கதவருகில் நிற்கும் ஜீவாதிபதி

டிசம்பர் 31
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்@ ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)
இன்னொரு ஆண்டின் முடிவிற்கு நாம் இப்பொழுது வந்திருக்கிறோம். உள்ளே வருகிறதற்கு அனுமதிகோரி மனிதரின் வாசற்படியில் பொறுமையுடன் கர்த்தர் இன்னும் நின்றுகொண்டிருக்கிறார். வெகுநேரம் அவர் வெளியிலே காக்கவைக்கப்பட்டிருக்கிறார். வேறு யாராக இருப்பினும் நம்பிக்கை இழந்து, திரும்பி வீட்டிற்குப் போயிருப்பார். ஆயின் நமது இரட்சகர் அங்ஙனம் செய்யார். அவர் நீடிய பொறுமையுடையவர், ஒருவரும் கெட்டுப்போகக் கூடாதெனக் காத்திருக்கிறார். ஒருநாள் கதவு வேகமாய்த் திறக்குமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பிற்கு பதில் கூற மறுப்போரைக் காணும் வேளையில் நாம் வியப்படைகிறோம். அயலகத்தார் கதவைத் தட்டுவார்கள் எனில், உடனடியாக கதவு திறக்கப்படுகிறது. ஒருவேளை விற்பனையாளன் கதவைத் தட்டியிருந்தால், வீட்டில் யாராவது ஒருவர் கதவைத் திறந்து, எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று சொல்லுவார். ஒருவேளை நாட்டின் குடியரசுத்தலைவரோ மாநிலத்தின் ஆளுநரோ வந்திருந்தால், வீட்டில் இருப்போர் முந்தியடித்துக் கொண்டுபோய் கதவைத் திறப்பார் என்பது நிச்சயம். அவரை வரவேற்பது தாம் பெற்ற நற்பேறு என்று கருதுவார். ஆயின் படைப்பாளரும், தாங்குகிறவரும், மீட்பரும் கதவருகில் நிற்கும்போது பாராமுகத்தோடு அமைதியாயிருப்பது மிகுந்த விநோதமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் கொள்ளையிட வரவில்லை, நமக்குக் கொடுக்கவே வந்திருக்கிறார் என்பதை அறிந்தும் மனிதன் அவருக்கு மறுப்புரை கொடுப்பது பகுத்தறிவற்ற செயலாகும். அவர் நீடுவாழ்வை மிகுதியாக நல்கவே வந்திருக்கிறார்.
வானொலி இறையியல் சொற்பொழிவாளர் ஒருவரிடம் இரவில் வெகுநேரம் கழித்துத் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டார். தனது வீட்டிற்குச் செல்லும் முன்னர் அவரைச் சந்திக்க அனுமதி கோரினார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதே என்று கருதி, பிரசங்கியார் அவர் வருவதைத் தடைசெய்யவேண்டும்மென்று நினைத்தார். பல காரணங்களைக் கூறியும் அவர் வற்புறுத்தவே கடைசியில் இணங்கினார். பார்வையாளர், வானொலி ஊழியத்திற்குச் செலவாகும் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு உடனடியாகச் சென்றுவிட்டார். அப்பொழுது அந்தப் பிரசங்கியார், அவரை வீட்டிற்கு வரவேற்றது எவ்வளவு நல்லது என்று சொல்லி மகிழ்ந்தார்.

ஜோ பிலிங்கோ இதனை உயிரூட்டம் உடைய கதையாக வடிவமைத்துக் கூறியுள்ளார். வீட்டில் உள்ளோர் உரையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் திடீரெனக் கேட்டது. யாரோ வந்திருக்கிறார் என்று ஒருவர் கூறினார். மற்றொருவர் குதித்தெழுந்து ஓடிச்சென்று கதவைத் திறந்தார். வேறோருவர், வந்திருப்பது யார்? என்று வினவினார். வாசற்கதவு அருகிலிருந்து பதில் வந்தது. இறுதியில் வீட்டின் தலைவர் அவரை உள்ளே வரச்சொல் என்று கத்தினார்.

