அசீரியா, அசீரியர் (Assyria)
(சமபூமி)

இதெக்கேல் அல்லது திகிரிஸ் என்ற ஆற்றுக்கருகேயிருந்த ஒரு பலமுள்ள இராஜ்யம்
(ஆதி.2:14).
சேமுடைய குமாரனாகிய அசூர் நினிவேயைக் கட்டினான். அவனிலிருந்து இந்தப் பெயர்
வந்தது (ஆதி.10:11,22).
நினிவே இதன் தலைநகர். இஸ்மவேலின் சந்ததியார் இத் தேசத்தில் குடியேறினார்கள்
(ஆதி.25:18).
அசூருபலிது என்பவன் அசீரியரின் இராஜாவாயிருந்து கி.மு.1400ல் பாபிலோனியரைக்
கீழ்ப்படுத்தி தன் பேரனைப் பாபிலோனுக்கு இராஜாவாக நியமித்தான்.
ஏத்தியர் பாபிலோனியருக்கு உதவிசெய்ய ஆயத்தமானபோது, அசீரிய இராஜா சல்மனாசார்
கி.மு. 1300ல் அவர்களைத் தோற்கடித்தான். அவன் மரித்தபின் அவனுடைய மகன்
துக்குல்திமாஸ் என்பவன் திகிரிஸ், ஐபிராத்து நதிகளின் ஓரமான தேசங்களுக்கு
இராஜாவானான். இதன்பின்பு அசீரியா தாழ்ந்த நிலைக்கு வந்தது.
திகிலாத்பிலேசர் கி.மு. 1200ல் இராஜாவான பின் இராஜ்யத்தை மறுபடியும்
நிலைவரப்படுத்தி, ஆமாத்தையும் கைப்பற்றினான். துவக்கத்தில் இவன் பெயர் பூல்.
இவன் இஸ்ரவேல் இராஜாவாகிய மெனாகேமுக்கு விரோதமாய்ப்போன வேளையில், அவன்
இவனுக்குப் பணம் கொடுத்து தப்பிக்கொண்டான் (2.இராஐh.15:19). பூல் பெரிய
சீர்திருத்தங்களைச் செய்து, தேசத்தைப் பலப்படுத்தி, திகிலாத்பிலேசர் என்று பேர்
எடுத்துக்கொண்டான் (2.இராஜா.16:10).
இஸ்ரவேலின் இராஜாவாகிய பெக்காவின் நாட்களில் திகிலாத்பிலேசர் வந்து ஈயோன்
முதலிய தேசத்தைப் பிடித்து, குடிகளைச் சிறையாக்கி அசீரியாவுக்குக் கொண்டுபோனான்
(2.இராஜா.15:29).
ஆகாஸ், யூதாவின் இராஜாவாயிருக்கையில் சீரிய இராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேல்
இராஜாவாகிய பெக்காவும், அவனுக்கு விரோதமாய் வந்தபோது அவன் அசீரிய இராஜாவாகிய
திகிலாத்பிலேசரிடம் உதவிகேட்டு, காணிக்கையையும் அனுப்பினான். அப்படியே அவன்
உதவி செய்தபடியால் ஆகாஸ் அவனைச் சந்திக்கும்படி தமஸ்குவுக்குப்போன தருணத்தில்
அங்கிருந்த பலிபீடத்தின் சாயலை எருசலேமுக்கு அனுப்பி அப்படிப்பட்ட பலீபீடத்தைக்
கட்டுவித்து, அதில் பலிகளைச் செலுத்தினான் (2.இராஜா.16:5-13).
இஸ்ரவேல் இராஜாவாகிய ஓசெயா இராஐயபாரம்
பண்ணின காலத்தில், அசீரிய இராஐhவாகிய சல்மானாசார் வந்து, ஓசெயாவை
பகுதிகட்டும்படிச் செய்தான்.
பின்பு அவன் பகுதி கட்டாமல் விட்டதினால் ஆசீரிய இராஐh அவனை பிடித்துச்
சிறைச்சாலையில் வைத்தான். அதன்பின் சமாரியாவை முற்றிகைபோட்டுக் கைப்பற்றி
இஸ்ரவேலை ஆசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோனான் (2.இராஜா.17:1-6).
இவர்களுக்குப் பதிலாக அசீரிய இராஜா பாபிலோனிலும் அடுத்த தேசங்களிலுமிருந்த
மனுஷரை வரப்பண்ணி, அவர்களைச் சமாரியாவில் குடியேற்றினான் (2.இராஜா. 17:24).
யூதாவின் இராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில், அசீரிய இராஜாவாகிய சனகெரிப்
வந்து யூதா பட்டணங்களைப் பிடித்ததினால் எசேக்கியா ஆலயத்தின் பொக்கிசங்களையும்,
கதவுகளிலிருந்த பொன் தகடுகளையும் கழற்றி அவனுக்குக் கொடுத்தான்
(2.இராஜா.18:13-17).
திரும்பவும் சனகெரிப் வந்து எருசலேமை முற்றுகை போட்டபோது, ஏசாயாவின்
விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டு, அவனுடைய சேனைகளைச் சங்கரித்தார். சனகெரிப்
திரும்பி நினிவேயில் போயிருக்கையில் கொல்லப்பட்டான் (2.இராஜா.19:37).
எசாரதன் ஆசீரியாவில் இராஐhவாயிருந்த நாட்களில் (கி.மு.669). தன் சேனைகளை
எருசலேமுக்கு அனுப்பினான். அவர்கள் யூதா ராஜாவாகிய மனாசேயைப் பிடித்துக்கட்டி,
பாபிலோனுக்கு கொண்டுபோனார்கள். அங்கே அவன் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி
விடுதலைபெற்றான் (2.நாளா.33:10-13).
அசூர்பனிப்பல் என்பவன் அசீரியாவில் இராஜாவாய் (கி.மு.627) வந்து சில
சீர்திருத்தங்களைச் செய்தான். அந்நாட்களில் மேதியர் பலப்பட்டு நினிவேயை
முற்றுகை போட்டார்கள். கல்தேயனாகிய நேபோபிலேசா எழும்பி, அசீரியரைப்
பாபிலோனிலிருந்து துரத்திவிட்டான். பின்பு மேதியரும் பாபிலோனியரும் சேர்ந்து
நினிவேயைக் கைப்பற்றினார்கள். கி.மு. 606ல் அசீரியா முடிவுக்கு வந்தது.
அசீரியாவின் வீழ்ச்சியைப் பற்றி தீர்க்கதரிசனங்களில் ஏற்கெனவே
சொல்லப்பட்டிருந்தது (ஏசா.10:5-19, எசேக்.31:1-18, நாகூம் 3:18-19,
செப்.2:13-15).