வேதாகமத்தில் வரும் சில போதகர்கள்

01). மோசே – வேதப்பிரமாணத்தைப் போதித்தார் (உபா 4:5).

02). பெசலெயேல் அகோலியாய் – கலையறிவு மிக்க இவர்கள் ஆசரிப்புக் கூடாரப் பணியில் போதித்து வழி நடத்தினர் (யாத் 35:30-35).

03). சாமுவேல் – இஸ்ரவேல் மக்களிடம் உத்தமமாக நடக்க  அறிவுரை கூறினார் (1சாமு 12:23).

04). தாவீது – சாலொமோனுக்கு தேவாலயப் பணி பற்றி அறிவுரை கூறினார் (1நாளா 28:9-21)

05). சாலொமோன் – ஞான அறிவுரைகளை வழங்கினார் (1இரா 4:29-34).

06). எஸ்றா – வேதபிரமாணத்தைத் தெளிவாகப் போதித்தார் (எஸ் 7:10)

07). இயேசு – ரபியாக விளங்கி நற்போதனைகளை வழங்கினார்.

08). பர்னபாஸ் – அந்தியோக்கியா சபையில் போதகப் பணி நடத்தினார் (அப் 13:1).

09). கமாலியேல் – சவுலின் குருவாக விளங்கிய நியாயப்பிரமாண அறிஞர் ( அப் 22:3).

10). பவுல் –  சிறந்த வேதாகம போதக அறிஞர் (அப் 13:1, எபே 19:9).

11). ஆக்கில்லா, பிரிஸ்கில்லா – அப்பொல்லோவுக்கு அறிவுரை வழங்கினர் (அப் 18:26).

12). அப்பொல்லோ – வல்லமையுள்ள சுவிசேஷ போதகர் (அப் 18:24-26). 

13). தீமோத்தேயு – திருச்சபைகளில் போதகராக பணியாற்றியவர் (1தீமோ 1:3, 2தீமோ 4:2).

14). தீத்து – கிரேத்தா திருச்சபையில் போதகப்பணி செய்தவர் (தீத்து 2:1-15).

வேதாகம இதயத்தின் உயிருள்ள கல்

வேதாகமத்தின் இதய பகுதியில் ஒரு கல்லாக கிறிஸ்து காணப்படுகிறார். இந்தக் கல் பெரும் விலை மதிப்புடைய வைரக்கல்லிலும் பெரும் மதிப்புடையது.  ஆனால் இதன் மதிப்பை அறியமுடியாத மனிதர் இதனை மிதித்து உருட்டி எறிந்தனர். ஆனால் இந்தக்கல்தான் தேவனுடைய கட்டுமானப்பணியில் மூலைக்கு தலைக்கல்லாயிற்று.

வேதாகமத்தின் இந்தப் பதுமராகக் கல்லைப் பற்றி வேதாகமத்தில் பல இடங்களில் குறிப்புகள் உண்டு.

1).  இது மூலைக்கல் (மத் 21:42, எபே 2:20)

2).  இது தலைக்கல் (சக 4:7, அப் 4:11)

3).  இது அடிக்கப்பட்ட கல் (1கொரி 10:4)

4).  இது இடறல் கல் (1கொரி 1:23)

5).  இது உடைக்கும் கல் (தானி 2:34)

6). இது உயிருள்ள தெரிந்தெடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கல் (1பேது 2:4-7)

இந்தக் கல்லின் வருகை உலக ஆசனங்களின் அசைவாக இருக்கும். உயிருள்ள கல்லால் உயிர்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.