சுருங்கச் சொன்னால், இதுவே நற்செய்தியாகும். கவனித்துக் கேளுங்கள்! யாரோ ஒருவர் கதவருகில் நிற்கிறார். அவர் யார்? அவரே ஜீவாதிபதியும் மகிமையின் கர்த்தருமாவார். அவரே நமக்குப் பதில் ஆளாக மரணத்தை ஏற்றுக்கொண்டு, அடக்கம்செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர். மகிமையில் முடிசூட்டப்பட்டவராக இப்பொழுது திகழ்கிறார். தம்முடைய மக்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வரப்போகிறவர் அவரே, அவரை உள்ளே வரும்படியாக அழைப்பீர்களாக.

தகுதியற்றோரிடம் காட்டும் கிருபை

டிசம்பர் 30

யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். (2.சாமு.9:1)

தாவீதின் உயிரைக் குடிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்த சவுலின் பேரனே மேவிபோசேத் என்பவன். தாவீது அரியணையில் அமர்ந்த பின்னர், அவனுடைய எதிரியின் குடும்பத்தைச் சார்ந்த மேவிபோசேத் கொன்று போடப்பட்டிருக்கவேண்டும். மேலும், அவன் நடக்கக்கூடாத முடவன். அவன் சிறுவனாக இருந்தபோது அவனைப் பராமரித்த தாதி அவனைக் கீழே போட்டுவிட்டாள். இப்பொழுது அவன் வேறொருவனுடைய வீட்டிலே வசித்துக்கொண்டிருந்தாள். மேய்ச்சல் இல்லாத இன்னும் பொருளுடைய லோதாபாரில் குடியிருந்தான். அவன் வறுமையுற்றிருந்தான்  என்பதை லோதேபார் என்னும் பெயர் வெளிப்படுத்துகிறது. லோதேபார் யோர்தான் நதிக்குக்   கிழக்கே இருந்த காரணத்தினால்   தேவனுடைய வாசஸ்தலமாகிய எருசலேமை விட்டுத் தொலைதூரத்தில் இருந்தது. தாவீதின் தயவு பெறத்தக்க ஏதொரு சிறப்பும் மேவிபோசேத்தினிடத்தில் காணப்படவில்லை.

இவையாவும் இவ்விதமாக இருந்தபோதிலும், தாவீது அவனைக் குறித்து விசாரித்தான். அவனைத் தேடி ஆட்களை அனுப்பினான். அரண்மனைக்குக் கொண்டுவந்தான், அச்சம்கொள்ளத்தேவையில்லை என்று உறுதியளித்தான், அவனுக்குப் பணிவிடைசெய்ய ஒரு பரிவாரத்தையே கொடுத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அரசனின் பந்தியிருப்பில், இளவரசர்களுக்கு அளிப்பது போன்று நிரந்தரமாக ஓரிடத்தைக் கொடுத்து அவனைக் கனப்படுத்தினான்.

இவ்வகையில் இரக்கத்தையும், கிருபையையும், பரிவையும்   தாவீது அவனிடத்தில் காணப்பிக்கத்த வகையில் என்ன மேன்மையை அவன் உடையவனாயிருந்தான் ? அதன்விடை „யோனத்தான் நிமித்தம்“ என்னும் சொற்றொடரில் அடங்கியிருக்கிறது. மேவிபோசேத்தின் தகப்பனாகிய யோனத்தானின் குடும்பத்தாருக்குத் தயiபாராட்டுவதை நிறுத்திவிடமாட்டேன் என்று தாவீது அவனோடு உடன்படிக்கை செய்திருந்தான். இஃது நிபந்தனையற்ற கிருபையின் உடன்படிக்கையாகும் (1.சாமு.20:14-17).

முதல்முறையாக அரசனின் சமுகத்திற்கு கொண்டுவரப்பட்டபோது மேவிபோசேத் இதனை உணர்ந்தான். அரசனின் அடிமுன்னர் வீழந்து, „செத்தநாய்“ என்று தன்னைத் தாழ்த்திப் பணிந்து கொண்டான். இப்பேற்றைப் பெறுதற்குத் தனக்கு எவ்விதத்திலும் தகுதியில்லை என்பதை இங்ஙனம் அவன் அறிக்கை செய்தான்.

