அவரது மரணத்தால்…….

(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது (எபி9:26)

(2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது (கலா 3:13)

(3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது (எபே 2:14-16)

(4) தேவனுடன் ஒப்புரவாகி அவருக்குச் சமீபமானோம் (ரோம 5:1, எபே 2:13)

(5) புத்திரத்துவம் கிடைத்தது (கலா4:3-5)

(6) பாவமன்னிப்புக் கிடைத்தது (எபே1:7)

(7) நீதிகரிப்புக் கிடைத்தது (ரோம5:9)

(8) சுத்திகரிப்புக் கிடைத்தது (1யோவா1:7-9)

(9) அவரோடு நாமும் மரித்தோம் (ரோம6:1-3)

(10) மரணபயத்திலிருந்து விடுதலை கிடைத்தது (எபி2:14-15)

(11) ஆக்கினை அகற்றப்பட்டது (ரோம8:1-3)

(12) அனைத்து ஆசீர்களும் வாக்குறுதி செய்யப்பட்டன (ரோம8:32, 2கொரி9:15)

(13) நமது எதிரியான சாத்தான் வல்லமை உரியப்பட்டு தோற்கடிக்கப்பட்டான் (கொலோ2:14-15)

இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்

இடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும், நாள்தோறும் இரவும் பகலும் ஜெபித்தார். தானியேல் தினமும் மூன்று வேளை ஜெபித்தார்.

நமக்கு பரலோகத்தில் ஒரு பிதா இருக்கிறார். அவர் ஜெபத்தை கேட்கிறவர். அது அவரது பண்புநலம். அவர் ஜெபித்த கட்டளையிட்டுள்ளார். அதற்கு பதிலளிப்பேன் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். சோர்ந்து போகாமல் ஜெபிக்கவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், விழித்திருற்து ஜெபிக்கவும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அனைத்துக்காகவும், அனைவருக்காகவும் கவலைப்படாமலும் சந்தேகப்படாமலும் ஜெபிக்கும்படி கூறப்படுகிறது. கர்த்தர் நமக்கு மாதிரியை முன்வைத்தார்.

கேட்கிறவன் பெற்றுக்கொள்கிறான் (யாக் 4:2). அவர்கள்அப்போது மகிழ்ச்சியடைகிறார்கள் (1யோவா 16:24). தெய்வீக சமாதானத்தால் ஆட்கொள்ளப்பட்டு கவலை மறந்து பரவசமடைகிறார்கள் ( பிலி 4:6-7)

விசுவாசத்துடனும் தேவ சித்தத்தின்படியும் ஜெபங்களை ஏறெடுக்கத் தெரிந்திருப்பது, விரைவில் பதிலைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும். இதற்கு மிக அடிப்படையாக இருப்பது அர்ப்பணமுள்ள வாழ்வு (ரோம 12:1-2).

மறுரூப மனமுடையோர், மகிபனின் கரங்களிலிருந்து மலையென காரியங்களைப் பெறுவர். அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாக, கனிநிறைந்து வாழ்வர்.

எனவே இடைவிடாது ஜெபம் பண்ணுவோம். இடைவிடாது போராடுவோம்- இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே!

துன்பங்களின் எல்லையும் நன்மையும்!

துயரங்களின் காரணங்களைத்தேடி

கவலைப் பாயில் முடிங்குவதோ?

உலகில் ஏதாவது பெற்றுள்ளதில்

ஒரு பாக்கியம் மட்டுமே உண்டு.

எல்லாவற்றையும் ஒருநாள்

விட்டுச் செல்ல வேண்டும்.

தனியாக… ஒரு நீண்ட பயணத்துக்கு.

தேவன்

துன்பக் கடப்பாரைகளால்

ஆன்மீகச் சுரங்கங்களை

என் வாழ்வில் தோண்ட அனுமதிப்பாராயின்

நான் எதற்காக அழவேண்டும்?

எல்லாம் அவரது கட்டுப்பாட்டுக்குள்தானே

எந்த எல்லைதான் மீறும்?

நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் (யாக் 4:17)

செய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர் என்பது ஒரு பக்க உண்மை… மறுபக்கம் இன்றைய மனிதனின் நரக சிட்சைக்குக் காரணமென்ன? அவன் பாவியாக பிறந்ததோ. பாவத்தில் வாழ்வதோ அல்ல….. அவனது பாவத்துக்கான பரிகாரமாக மரித்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பாவ வாழ்வை விட்டு மனந்திரும்பி இரட்சிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ளாததுதானே.

இங்கு அவன் செய்ய வேண்டியதை செய்யாமல் போவதே பாவம்.

விசுவாசியைப் பொறுத்தவரை….. எதற்காக உலகில் வைக்கப்பட்டுள்ளனர்? உப்பாக வாழ … வெளிச்சம் வீச… சுருக்கதாய் சொன்னால் நன்மை செய்ய.

விசுவாசி நன்மை மட்டும் செய்வதற்காகவே இன்று உலகில் வைக்கப்பட்டிருக்கிறான் என்பது பரலோகத்தின் அறிக்கை. அவன் உப்பாக வாழவில்லையேல், வெளிச்சம் கொடுக்கவில்லையேல் பாவம்.

உப்பே விஷமாகிப் போகுமானால் வெளிச்சமே இருட்டைக் கொடுக்குமானால் எவ்வளவு  விபரீதம்? நான் விசுவாசிகள் தீமை செய்வதைப் பற்றிப் பேசுகிறேன்.

