சோதோம் கோமோராவின் அழிவு

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவைக் குறித்து ஆபிரகாமோடே பேசினார். ஆபிரகாம் சோதோமுக்காகப் பரிந்து பேசினான். அவரோடு இருந்த 2 தூதர்கள் சோதோமுக்குப் போனார்கள். அந்தத் தூதர்கள் லோத்தையும் அவன் மனைவியையும், இரு குமாரத்திகளையும் பட்டணத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய் விட்ட பின்பு, சோதோம் கொமோரா பட்டணத்தை அழித்தார்கள். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத்தூண் ஆனாள். (ஆதி.18:22-33,  19:1-29).

ஈசாக்கின் பிறப்பு – முன்னறிவிப்பு

மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமைச் சந்தித்தார். ஆபிரகாம் 3 புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் கர்ப்பவதியாகி ஒரு குழந்தையைப் பெறுவாள் என்றார். சாராள் நகைத்தாள். (ஆதி.18:1-12).

ஆபிராமுக்கு இஸ்மவேல் என்ற மகன்

காலங்கள் தாண்டியும் தனக்குப் பிள்ளை கிடைக்காததால் சாராய் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். (கி.மு.1881). ஆகார் ஆபிரகாமின் 86 வது வயதில் இஸ்மவேலைப் பெற்றாள். (கி.மு. 1868) தேவன் அவனுக்குத் தரிசனமாகி, திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். ஜாதிகளுக்கெல்லாம் தாயாக இருப்பாள் என்று சாராயின் பெயரைச் சாராள் என்று மாற்றினார். கர்த்தர் இஸ்மவேலைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். இஸ்மவேலின் 13வது வயதில் ஆபிரகாமும் அவனுடையவர்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு வேறுபடுத்தப்பட்டார்கள். (ஆதி.16:1-16, 17:1-27).

லோத்தை மீட்டுக் கொண்டான்

லோத்தையும் அவனனைச் சேர்ந்தவர்களையும் கெதர்லாகோமேரும் மற்றும் ராஜாக்களும் கி.மு. 1884ல் சிறைபிடித்துக்கொண்டு சென்றார்கள். இதை அறிந்த ஆபிராம் தன்னோடிருந்த 318 ஆட்களோடு சென்று அவர்களை மீட்டுக்கொண்டு வந்தான். திரும்பிவரும்போது சாலேமின் ராஜாவான மெல்கிசேதேக் அவனை ஆசீர்வதித்தான். (ஆதி.14:5-24)

ஆபிராமும் லோத்தும் பிரிதல் (கி.மு. 1891)

ஆடுமாடுகளும், வேலையாட்களும் மிகுதியாய் இருந்தபடியால் ஆபிராமும் லோத்தும் பிரிந்தாhகள். லோத்து சோதோமுக்கு நேராகக் கூடாரம் போட்டான். ஆபிராம் கானானில் குடியிருந்தான். பின்பு எபிரோனில் வந்து மம்ரேயின் சமபூமியில் தங்கினான். (ஆதி.13:5-18).

ஆபிராம் திரும்பப் பெத்தேலுக்கு

ஆபிராம் மிருஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளும் உடையவனாய்த் திரும்பி வந்தான். அவர்கள் வரும்போது ஆகார் என்னும் அடிமைப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள் (ஆதி.13:1-4)

பஞ்சத்தினால் எகிப்துக்கு

கி.மு. 1891ல் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. எனவே, ஆபிராம் எகிப்துக்குச் சென்றான். சாராய் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். தன்னைக் காத்துக்கொள்ளும்படி ஆபிராம் சாராயைத் தன் சகோதரி என்று பார்வோனிடம் சொன்னாள். பார்வோன் சாராயை அழைத்து அரண்டனையில் வைத்துக்கொண்டான். கர்த்தர் பார்வேனை வாதித்தார். உண்மை அறிந்தபோது சாராயை அனுப்பினான். (ஆதி.12:10-20).