இந்தச் சித்திரத்தில் நம்மை இருத்திப் பார்ப்பதில் எவ்விதச் சிரமமும் இல்லை. கலகக்காரர்களும் பாவம் நிறைந்தவர்களுமாகிய இனத்தில் பிறந்து மரண ஆக்கினைக்குக் கீழாயிருந்தோம். ஒழுக்கத்தின் அடிப்படையில் உருவற்றுப்போனவர்களாகவும், பாவத்தினால் முடமாகிப்போனவர்களாகவும் இருந்தோம். மேய்ச்சல் அற்ற நிலத்தில் வாழ்ந்தோம். ஆவிக்குரிய வகையில் பசிப்பிணி பிடித்தவர்களாயிருந்தோம். நாம் உதவியற்றவர்களும், வறுமையுற்றவர்களும், அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தோம். அதற்கும் மேலாக தேவனைவிட்டுத் தூரமானவர்களாகவும், கிறிஸ்து அற்றவர்களாகவும், நம்பிக்கை அற்றவர்களாகவும் இருந்தோம். தேவனுடைய அன்பைப் பெறுவதற்கும் அவருடைய தயவை அடைவதற்கும் நம்மிடத்தில் எவ்விதத் தகுதியம் இல்லாதிருந்தது.

இருந்தபோதிலும், தேவன் நம்மை நாடினார், கண்டடைந்தார், சாவின் அச்சத்திலிருந்து விடுவித்தார், விண்ணுலக நற்பேறுகளால் ஆசீர்வதித்தார். அவருடைய விருந்துசாலைக்கு அழைப்பித்து தமது நேசத்தின் கொடியால் நம்மைத் தழுவிக்கொண்டார்.

இதனை அவர் செய்ததன் காரணம் யாது? கிறிஸ்துவின் நிமித்தம் அவர் இதைச் செய்தார்.  இவ்வுலகத்தோற்றத்திற்கு முன்னரே, அவருடைய கிருபை மிகுந்த உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்துவுக்குள்ளாக அவர் நம்மைத் தெரிந்துகொண்டதினாலே இதைச் செய்தார்.

இதற்கு உகந்த பதில், அவர் திருவடி முன்னர் தாழவீழ்ந்து, „செத்தநாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம்?“ என்று கூறிப் பணிந்துகொள்வோம்.

கீர்த்தனைகளும் ஞானப்பாட்டுகளும்

டிசம்பர் 2

சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, (எபேசி.5:19)

இங்கு பாடல் பாடுதல் ஆவியின் நிறைவோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது. ஆவியின் நிறைவினால் பாடல்கள் எழும் என்பதன் அடிப்படையில் இங்ஙனம் கூறப்பட்டிருக்கிறது. ஆகவேதான், வரலாற்றில் காணும் கிறிஸ்தவ மறுமலர்ச்சிகள் யாவும் பாடல்களோடு இணைந்து வந்துள்ளனபோலும். வேல்ஸ் மறுமலர்ச்சி இதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கிறிஸ்தவர்களைப்போன்று வேறு எவரும் இவ்வளவாகப் பாடினதில்லை. கிறிஸ்தவர்கள் பெற்றுள்ளது போன்று வேறு எவரும் சங்கீதங்கள், கீர்த்தனைகள், ஞானப்பாட்டுக்கள் ஆகிய பாரம்பரிய செல்வத்தைப் பெற்றதில்லை. நாம் அவ்வப்போது உணர்ந்தும் நம்மால் வெளிப்படுத்த முடியாதவற்றை நமது கீர்த்தனைகள் மகத்தவமான மொழியில் வெளிப்படுத்துகின்றன. நம்முடைய சொந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளைச் சில கீர்த்தனைகள் வெளிப்படுத்துகின்றன. “ஒப்புவிக்கிறேன் இயேசுவுக்கே ஒப்புவிக்கிறேன்” என்னும் பாடல் அவற்றில் ஒன்று. இன்னும் சில பாட்டுக்களில் நிறைவான சமர்ப்பணம் பேசப்படுகின்றது. அப்படிப் பாடுகின்ற வேளையில் நமது இருதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகிறோம்.

