அவசர தொலைபேசி இலக்கம்

*துக்கத்தில்

யோவான் 14 தை அழையுங்கள்!

*மனிதர்கள் விழுத்தாட்டும் போது

சங்கீதம் 27 தை அழையுங்கள்!

*பலன் கொடுக்க விரும்பினால்

யோவான் 15 தை அழையுங்கள்!

*பாவம் செய்துவிட்டால்

சங்கீதம் 51 றை அழையுங்கள்!

*ஆபத்துவேளையில்

சங்கீதம் 91 றை அழையுங்கள்!

*தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்

சங்கீதம் 139 தை அழையுங்கள்!

*விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்

எபிரேயர் 11றை அழையுங்கள்!

*தனிமையிலும் பயத்திலும் இருந்தால்

சங்கீதம் 23 றை அழையுங்கள்!

*கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்

1கொரிந்தியர் 13றை அழையுங்கள்!

*பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்

கொலோ 3:12-17 லை அழையுங்கள்!

*கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்கு

2கொரிந்தியர் 5:15-19 தை அழையுங்கள்!

*வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்

ரோமர் 8:31 றை அழையுங்கள்!

*சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்

மத்தேயு 11:25-30 தை அழையுங்கள்!

*வீட்டை விட்டு வெளியே சென்றால்

சங்கீதம் 121றை அழையுங்கள்!

*உங்கள் ஜெபம் சுயத்தை சார்ந்தால்

சங்கீதம் 67 லை அழையுங்கள்!

*பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்

ஏசாயா 55 தை அழையுங்கள்!

*இலக்கையடைய தைரியம் வேண்டுமானால்

யோசுவா 1 றை அழையுங்கள்!

*சோர்வடைந்தால்

சங்கீதம் 27 லை அழையுங்கள்!

*உங்கள் பை வெறுமையானால்

சங்கீதம் 37 லை அழையுங்கள்!

*மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களாயின்

1கொரிந்தியர் 13 றை அழையுங்கள்!

*மக்கள் கெட்டவர்களாக இருந்தால்

யோவான் 15 தை வாசியுங்கள்!

*வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந்தட்டப்பட்டால் 

சங்கீதம் 126 றை வாசியுங்கள்!

 

இரட்சிப்பின் வெளிப்பாடு

தீத்து 3:1-5

கடவுளை முழுமனதோடு நேசிக்க வேண்டும் என்று சொன்ன இரட்சகர், உன்னைப் போல் பிறனையும் நேசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.  அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருக்கும் நாம் சமுதாயத்திற்குள் சென்று சேவை செய்ய வேண்டுமென்பது கடவுளுடைய சி;த்தம்.  பசியாயிருந்தேன், தாகமாயிருந்தேன், அந்நியனாய் இருந்தேன், வஸ்திரமில்லாதிருந்தேன், காவலிலிருந்தேன் என்மேல் நோக்கமாயிருந்து அன்புடன் கவனித்தீர்கள் என்று இயேசு சொன்னதை நினைவு கூற வேண்டும்.  வீண் தர்க்கங்களையும், வேண்டாத கேள்விகளையும் எழுப்பி, வேதத்தின் உண்மைகளைப் புரட்டுகிறவர்கள் சபைகளில் உண்டு.  நிலைத் தவறி தங்களில் தாங்களே பாவ ஜீவியத்தில் சென்று கொண்டு மற்றவர்களுக்கும் இடையூறு உண்டாக்குகிறவர்கள் சபைகளில் உண்டு.  இவர்களுக்காக ஊழியர் ஊக்கமாக ஜெபித்து, அவர்களை இரண்டொருதரம் அழைத்து, தவறுதல்களை உணர்த்தி புத்தி சொல்ல வேண்டும்.  மூப்பர்மார்களைக் கொண்டும் புத்தி சொல்ல வேண்டும்.  அவர்களுக்கும் அவர்கள் செவிகொடாமற்போனால் அவர்களை விட்டுவிலக வேண்டும்.  (மத் 18:17) தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.  இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு (2 தீமோ 3:5)

