வேதாகமத்தில் வரும் தேவாலயங்கள்

வேதாகமத்தில் பல தேவாலயங்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயிரம் ஆட்சி ஆண்டு தேவாலயம் இதில் இறுதியானது.

1). மோசேயின் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 40 ) – சுமார் கி.மு 1500-1000)

2). சாலொமோனின் தேவாலயம் (1இரா8)- சுமார் கி.மு 1000-585)

3). செருபாபேலின் தேவாலயம் (எஸ்றா 6) – சுமார் கி.மு 516-கி.பி70)

(பின்து ஏரோதால் புதுப்பிக்கப்பட்டது. யோவான்2)

4). கிறிஸ்துவின் சரீரமாகிய தேவாலயம் (யோவான் 2:21) – சுமார் கி.மு4- கி.பி 30)

5). திருச்சபையாகிய தேவாலயம் ( அப்2, 1தெச 4)

        *உலகளாவிய திருச்சபை (எசே2:21)

         *உள்ளுர் திருச்சபை (1கொரி 3:16-17)

        *தனி விசுவாசியின் சரீரம் (1கொரி6:19)

6). உபத்திரவ கால தேவாலயம் (வெளி11)

7). ஆயிரம் ஆண்டு ஆட்சிகால தேவாலயம் (ஏசா 2:3,60:13, எசே 40-48)

(நன்றி:சொல்லோவிய வேதாகமம்)

தேவனுக்குத் தூரமாக…..

 வாழ்க்கை முறையும் தேவ பக்தியும் பின்னிப் பிணைந்தவை. ஏசாயா இதனைத் தெளிவாக விளக்குகிறார். பல நேரங்களிலும் தேவன் நமது வாழ்வில் செயல்பட இடையூறாக இருப்பவை நமது அக்கிரமங்களாகும். தேவன் நம்மை விட்டுத் தூரம் போவதில்லை. நாம்தான் தேவனை விட்டுத் தூரம் போகிறோம்.

* கொடுமை, கொலை  (ஏசா 59:3)

* பொய் (ஏசா 59:3)

* நியாயக் கேடுகள் (ஏசா59:3)

* வழக்குகள், நீதி, சத்தியத்தைத் திரித்தல் (ஏசா 59:4,8)

* தீய திட்டங்கள், நினைவுகள் (ஏசா 59:4, 7)

* பிறரிடம் தீமை பரவக் காரணமாகுதல் (ஏசா 59:5.6)

போன்றவற்றை வைத்துக் கொண்டு தேவனிடம் நெருக்கமாக இருப்பது எப்படி? எனவே இவற்றைக் களைந்துவிட்டு வருவோரை ஆசீர்வதிக்க தேவன் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

(நன்றி: சொல்லோவிய வேதாகமம்)

எல்லாம் இயேசுவே

அவரது ஆசீர்வாதங்கள் அளவிடற்கரியன

சங்கீதம் 103:11-13

1).  உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது.

2). அகலம் : மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே உள்ள  தூரம் போல அவரது மன்னிப்பு அகலமானது.

3). ஆழம் : தந்தைப் பிள்ளைகளுக்கு இரங்குவது போன்ற நிலையில் அவரது இரக்கம் ஆழமானது.

அவர் நம்வாழ்வில் செயலாற்றும் விதம் ஆச்சரியமானவை

1). மன்னிக்கிறவர் – நீதிமன்ற அறை அனுபவம் (சங் 103:3)

2). குணமாக்குகிறவர் – மருத்துவ மனை அனுபவம் (சங் 103:3)

3). விடுவிக்கிறவர் – அடிமைச் சற்தை அனுபவம் (சங் 103:4)

4). முடிசூட்டுகிறவர் – அலங்கார அறை அனுபவம் (சங் 103:4)

5). திருப்தியாக்குபவர் – விருந்துச் சாலை அனுபவம் (சங் 103:5)

 அவர் நமக்காக இருக்கும் நிலைகள் ஆராயத்தக்கவை

1). தந்தையாக – மென்மையாகச் செயற்படுகிறவர் (சங்103:13)

2). சிருஷ்டிகராக – முற்றும் அறிந்திருக்கிறவர் (சங்103:14)

3). உடன்படிக்கையின் தேவனாக – தமது கடமையைக் காக்கிறவர் (சங்103:17-18)

4). தண்டிக்கும் ஆசிரியனாக – தண்டித்துத் திருத்துகிறவர் (சங்103:9)

5). நீதிபதியாக – ஒடுக்கப்படுதலில் விடுதலையளிக்கிறவர் (சங் 103:6)

6). அரசராக – நித்தியசிங்காசனத்தில் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் (சங் 103:19)

(நன்றி:சொல்லோவிய வேதாகமம்)