மனிதனின் தேடுதல்

 Search

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்க்கையிலே சந்தோஷத்தையும், திருப்தியையும் தன் வாழ்வுக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடித் திரிகிறான். ஆகவே சிலர் படித்து வாழ்க்கையிலே முன்னேறுவதன் மூலமாக அதைக் கண்டுகொள்ளலாம் என எண்ணுகின்றனர். இன்னும் சிலர் செல்வத்தைச் சேர்ப்பதன் மூலமாக இவைகளை அடையலாம் என நினைக்கின்றனர். வேறு சிலரோ சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்தின் மூலமோ அதை அடையப் பிரயாசப்படுகின்றனர். ஆனால் மனிதன் தேடும் சந்தோஷத்தையும், திருப்தியையும், தன் வாழ்வுக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் பட்டப்படிப்பின் மூலமோ, செல்வத்தின் மூலமோ, சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்தின் மூலமோ அல்லது வேறு வழி மூலமோ அடையமுடியாது என்பதை கண்டுகொள்ளும் போது அவன் வாழ்க்கையிலே ஏமாற்றமும் விரக்தியும் அடைகிறான். இதனால் மனிதனுடைய வாழ்க்கை ஏக்கமும், மனக்குழப்பமும், வேதனையும் நிறைந்ததாக மாறிவிடுகிறது. சமுதாயத்தில் கொலை கொள்ளை , தற்கொலை நடைபெறுவதற்கு இதுவே காரணமாகவுள்ளது.

மனிதனுடைய இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம் அவன் தேடி அலையும் வாழ்வின் அர்த்தத்தையும், நோக்கத்தையும், சந்தோஷத்தையும் திருப்தியையும் தரக்கூடிய ஒருவர் உண்டென்பதை அவன் அறியாமல் இருப்பதும், அந்த மெய்வழியில் செல்லாமல் இருப்பதுமே அதற்குக் காரணம். மனிதன் தான் அடையவேண்டிய அந்த மேலான காரியத்தை மாறாத ஒரு சத்தியத்தின் வழியிலே பெற்றுக்கொள்ளமுடியும். அந்த உண்மை வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. நானே வழியும் உண்மையும் மெய்வாழ்வுமாய் இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். (யோவான் 14:6)

நீங்கள் அடையத் தேடும் அந்த மேலான அர்த்தத்தையும் நோக்கத்தையும் இயேசு என்ற வழியில் மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும்.  ஜெபத்திற்கூடாக உங்கள் வாழ்க்கையை நீங்கள் இயேசுவுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் அந்த மேலான காரியத்தை நீங்களும் பெற்றுக்கொள்ள முடியும்.