சிமியோன்

லூக்.2:25-29

(கிறிஸ்துவின் முதலாம் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவன்)

Simeon

(1) அவன் நீதியும் தேவ பக்தியுமுள்ளவன் (லூக்.2:25)

(2) அவன் இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருந்தவன் (லூக்.2:25)

(3) அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார் (லூக்.2:25)

(4) அவன் கர்த்தரிடம் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தான் (லூக்.2:26)

(5) அவன் ஆவியின் ஏவுதலுள்ளவன் (லூக்.2:27)

(6) அவன் இயேசுவைக் கரங்களில் ஏந்திக்கொண்டான் (லூக்.2:28)

(7) அவன் சமாதானத்தை அடைந்தான் (லூக்.2:28-29)

கர்த்தர் குணமாக்குகிறவர்

ஏசா.19:1-25

எகிப்தின் மத்தியில் கர்த்தரின் பலிபீடம்: இஸ்ரவேலின் தேவன் சர்வதேசதின் தேவன்.  ஆகவே எல்லா தேசத்தினரும் ஒரு நாள் அவரது ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மோசேயின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட கடவுளை எகிப்தியர் ஏற்றுக் கொள்வர்.  கர்த்தரை அறிந்து அவருக்குத் தங்கள் பொருத்தனைகளைச் செலுத்துவர்.  ஒரு காலத்தில் வாதைகளால் வாதிக்கப்பட்ட எகிப்தை கர்த்தர் குணமாக்குவார்.  கடுந்துயரத்திற்கும் ஓர் புதிய யுகம் உருவாகிறது.  கர்த்தரை நோக்கிப்பார்.  சிலுவையில் உனது நோய்களையும் சுமந்த தேவன் இன்று உன்னை குணமாக்குகிறார்.  எகிப்தியர் என் ஜனங்கள்; அசீரியர் என் கரத்தின் கிரியை: தான் ஆராதிக்கும் கர்த்தர் சர்வதேசத்தின் தேவன் என்பது தான் ஏசாயாவின் தரிசனம்.  அவர் உலகமனைத்தின் மன்னர்.  ஜீவனுள்ள ஆண்டவரிடத்தில் திரும்பும் போது தேசங்களின் மத்தியில் ஒப்புரவாகுதலும் சமாதானமும் காணப்படும்.  இஸ்ரவேலின் மக்கள் ஒரு காலத்தில் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டவர்கள் நமது ரட்சிப்பு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் செய்கையாயிருக்கிறது.  சமாதானத்தைக் குறித்த நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் கடவுள் நம்பிக்கையையும் சமாதானத்தையும் தருகிறவர் என்பதை நினைவு கூறுவோம்.  மனித சரித்திரத்தில் கிறிஸ்துவின் சிலுவை ஓர் ஒப்பற்ற நிகழ்ச்சியாகும்.

கர்த்தர்

நாகூம் 1:1-15

முன்னுரை(வ. 1) புத்தகத்தின் பொருள், ஆசிரியர், ஆக்கியோனின் பிறப்பிடம், நினிவேயைக் குறித்துக் கடவுள் முன்னுரைத்தவை கூறப்படுகின்றன. கர்த்தர் (வ. 2-8): கடவுளின் மாபெரும் பண்புகளும், மாவல்ல செயல்களும் குறிப்பிடப்படுகின்றன.  இவ்வதிகாரத்தில் கர்த்தர் என்ற சொல்லைப்பலமுறை கவனிக்கவும்.  இஸ்ரவேலை அழித்து, யூதாவையும் அழிக்கும்படி அச்சுறுத்திய அசீரியப் பேரரசின் காலத்தில் வாழ்ந்தபோதும், கடவுளின் மக்களைச் சேர்ந்த நாகூமின் செய்தியில் மையமாயிருப்பது கர்த்தரே! கடவுளின் இரு முகங்கள் இங்கு காட்டப்படுகின்றன.  எரிச்சலுள்ள அவர் நீடிய சாந்தமும் உள்ளவர்.  ஆனால், நீதியைச் சரிக்கட்டத் தவறாத அவர் தன்னை நம்புவோருக்கே நல்லவர். அவர் முன்னுரைப்பது (வ. 9-11): சனகெரிப்பின் படையெடுப்பு முன் கூறப்படுகிறது, (வ. 11).  ஆனாலும் நினிவே தம்முடைய சத்துருக்களுக்கும் பிரதிபலன் அளிக்கிற (வ. 2) கர்த்தரின் சினத்திற்குத் தப்பாது.  நினிவேயின் பாவம் கர்த்தருக்கு விரோதமாக நினைத்தல் (வ. 9).  புரண்டு வரும் வெள்ளத்தால் (வ. 8 ) மதுபான வெறி கொண்டிருக்கையிலே (வ. 10) நனிவே அழிக்கப்பட்டது. அவரது ஆறுதல் (வ. 12-15): ஒடுக்குகிற அசீரியன் அழிக்ப்படுவான் என்ற நற்செய்தி யூதாவிற்குக் கூறப்படுகிறது.

நீரே கர்த்தர்

ஏசாயா 37:1-20

அசரியா இராஜாவின் தூஷண வார்த்தைகளினிமித்தம் மனம் நொந்து தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு துக்கத்துடன் வந்த தனது பிரபுக்களோடு தானும் தனது வஸ்திரங்களை கிழித்து தேவ சமூகத்தில் தன்னைத் தாழ்த்தும் எசேக்கியா ஒரு சிறந்த இராஜா.  அவரது பிரசன்னத்தைத் தேடவும், அவருடைய ஊழியக்காரன் மூலமாய் தேவனுடைய வார்த்தையைக் கேட்கவும் தீவிரிக்கிறான்.  ஆறுதலான தேவ வாக்கை ஏசாயா தீர்க்கதரிசிமூலமாக பெற்றுக் கொண்ட பின்பும் சத்துரு கடிதத்தின் மூலமாக எசேக்கியாவை பயமுறுத்துவதைக் காணலாம்.  எல்லா சூழ்நிலையிலும் தேவ சமூகத்தை நாடும் பழக்கமுள்ள இராஜா மறுபடியும் தேவாலயத்தில் அந்த கடிதத்தையே கர்த்தருக்கு முன்பாக விரித்து முகமுகமாய் (மோசேயைப்போல்) தேவனோடு சம்பாஷிப்பதை வாசிக்கும் போது அத்தகைய நம்பிக்கையும் மற்றும் தேவன் பேரில் அவ்வளவு உறுதியும் எனக்கு இருக்கிறதா.  என்று ஆராய்ந்து அறிதல் நல்லது.  (2 இராஜாக்கள் 19:1-19) எசேக்கியா அரசனிடத்திலிருந்து ஆவிக்குரிய அநேக பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.