கோபத்தை கையாளுதல்

கோபத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள்:

 

1). கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும்.

2). பாம்பைப் போல படம் எடுத்து சீறலாம், கொத்தத்தான் கூடாது.

3). கோபம் கொள்ளாதவன் சூடு சொரணையற்றவன்

4). பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஓருவன் கோபப்படவில்லையென்றால், அவன் குற்றமுள்ளவன் என்றே அர்த்தம்.

5). கோபப்படவில்லையென்றால், அதிகாரத்தை செயல்படுத்தமுடியாது.

6). கோபப்படுகிறவனைத்தான், சக்திவாய்ந்தவன் என்று பிறர் எண்ணுகிறார்கள்.

7). கோபப்படாவிட்டால், நம்மை இளிச்சவாயன் என்று எண்ணி எல்லாரும்

ஏமாற்றிவிடுவார்கள்.

கோபப்படுவதில் தவறுகள்:

 

1). தவறான காரணம் : அநியாயத்துக்காகக் கோபப்படல் (மத் 5:22)

2). தவறாள விளைவு : கோபத்தினால் பாவஞ்செய்தல் (எபே 4:26)

3). தவறான கால அளவு : முற்கோபம், சீக்கிரமாக கோபப்படல் (யாக் 1:19) 

விளைவுகள் : 

1). சண்டை (நீதி 30:33)

2). வாக்குத்தத்தமான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கத் தவறுதல் (யாத் 32:19, உபா 32: 50-52)

3). சாபம் (ஆதி 49:7)

4). பிரிவினை (அப் 15:39)

5). சிதறிப்போதல் (ஆதி 49:7)

6). பிசாசால் ஆட்கொள்ளப்படல் (எபே 4:26-27)

7). தனிமைப்படுத்தப்படல் (அப் 15:39) 

காரணங்கள்:

 

1). ஏமாற்றப்படுதல் (ஆதி 27:42-45)

2). புகாருக்கு உள்ளாகுதல் (ஆதி 30 :1-2)

3). பொறாமைப்படுதல் (லூக் 15:25-28)

4). கடிந்துகொள்ளப்படுதல் , குறை சுட்டிக்காட்டப்படுதல் (2நாளா 26:18-29)

5). கீழ்ப்படிய வேண்டியவரின் கீழ்ப்படியாமை (எஸ் 1:12)

6). மதிக்கப்படாத நிலை (எஸ்3:5)

7). மாமிசம் கிரியை செய்தல் (கலா 5:19-20)

8). பெற்றோர், தலைவரின் செய்கை (எபே 6:4)

9). அங்கீகரிக்கப்படாத நிலை (ஆதி 4:5-6)

10). கடுச்சொற்கள் (நீதி 15:1) 

தீர்வுகள்:

 

1). மெதுவான, நிதானமான பேச்சு ( நீதி 15:1)

2). கர்த்தரை நோக்கி அமர்ந்து, காத்திருத்தல் (சங் 37:7-9)

3). படுக்கையில், இருதயத்தில் பேசுதல் (சங் 4:4)

4). தடனர்க்கமின்றி, எல்லா இடங்களிலும் ஜெபித்தல் (1தீமோ 2:8)

5). கோபக்காரரோடு ஐக்கியம் கொள்ளாதிருத்தல் (நீதி 22:24-25)

6). வருமுன் காக்க, சாந்தகுணத்தைப் பெறுதல் (யாக் 3:13-17)

7). வந்தபின் கட்டுப்படுத்த, விவேகத்தைப் பெறுதல் (நீதி 19:11)

நன்றி :யுத்தசத்தம்