ஆவிக்குரிய பாடல்களைப் பாடுங்கால் இசையொழுக்கோ, இசை இனிமையோ கணக்கிடப்படுவதில்லை. இருதயத்தின் ஆழத்தினின்று செய்தியானது எழுந்து, தூய ஆவியானவரின் வல்லமையோடு விண்ணுலகத் தந்தையைச் சென்றடைவதே இன்றியமையாததாகும். கர்த்தாவே பாடல் எவ்வளவு இனிமையுடையதாக இருக்கிறது என்பது பொருட்டன்று என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆவியினால் கற்பிக்கப்பட்டால் ஒழிய எந்த இருதயமும் உமக்கு இனிமையைக் கொண்டுவருவதில்லை என மேரி பௌலே என்பார் கூறி இவ்வுண்மையை விளக்கியுள்ளார்.

தேவ ஆவியானவர் எங்ஙனம் திருமறையை ஒருவர் பிரசங்கிக்கும்போது பயன்படுத்துகிறாரோ, அதுபோன்றே பாடல்களையும் அவர் பயன்படுத்துகிறார். கிரேட்டன் கின்னஸ் என்பாரின் தாயார், வயல்வெளியில் உழுதுகொண்டிருந்த உழவர் ஒருவர் பாடின பாடலைக்கேட்டு, ஆற்றில் மூழ்கித் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்னும் தனது எண்ணத்தைக் கைவிட்டார். முனைவர் கின்னஸ் பிற்காலத்தில் இவ்வாறு கூறினார்: முற்றிலும் நான் தேவனுக்குச் சொந்தம். அந்தக் கிறிஸ்தவ உழவர் தனது தாழ்மையான உழைப்போடு, கர்த்தரைத் துதித்துப் பாடினார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

இருவகை ஆபத்துகளினின்றும் இசை நிகழ்ச்சி ஊழியம் செய்வோர் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். முதலாவது சுயம் அவர்களைப் பற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. வெளியரங்கமாக ஆற்றப்படுகின்ற மற்ற ஊழியங்களைப்போலவே, இதிலும் மிகப்பெரிய சுயம் என்னும் மாயையில் ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வது எளிது. அவர் தனது சொந்தத் திறமையை வெளிப்படுத்து மக்களைக் கவரவேண்டும் என்னும் சோதனைக்கள் அகப்பட்டுக்கொள்வார். ஆனால், தேவ மக்களின் நற்பேற்றைக் கருத்திற்கொண்டு தேவ மகிமைக்காகப் பாடுவதே சாலவும் சிறந்தது.

இரண்டாவது, மற்றவர்களுக்குப் படிப்பினைய+ட்டுவதற்கு மாறாக மகிழச் செய்வதற்காக மட்டும் பாடுவதாகும். மகத்துவமான இசை ஞானத்தோடு ஒருவரால் பாடக்கூடும். ஆயின், கேட்போராது உள்ளங்களை தேவசெய்தி சென்றடையத்தக்கதாகப் பாடுவதே சிறந்ததாகும். நாம் அன்புகூருகிற கர்த்தருக்குத் தகுதியற்றதும், கருத்துச் செறிவு அற்றதும், கேட்பொர் உணர்ச்சிகளை எழும்பிவிடக் கூடியதுமான பாடல்களைப் பாட ஒருவரால் கூடும். ஆயின் அதில் என்ன பயன்?

வௌ;வேறு பண்பாட்டில் வௌ;வேறு இசை நாட்டம் உண்டாயிருக்கும். ஆனாலும் எல்லா பண்பாட்டிலும் பாடல்கள் வேதஉபதேசங்களைக் கொண்டதாகவும், தேவ மகிமையைப் பறைசாற்றுவதாகவும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் இருக்கவேண்டும்.

விசாரித்து ஆராய்ந்து அறிதல்

டிசம்பர் 1

…… என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்… (உபா.13:13-14)

இஸ்ரவேலிலே ஒரு நகரத்திலே தேவனைப் புறக்கணித்து, சிலை வணக்கத்தைப் பற்றிக்கொண்டார்கள் என்று வதந்தி பரவினால், அந்நகரத்திற்கு எதிராகத் தண்டனையைச் செலுத்தும் முன்பு தீர விசாரணை நடத்தவேண்டும்.

