தாழ்வில் நம்மை நினைத்தவர்!

“நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங் 136:23) 

தேவன் உன்னதமானவர். உன்னத பதவிக்குத்தகுதியானவர்.  ஆனால் அவர் தாழ்ச்சியில் இருப்போரை நினைப்பவர். தாழ்மைப்படும் உள்ளங்களுக்குச் சொந்தக்காரர். உயர்த்தும் இதயங்களின் முகடுகளை மிதிக்கும் அவர், தாழ்த்தும் இருதயங்களில் மென்பாதங்களால் நடந்து வருபவர்.

தாழ்வில் இருந்த மனுக்குலத்துக்காக மீட்பின் ஐசுவரியத்துடன் நமது மீட்பர் கடந்து வந்தார். நரக வாசலில் இருந்த நம்மை மீட்டெடுத்தார்.  உரிமை கொண்டாடுகிறார். உறவினரானார்.

இன்று வசதி படைத்தோரை உறவு கொண்டாடும் உலகோர் உண்டு. வறியோரைக் குறித்து வெட்கப்படவும் செய்வர். ஆனால் தேவனோ மிகுந்த சொல்வந்தர். அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஆண்டவர். ஆனால் ஏழைகளையும் திக்கற்றோரையும் விசாரிக்கிறவர். நீதிமானின் குடிசைகளில் வாஞ்சையுடன் வாசம் பண்ணுபவர்.

தாழ்வின் நம்மை நினைத்தஆண்டவரை நமது இளைப்பாறுதலின் நாட்களில் மறப்பதிலும் கொடிய துரோகம் வேறில்லை. இஸ்ரவேல் வீணாய்த துரோகம் செய்து சிறதியது. நாமும் அவ்வாறு செய்வோமா? நமக்காகக் காயப்பட்ட பாதங்களை முத்தம் செய்யாது நரக வழி விரையும் சிற்றின்பத்தின் பாதங்களைப் பின்தொடருவோமா? தேவனால் ஒருவர் நினைக்கப்பட்டபின் அவர் தாழ்ந்தவராக இருப்பாரோ?

தடைகள் !!!

(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா? நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா? நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும், ஒப்புரவாக மனமற்றவர்களாகவும் இருக்கிறோமா?

(2) நாம் கோபப்படுகிறோமா? நம் உள்ளத்தில் ஏதேனும் கொதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா? நாம் இன்னும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறோமா? கடுங்கோபத்திற்கு நாம் அடிக்கடி ஆளாகிறோமா?

(3) நமக்குள் பொறாமையின் சின்னங்கள் காணப்படுகின்றனவா? அடுத்தவர்கள் புகழப்படும்போது, அது நமக்கு சஞ்சலத்தை உண்டாக்குகிறதா? நம்மைவிட அதிகமாய் nஐபிக்கவும், பேசவும் , செய்யவும்கூடியவர்களை நாம் பார்க்கும்போது அவர்கள்மேல் பொறாமைகொள்கிறோமா?

(4) நாம் பொறுமையற்றவர்களாயும், எளிதில் எரிச்சலடைகிறவர்களாயும் இருக்கிறோமா? சிறிய காரியம்கூட நமக்குத் தொந்தரவாயும், வெறுப்பாயும் இருக்கிறதா? அல்லது எவ்வித சந்தர்ப்பத்திலும் நாம் பொறுமையாயும், சந்தோசமாயும் , குழப்பமில்லாமலும் இருக்கிறோமா?

(5) நாம் எளிதில் வருத்தமடைகிறோமா? பிறர் நம்மைக் கண்டு பேசாமல் போகிறதை நாம் பார்க்கும்போது, அது நமக்கு வேதனையைத் தருகிறதா? மற்றவர்கள் கனப்படுத்தப்பட்டும், நாம் அசட்டை செய்யப்பட்டும் இருக்கும் தருணங்களில் நமக்குள் எந்த உணர்ச்சி ஏற்படுகிறது?

(6) நமது இருதயங்களில் ஏதேனும் பெருமை உண்டா? நாம் கர்வங்கொள்ளுகிறோமா? நமது அந்தஸ்த்தைக் குறித்தும் தாலந்தைக் குறித்தும் பெருமிதங்கொள்ளுகிறோமா?

(7) நாம் உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறோமா? நமது ஊழியம் குறைகூறப்படாத நிலமையில் இருக்கிறதா? நாம் யோக்கியமாய் நடக்கிறோமா?

(8) நாம வீண் பேச்சுக்காரராயிருக்கிறோமா? மற்றவர்களின் நடத்தையைப்பற்றி அவதூறாய் பேசுகிறோமா? பிறர் காரியங்களில் அனாவசியமாகத் தலையிடவும், கொள் சொல்லுகிறவர்களாகவும் இருக்கிறோமா?

