ஆபிரகாம் (கி.மு. 1967-1792)

ஆபிரகாம்  கி.மு. 1967ல்  ஊர் என்னும் தேசத்தில் தேராகுவின் மகனாகப் பிறந்தான். நோவாவிலிருந்து ஆபிரகாம் 10 வது தலைமுறை. ஆபிரகாம் அவன் நாட்களில் விக்கிரக வணக்கத்தை விரும்பாதவனாகக் காணப்பட்டான். கர்த்தர் அவனைத் தமது திட்டங்களில் பயன்படுத்தச் சித்தமானார். ஆபிரகாம் சாராளை மணந்தான். (கி.மு.1927)

ஆபிரகாமைத் தெரிந்து கொள்ளுதல்

நோவாவின் சந்ததி உலகத்தின் எல்லா தேசங்களிலும் பெருகினார்கள். இந்நிலையில் தேவன் தமக்கென்று ஒரு ஜனத்தை ஆயத்தம்பண்ணச் சித்தமானார். அதற்காகத் தேவன் ஆபிரகாம் என்ற ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டார். ஆபிரகாமிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தை எழுப்பினார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்பவர்கள் கோத்திரப் பிதாக்களாகக் கருதப்படுகிறார்கள்.