நாமும் ஒரு வதந்தியையோ புறங்கூறுதலையோ கேட்கும்போது கவனமற்றவர்களாகச் செயல்ப்படக்கூடாது. மாறாக ஆறுவகையான சோதனைகளின் மூலமாகச் சோதித்து அறிய வேண்டும். இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்தானா? அது நிச்சயம் நிகழ்ந்ததா?

உண்மையில், சமய உலகில் அவ்வப்போது வெளிவருகின்ற, பெரும் பரபரப்ப+ட்டுகிற செய்திகளை மற்றவர்களிடம் கூறும் முன்னர் தீர விவாரிப்பதும் கவனத்தோடு நடந்துகொள்வதும் சிறந்த முறையாகும். நான் சில எடுத்துக்காட்டுக்களைத் தருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த கதை இது. இது நிய+யார்க் நகரின் படகுத்துறை ஒன்றில் எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இஸ்ரவேலில் ஏற்ற சூழ்நிலை உண்டாகும்போது, அக்கற்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் வதந்தி பரவிற்று. அவை இந்தியானா மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியை மிகுந்த ஆவலோடு கிறிஸ்தவர்கள் பரப்பினார்கள். அச்செய்தியில் உண்மையேதும் இல்லையென்று அறிந்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தனர்.

வேறொரு சமயத்தில், இன்னொரு கதை பிறந்தது. மனிதனுடைய காலவரலாற்றைக் குறித்த விவரங்களை மிக விரிவாகக் கணிப்பொறி ஒன்றில் கொடுத்து, அதன் விடையைப் பார்த்தபோது, வேதத்தில் காண்கிறபடி யோசுவாவின் காலத்தில் ஒரு நாள் பகற்பொழுது நீட்டப்பட்டது உறுதியானது என்பதே அந்தக் கதை. வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிகழ்ச்சியை உறுதிசெய்கிற எந்த செய்தியையும், ஆர்வமிக்க விசுவாசிகள் பத்திரிகைகளில் உடனடியாக எழுதிப் பரப்புகின்றனர். அதைக் குறித்துப் பிரசங்கங்களும் செய்கின்றனர். பின்னர் அந்தச் செய்தி நீர்க்குமிழி போன்று வெடித்துச் சிதறிப்போகின்றது. எந்த அடிப்படையும் இல்லாத கதையாக அது முடிவடைகிறது.

சிறிது காலத்திற்கு முன்னதாக, மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனை அந்திகிறிஸ்து என்று உறுதி செய்வதற்குக் கணிதத்தைக் கொண்டு கணக்கு ஒன்றைச் செய்தனர். அது எவ்விதம் செய்யப்பட்டது என்பதைப் பாருங்கள். அந்த மனிதனின் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை மதிப்பீடகக் கொடுத்தனர். அதன் பின்னர் சில கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாவற்றையும் செய்தனர். கிடைத்த விடை 666. இது எதனையும் உறுதிசெய்யவில்லை என்பதே உண்மை. எந்த ஒரு பெயரை எடுத்துக்கொண்டாலும் நம்மால் பல கணக்குகளைப்போட்டு 666 என்ற எண்ணை விடையாகக் கொண்டுவரலாம்.

சார்ல்ஸ் டார்வின், வாழ்வின் இறுதி நாட்களில் தனது பரிணாமக் கொள்கையைக் கைவிட்டு, வேதத்தை விசுவாசிக்கும் வாழ்விற்குத் திரும்பினார் என்னும் செய்தி அடங்கிய கைப்பிரதி ஒன்றை நான் கண்டேன். இது உண்மையாக இருக்கக்கூடும். அது உண்மையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். அது உண்மையாக இருக்குமானால், ஒருநாள் அதைக் கண்டறிவேன். அது உண்மையானது என்பதற்குரிய ஆதாரம் என்னிடத்தில் இல்லை. ஆகவே அதை மற்றவர்களிடம் சொல்லத் துணியமாட்டேன்.

இன்றைய வசனத்தில் காண்கிற ஆறுவகையான சோதனைகளைக்கொண்டு எந்த ஒரு செய்தியையும் நாம் சோதித்துப் பார்ப்போமானால் இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கவோ, அவமானப்படவோ கூடியநிலை ஏற்படாது. இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்தானா? அது நிச்சயமாய் நிகழ்ந்ததா?