யாபேசைக் குறித்து ஏழு காரியங்கள்

1.நாளா.4:9-10

(1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான்

(2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான்.

(3) அவன் ஜெபஜீவியம்: அவன் அருமையான ஜெப ஜீவியம் உடையவனாயிருந்தான்..

(4) அவனுடைய ஜெபம்: தேவரீர் என்னை ஆசீர்பவதித்து என் எல்லையை விரிதாக்கும்.

(5) அவன் வேண்டுதல்: உமது கரம் என்னோடிருந்து தீங்கு என்னைத் துக்கப்படுத்தாமல் அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்.

(6) அவன் வேண்டுதல் கேட்கப்பட்டது: அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அவனுக்கு அருளினார்.

(7) அவன் ஆசீவாதம்: தன் சகோதரரைப் பார்க்கிலும் அவன் கனம் பெற்றான்.

சவுலின் பின்மாற்றம்

(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4)

(2) பெருமை (1.சாமு.13:8-11)

(3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23)

(4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27,  1.சாமு.24:4-7)

(5) பொறாமை (காய்மகாரம்) (1.சாமு.18:6-9)

(6) தேவநடத்துதலுக்காக பொறுமையாய்க் காத்திராமல் அஞ்சனக்காரியிடம் போனான் (1.சாமு.28:7-8)

(7) அவிசுவாசிகளோடுள்ள ஐக்கியம் (1.சாமு.28:21-25)