August

பாவத்தை வெளிப்படுத்தி அறிக்கைசெய்

August 16

Uncover and Confess Sin

He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy. (Proverbs 28:13)

Here is the way of mercy for a guilty and repenting sinner. He must cease from the habit of covering sin. This is attempted by falsehood, which denies sin; by hypocrisy, which conceals it; by boasting, which justifies it; and by loud profession, which tries to make amends for it.

The sinner’s business is to confess and forsake. The two must go together. Confession must be honestly made to the Lord Himself, and it must include within itself acknowledgment of the wrong, sense of its evil, and abhorrence of it. We must not throw the fault upon others, nor blame circumstances, nor plead natural weakness. We must make a clean breast of it and plead guilty to the indictment. There can be no mercy till this is done.

Furthermore, we must forsake the evil; having owned our fault, we must disown all present and future intent to abide in it. We cannot remain in rebellion and yet dwell with the King’s majesty. The habit of evil must be quitted, together with all places, companions, pursuits, and books which might lead us astray. Not for confession, nor for reformation, but in connection with them we find pardon by faith in the blood of Jesus.

ஒகஸ்ட் 16

பாவத்தை வெளிப்படுத்தி அறிக்கைசெய்

தன்பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி.28:13).

பாவம் செய்துவிட்டுப் பின் மனம் திரும்பிய பாவிக்குக் காட்டப்படும் இரக்கத்தின் பாதை இதுவாகும். பாவத்தை மூடிமறைக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். பாவத்தை மறுக்கத் தூண்டும் பொய்யினாலும், மறைக்கத்தூண்டும் மாய்மாலத்தினாலும்,நேர்மையென விளங்கும் தற்புகழ்ச்சியினாலும், அது சரியென வெளிப்படுத்துவதற்காக விளக்கம் செய்வதனாலும் இவ்விதம் செயல்பட ஏவப்படுகிறோம்.

பாவம் செய்தவன் பாவத்தை அறிக்கையிட்டு, அதைவிட்டுவிட வேண்டும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததாகும்.ஆண்டவரிடமே உண்மையாகப் பாவத்தை அறிக்கையிட வேண்டும். அது தவறு என்றும் அதனால் ஏற்படும் தீமையையும் அதை வெறுப்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் குற்றப்படுத்தக் கூடாது. சூழ்நிலை மேல் பழிசுமத்தவுமு; கூடாது. இயற்கையான தளர்வினால் அவ்விதம்செய்துவிட்டதாக மன்றாடவும் கூடாது. அதை முழுவதுமாக அறிக்கை செய்து குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்விதம் செய்யும்வரை இரக்கம் காட்டப்படமாட்டாது.

அதுவுமல்லாமல் அப்பாவத்தை விட்டுவிடவேண்டும். நாம் பாவம் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டபின்நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அப்பாவத்தில் நிலைத்திருப்பதற்கான விருப்பத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அரசருக்கு விரோதமாகக் கலகம் செய்து கொண்டே அரசரோடு வாழமுடியாது. பாவம் செய்வதற்கான பழக்கத்தையும் அந்த ஆவலை நீடிக்கச்செய்யக் கூடிய இடங்கள்,தோழர்கள், பொழுதுபோக்கு, நூல்கள் முதலியவற்றையும் விட்டுவிட வேண்டும். பாவ அறிக்கை கடமைக்காக செய்வதோ சமுதாய சீர்திருத்தத்தை உண்டுபண்ணுவதோ அல்ல. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே விசுவாசத்தினால் நாம் மன்னிப்பைப் பெறுகிறோம்.

16. August

„Wer seine Missetat bedeckt, dem wird es nicht gelingen: wer sie aber bekennt und lässt, der wird Barmherzigkeit erlangen.“ Spr. 28, 13.

Hier ist der Weg zur Barmherzigkeit für einen schuldigen und bußfertigen Sünder. Er muss von der Gewohnheit lassen, seine Sünde zu bedecken. Dieses Bedecken wird durch Falschheit versucht, welche die Sünde leugnet; durch Heuchelei, welche sie verhehlt; durch Prahlerei, welche sie rechtfertigt; und durch lautes christliches Bekenntnis, das man als Ersatz dafür bieten will.

Des Sünders Pfl icht ist es, zu bekennen und zu lassen. Die zwei müssen zusammen gehen. Das Bekenntnis muss ehrlich vor dem Herrn selber abgelegt werden; und es muss ein Anerkennen des Unrechts einschließen, sowie ein Gefühl von der Sündigkeit desselben und Abscheu davor. Wir müssen nicht die Schuld auf andere werfen, noch die Umstände tadeln oder uns mit natürlicher Schwachheit entschuldigen. Wir müssen alles gerade heraussagen und uns als schuldig bekennen. Es kann keine Barmherzigkeit sein, bis dieses getan ist.

Ferner, wir müssen das Böse lassen: nachdem wir unseren Fehler eingestanden haben, müssen wir für die Gegenwart und die Zukunft jede Absicht fahren lassen, dabei zu verharren. Wir können nicht in Empörung bleiben und doch bei des Königs Majestät weilen. Die Gewohnheit des Bösen muss aufgegeben werden, sowie alle Orte, Gefährten, Bestrebungen und Bücher, die uns irreführen könnten. Nicht w e g e n des Bekenntnisses, noch w e g e n der Besserung, aber in Verbindung damit finden wir Vergebung durch den Glauben an das Blut Jesu.