நாம் யாருக்காக வாழ்கிறோம்

நல்வாழ்வு தியாகம் நிறைந்தது. யாரோ ஒரு சிலருக்காகவே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை வாழ்க்கைப் பற்றிய சாதாரண பார்வைகள்.

கிறிஸ்தவர்கள், அதாவது விசுவாசிகள் யாருக்காக வாழ்கின்றார்கள்?

யாருக்காக வாழவேண்டும்?

சந்தேகமில்லாமல் உரைக்க முடியும்……. கிறிஸ்துவுக்காக! 

ஆனால் கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்பதைவிட சரியான பதில் வேறு உண்டு.

 கிறிஸ்துவில் வாழவேண்டும்………………… கிறிஸ்து என்னில் வாழ வேண்டும். (கலா 2:19-20)

 இவ்வேதத பகுதி சுட்டிக்காட்டுவது எது?

கிறிஸ்தவர்கள் சக மனிதர்களுக்காக வாழவேண்டும், சத்துருவுக்காக வாழவேண்டும் என்பதை அல்லவா………..?

தேவனைப் பகைப்போரை தேவன் நேசிக்கிறார். இது தேவ பண்பு.

எனவேதான் தேவனில்லை என்போரும், தேவப் பணியை தடைசெய்வோரும், விக்கிரக ஆராதனைக்காரரும், தேவபிள்ளைகளைத் துன்புறுத்துவோரும் உலகில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இல்லையேல் சாப்பலாகி இருப்பரே……………

நமக்கு தேவனிடும் கட்டளை அதுவே………..

தீமையைச் சகித்துக் கொண்டு நன்மையை செய்து வாழ்ந்து மடியுங்கள். மனிதராக இருந்துகொண்டே தேவ பண்பை வெளிப்படுத்தும் தேவபிள்ளைகளாக வாழ்ந்து முடியுங்கள்……

பகைப்போரைச் சபிக்கும் நாம், பகைப்போரை நேசிக்கவேண்டுமா? இந்தியாவுக்காக ஜெபிக்கும் நாம் பிற மதவெறியர்களை வெறுக்க முடியுமா?

எம்மை வியப்பிலாழ்த்தும் இன்னொரு காரியமும் உண்டு.

தாங்கள் இரட்சிக்கப்பட்ட வாழ்கிறோம் என்று கூறியபடி அயலகத்தாரை வெறுத்து ஜெபதப ஆர்ப்பாட்டம் செய்யும் விசுவாசிகள்…..

நன்றி : சொல்லோவிய வேதாகமம்

சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள்

Samson 

(1) அவன் (நசரேயன்) திம்னாத்தின் திராட்சத்தோட்டம் வழியாக சென்றது. (நியா.14:5, எண்.6:1-8)

(2) அவன் பிரேதத்தைத் தொட்டது (நியா.14:8-9,  15:15)

(செத்த சிங்கத்தின் உடலுக்குள் தேன் எடுத்தது, மூப்பது பேரை கொன்று அவர்கள் வஸ்திரத்தை உரிந்தும், கழுதையின் பச்சைத்தாடை எலும்பை எடுத்ததும்)

(3) வேசியோடுள்ள அவனுடைய உறவாட்டம் (நியா.16:1-4)

(கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சை முதலியன) 

(4) அவன் விளையாட்டுப்போல பொய் சொல்லி வந்தது (நியா.16:6-7,10-11,13)

 (5) சவரகன் கத்தி தலையில்பட்டு, அவன் ஏழு ஐடைகளும் சிரைக்கப்பட்டது (நியா.16:19)