படைப்பு குறித்து

படைப்பைக் குறித்து வேதப்புத்தகத்தில், ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் என்று ஆதி.1:1ல் வாசிக்கிறோம். மனிதன் படைப்புக்கு முன் உண்டாக்கப்பட்ட முக்கியமான தேவதூதர்களில் ஒருவனாய் இருந்த லூசிபரைக் குறித்து ஏசா.14:12-17, எசேக்.28:13-18 வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். அபிசேஷகம் பண்ணப்பட்ட கேரூப். ஞானமும், அழகும் நிறைந்தவன். அவன் உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்று தன் உள்ளத்தில் மேட்டிமை அடைந்தபோது, கீழே தள்ளப்பட்டான். அது முதல் அவன் சாத்தானாக அல்லது எதிராளியாக மாறினான். சாத்தானும் அவன் தூதர்களும் தேவனுக்கும், தேவத் திட்டங்களுக்கும் மாறாகச் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேவன் 6 நாட்களில் உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்து 7ம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று காணப்படுகிறது. (ஆதி.1:3-24,  2:2-3)

ஆதியிலே தேவன்

கிறிஸ்து அனாதியானவர், அவரைக் குறித்து ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது என்றும், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலே அல்லாமல் உண்டாகவில்லை என்றும் வாசிக்கிறோம். தேவன் சருவ சிருஷ்டிகர் (யோ.1:1,3)

பரிசுத்த வேதாகமம்

தேவனின் திட்டங்களையும், அத்திட்டங்களின் செயல்பாடுகளையும் பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது. பரிசுத்த வேதாகமம் 40 பேரால் 1600 வருடங்களில் எழுதப்பட்டது. ஆனால், அது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டபடியால் அதில் அடங்கியுள்ள 66 புத்தகங்களும் ஒரே ஆளால் எழுதப்பட்டதுபோல ஒவ்வொன்றும் தொடர்புடையவைகளாகவும், ஒரே இலக்கை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

முதல் புத்தகமான ஆதியாகமத்தில் முதல் மனிதன் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்ததினால் ஜீவவிருட்சத்தின் கனியை ஏதேனில் இழந்துபோகிறான். கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தலில் மீட்கப்பட்ட மனிதன் அதைப் புதிய எருசலேமில் திரும்பப் பெற்றுக் கொள்கிறான்.

ஆவியின் கனி

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.  (கலா.5:22-23)

 

(1) அன்பு

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது. (1.கொரி.13)

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  ( 2.தீமோ.2:22)

கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.  (எபேசி.5:2)

(2) சந்தோஷம்

அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள். இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து,  (1.பேது.1.8)

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். ( 1.பேது.3:15)

(3) சமாதானம்

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  ( 2.தீமோ.2:22)

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.  (எபி.12:14)

(4) நீடியபொறுமை

அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும, உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். (ரோ.5:3-4)

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள். அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். ( 1.பேது.3:20)

(5)  தயவு

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு.  நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. (ரோ.12.19-21)

(6) நற்குணம்

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  (2.தீமோ.2:22)

என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்.  (ரோ.15:14)

(7)  விசுவாசம்

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  (2.தீமோ.2:22)

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். ( எபி.11.6)

(8)  சாந்தம்

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.  (மத்.5:5)

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,  (1.கொரி.13:4)

(9) இச்சையடக்கம்  

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள். சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.  (எபேசி.4:22-27)

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.  ( 1.பேது.4:1)

இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது  என்றார்.   (மத்.17:21)