(9) நாம் பிறரை அன்பில்லாமலும், கடினமாகவும், கொடுரமாகவும் நியாயந்தீர்க்கிறோமா? நாம் எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாயும், பிறருடைய சிறு தவறுதலையும் பெரிதெனப் பேசுகிறவர்களாயும் இருக்கிறோமா?

(10) நாம் தேவனை வஞ்சிக்கிறோமா? அவருக்குரிய நேரத்தை நாம் திருடி இருக்கிறோமா? அவருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடாமல் வைத்திருக்கிறோமா?

(11) நாம் உலகத்தாரைப்போல் ஐPவிக்கிறோமா? இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா?

(12) நாம் களவு செய்திருக்கிறோமா? இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா?

(13) நம் உள்ளத்தில் பிறர்மேல் கசப்பு இருக்கிறதா? நமது இருதயங்களில் கசப்பையும், பகையையும் பேணி வைத்திருக்கிறோமா?

(14) நமது ஐPவியம் மாயையினாலும், அற்பத்தனத்தினாலும் நிறைந்திருக்கிறதா? நம் நடக்கை அருவருக்கப்படத்தக்க நிலையில் இருக்கிறதா? உலகம் நம்மைக் கண்டு தன் பக்கம் நம்மைச் சேர்த்திருக்கிறதா?

(15) நாம் யாருக்காவது கெடுதல் செய்து, அதற்குப் பதிலீடு செய்யாமல் இருக்கிறோமா? அல்லது சகேயுவின் சிந்தை நமக்குள் வந்திருக்கிறதா? தேவன் நமக்கு வெளிப்படுத்திக் காட்டின அநேக சிறு காரியங்களை நாம் சரிப்படுத்தியிருக்கிறோமா?

(16) நாம் கவலையுள்ளவர்களாகவும், வியாகுலம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறோமா? நமது இகபரத் தேவைகளுக்காக நாம் கடவுளிடம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோமா? நாம் நாளைக்காகக் கவலைப்படுகிறவர்களாயிருக்கிறோமா?

(17) மாம்ச இச்சைக்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா? நம் உள்ளத்தில் அசுத்தமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கின்றனவா?

(18) நம் வார்த்தையில் உண்மை அல்லது சத்தியம் காணப்படுகிறதா? அல்லது ஒன்றைப் பத்தாகப் பேசி துரும்பைத் தூணாக்குகிறோமா? நாம் பொய் பேசியிருக்கிறோமா?

(19) அவிசுவாசமாகிய பாவத்திற்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா? கர்த்தர் நமக்குச் செய்த எண்ணிறந்த நன்மைகளை நாம் மறந்தவர்களாய் இன்னும் அவருடைய வாக்குத்தத்தங்களை விசவாசிக்க மறுக்கிறோமா?

(20) nஐபம் செய்யாமை என்ற பாவத்திற்கு நாம் ஆளாயிருக்கிறோமா? நாம் பரிந்து பேசுகிறவர்களாயிருக்கிறோமா? நாம் nஐபிக்கிறோமா? நமது முழங்காலில் நின்று எத்தனை தடவை nஐபித்திருக்கிறோம்? நமது ஐPவியம் பல வேலைகளினால் நிறைந்திருக்கிறபடியால் , அங்கு nஐபத்திற்கு இடமில்லையா?

(21) நாம் வேதவாசிப்பை அசட்டை செய்திருக்கிறோமா? தினமும் எத்தனை அதிகாரங்பகள் வாசிக்கிறோம்? நாம் வேதமாணாக்கரா? வேதத்திலிருந்து ஆதாரங்களை நாம் எடுக்கிறோமா?

(22) நாம் பகிரங்கமாய் கிறிஸ்துவை வெளிப்படுத்தத் தவறினோமா? இயேசுநாதரைப் பற்றி நாம் பிறரிடம் கூற வெட்கப்படுகிறோமா? உலகத்தார் மத்தியில் நாம் இருக்கையில் அவரைப் பற்றிப் பேசாமல் வாயை மூடுகிறோமா? நாம் தினமும் சாட்சி கொடுத்து வருகிறோமா?

(23) ஆத்துமாக்களையேபற்றிய பாரம் நிறைந்தவர்களாய் இருக்கிறோமா? கெட்டுப்போன ஆத்துமாக்களின்மேல் அன்புள்ளவர்களாயிருக்கிறோமா? அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காகப் பரிந்து பேசும் சிந்தை ஏதேனும் நம்மில் உண்டா?