அசரியா (Azariah)
(கர்த்தர் உதவி செய்தார்)

எபிரெயருள் ஒரு பொதுவான பெயர். இது முக்கியமாக ஆசாரிய, லேவிய வகுப்பாருக்குள்
வழங்கினது. எலியேசர் வம்சத்தில் அநேகருக்கு இப்பெயர் கொடுக்கப்பட்டது.
1. யூதாவின் இராஜாவாகிய உசியாவின் மறுபெயர் (2.இராஜா.14:21, 2.நாளா.26:1).
2. சதோக்கின் குமாரனாகிய அசரியா, சாலொமோனின் பிரதான மந்திரி (1.இராஜா.4:2).
3. நாத்தானின் குமாரனாகிய அசரியா, மணியகாரரின் தலைவன் (2.இராஜா.4:5).
4. சாதோக்கின் குமாரனாகிய அகிமாசின் மகன் (1.நாளா.6:9).
5. ஆசா இராஜாவின் நாட்களிலிருந்த ஓதேத்தின் குமாரனாகிய அசரியா ஒரு தீர்க்கதரிசி
(2.நாளா.15:1-8).
6. தூபங்காட்டப்போன உசியா இராஜாவை எதிர்த்த ஆசாரியன் (2.நாளா.26:17).
7. எசேக்கியா இராஜாவின் நாட்களிலிருந்த பிரதான ஆசாரியன் (2.நாளா.31:10).
8. எஸ்றா நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தபொழுது ஐனங்களுக்கு
விளங்கப்பண்ணினவர்களில் ஒருவன் (நெகே.8:7).
9. நெபுகாத்நேச்சார் சிறை கொண்டுபோன யூத புத்திரரில் ஒருவனாகிய அசரியா. அவன்
பெயர் ஆபேத்நேகோ என்று மாற்றப்பட்டது (தானி.1:7).
10. எருசலேம் அலங்கத்தைப் பிரதிஷ்டை பண்ணுகையில் உதவியாயிருந்தது அசரியா
என்னும் ஒரு யூதப்பிரபு (நெகே.12:33).