினிமித்தம் அவர்களின் பிள்ளைகள் பாதி அஸ்தோத் பாஷையில் பேசினார்கள் (நெகே.13:23-24).

தர்த்தான், அசீரிய இராஜாவாகிய சர்கோனால் அனுப்பப்பட்டு, அஸ்தோத்தைப் பிடித்தான் (ஏசா.20:1).

இஸ்ரவேலர் சிறையாகப்போனபின், மற்ற ஜாதிகள் மேலும் தேவனுடைய நியாத்தீர்ப்பு வருமென்று எரேமியா கூறினபோது அஸ்தோத்தில் மீதியானவர்களைப்பற்றியும் குறிக்கிறான் (எரேமி.25:20).

செப்பனியாவும், சகரியாவும் கூட அவர்கள் அடையப்போகிற கீழ்நிலையைப்பற்றி முன்னறிவித்தார்கள் (செப்.2:4, சகரி.9:6).

மக்கபேயர் நாட்களில் இது முற்றுமாய் அழிக்கப்பட்டது. பிற்காலங்களில் இந்தப் பட்டணம் ஆசோத்து எனப்பட்டது. பிலிப்பு அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான் (அப்.8:40).