நீ தண்டனைக்கு தப்புவாயோ விசுவாசியே?

சாகாத சாதனை வாழ்வு!

இறக்கைகள் இருந்தால்

போர்த்திக் கொண்டிராதே

பறந்துகாட்டு…!

வெளிச்சமிருந்தால்

மரக்காலில் புதைந்திராதே

வெளியே கதிர்வீசு…!

இதுவே

உயிருள்ள விசுவாச வாழ்வு…!

மூலைக்குத் தலைக்கல்

ஒரு பாரம்பரிய சரித்திரக்கதை

மூலைக்குத்தலைக்கல்

(சங்.118:22,  ரோ.9:32-33,  ஏசா.28:16,  8:14,   1.பேது.2:4-8)

சலோமோன் தேவாலயம் கட்டும்போது ஒரு கல் மட்டும் மற்ற கற்களோடு சேராமல் கொஞ்சம் நீட்டாகவும் உருண்டு திரண்டதாகவும் இருந்தது. அந்தக் கல்லை அவர்கள் தேவாலயம் கட்ட எடுக்காமல் தூர வீசி ஏறிந்தார்கள். அந்தக் கல் ஆலயம் கட்டிக்கொண்டிருந்த வேலைக்காரருக்கும் சிற்பாச்சாரிகளுக்கும், வெளியே போகும்போதும் வரும்போதும் அது அவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லாய் கிடந்தது. ஆலயம் கட்டி முடிக்கிறபோது அந்தக் கல்லை எடுத்து ஆலயத்தின் மூலைக்குத் தலைக்கல்லாக வைத்தார்கள்.

 தேவசபையாகிய ஆலயத்தின் மூலைக்கல்லும் மூலைக்குத் தலைக்கல்லும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்துவாகிய கல்லை யூதர்கள் (வீடு கட்டுகிறவர்கள்) வேண்டாம் என தள்ளிப்போட்டார்கள். யூதர்களுக்கு கிறிஸ்து இடறலாயிருந்தார். கடைசியாக அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய இரத்தம் முழுவதும் சிந்தப்பட்டது.  அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் சாம்பாதிக்கப்பட்ட அவருடைய சபைக்கு அவர் மூலைக்கல்லும், மூலைக்குத் தலைக்கல்லுமானார். அவரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லை (மத்.11:6,  13:57,   15:12,  1.கொரி.1:23,  அப்.10:43,   4:12,  6:31,  யோ.1:12)

விதைக்கிறவன்

(சங்.126:5-6,  பிர.11:4)

விதைக்கிறவன்

(1) நீதியை விதைக்கிறவன் (நீதி.11:18,  யாக்.3:18)

(2) விதையை விதைக்கிறவன் (எரேமி.50:16,  ஆதி.26:12-13)

(3) வசனத்தை விதைக்கிறவன் (மாற்.4:14,  லூக்.8:11)

(4) சிறுக விதைக்கிறவன் (2.கொரி.9:6)

(5) பெருக விதைக்கிறவன் (2.கொரி.9:6)

(6) ஞான நன்மைகளை விதைக்கிறவன் (1.கொரி.9:11)

(7) ஆவிக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-9)

(8) அநியாயத்தை விதைக்கிறவன் (நீதி.22:8)

(9) களைகளை விதைக்கிறவன் (மத்.13:25-29)

(10) மாம்சத்துக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-8)

புதிய ஏற்பாட்டில் வாலிபர்கள்

(1.யோ.2:13-14)

(1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24)

(2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14)

(3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58)

(4) ஐத்திகு என்ற வாலிபன் (அப்.20:9)

(5) பவுலின் சகோதரியின் குமாரனாகிய வாலிபன் (அப்.23:16-22)

(6) துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு இயேசுவின் பின்னே சென்ற வாலிபன் (மாற்.4:51-52)

(7) இயேசுவின் கல்லறைக்குள் வெள்ளையங்கி தரித்தவனாயிருந்த வாலிபன் (மாற்.16:5)

அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் ஏழுபேர்

(கர்த்தருடைய ஊழியத்தில் பங்குபெற்றவர்கள்)

(1) இயேசு கிறிஸ்துவின் தரிசனம் பெற்று, அவரைக் குறித்து வல்லமையாய்ச் சாட்சி கொடுத்த பிரசங்கிக்கிற சவுல் (அப்.9:1-6, 22, 29)

(2) ஆண்டவரின் அழைப்பின் சத்தத்திற்குக் கீழ்படிதலுள்ள சீஷனாகிய அனனியா (அப்.9:10-18) (22:12)

(3) ஜெபம் பண்ண இடம் கொடுத்தவனும் நேர் தெருவில் வசித்து வந்தவனுமாகிய யூதா (அப்.9.11)

(4) அரவணைத்து நேசித்த பர்னபா (அப்.9:26-27)

(5) பரிசுத்தவான்களைச் சந்திக்க பிரயாணம் செய்த பேதுரு (அப்.9:32)

(6) நற்கிரியைகளையும் தானதருமங்களையும் மிகுதியாய்ச் செய்து வந்த தொற்காள் அல்லது தபீத்தாள் என்னும் பேருள்ள சீஷி (அப்.9:36)

(7) பரிசுத்தவான்களுக்கு தங்க இடம்கொடுத்த தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் (அப்.9.43) (10:32)