இரட்டையர்

ஒபதியா 1-21

ஏசாவின் அழிவு (வ. 1-16): வ. 14ல் ஏதோமின் அழிவு நிச்சயிக்கப்பட்டதை ஒபதியாவின் மூலம் கர்த்தர் முன்னுரைத்தார்.  ஏதோமின் முதற்குற்றம் என்ன? வ-3.  ‘விழுதலுக்கு முன் அகந்தை  என்ற பழமொழி எவ்வளவு உண்மை! ‘கர்த்தர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.     வ.  5-9ல் அழிவின் ஆழம் கூறப்படுகிறது.  என்ன பரிதாபம்! ஏதோமின் செல்வங்கள் முற்றிலுமாகக் கொள்ளையிடப்பட்டன.  அவன் நம்பி உடன்படிக்கை செய்தவரே அவனை அழித்தாலும், அவன் உணரவில்லை! கைவிடாக் கர்த்தரைக் கைவிடுவோர் நிலையை எண்ணுவோம்.       வ.  10-14 ஏதோமின் கொடிய குற்றம் விவரிக்கப்படுகிறது.     வ. 15,16ல் ஏதோம் தன் செய்கையின் பலனை அடைகிறான் ‘வினை விதைப்போன் வினை அறுப்பான்.  கர்த்தருடைய நாள் தீர்ப்பின் நாள் நீதி சரிகட்டும் நாள் யாக்கோபின் வாழ்வு (வ. 17-21): கர்த்தரைத் தம் தெய்வமாகக் கொண்டோர், தண்டனை பெற்றாலும், தயையும் பெறுவர்.  ய+தாவும் இஸ்ரவேலும் தங்கள் வாக்குத்தத்தத்தை மீண்டும் பெறுவர்;, தப்பி மீந்தோர் பரிசுத்தமடைவர் கடவுளின் பகைஞர் அழிக்கப்படுவர் இரட்சகர் தோன்றுவார் கடவுளுடைய அரசு, ஆட்சி நிலைநிறுத்தப்படும்.

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

முன்னுரைப்பு: உபாகமம் 18:18

Jesus

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

 நிறைவேறுதல்: மத்தேயு 21:10-11

அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.  அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

லூக்.7:15-16

மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.  

யோவான் 4:19

அப்பொழுது அந்த ஸ்திரீ (சமாரிய ஸ்திரீ) அவரை (இயேசுவை) நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.

(இன்னும் யோவான் 6:14,  7:40,  அப்.3:22-23ஐ பார்க்கவும்.

மோசே தீர்க்கதரிசிகளில் தலைசிறந்தவராக மதிக்கப்பட்டார். அவரைப்போல ஒரு தலைசிறந்த தீர்க்கதரிசி எழும்பவார் என்ற முன்னுரைப்பு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. அது எப்படியெனில்:

(1) இயேசுவும் மோசேயும் குழந்தைகளாயிருந்தபோது அரச மரண தண்டனைக்குத் தப்பினர்.

(2) இருவரும் தங்கள் ஜனத்தை மீட்க உலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

(3) இருவரும் யேகோவாவிற்கும், யூத ஜனத்திற்கும் மத்தியஸ்தராயிருந்தனர்.

(4) இருவரும் பாவிகளுக்காக, முரட்டாட்டம் பிடித்த மக்களுக்காக விண்ணப்பம்பண்ணுகிறவர்களாக இருந்தனர்.

எல்லோருக்கும் எல்லாம்

ரோ.12.1-8

பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார்.  பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார்.  ‘உங்கள் உடல்களைத் தேவனுக்கு அர்பணியுங்கள்” என்கிறார் பவுல்.  இது குறிப்பாக ஒரு கிறிஸ்தவக் கோட்பாடு.  பிற தத்துவங்கள் கூறுவது: உடல் என்பது ஆன்மாவின் சிறைக்கூடம்; அருவருக்கத்தக்கது: வெட்கத்துக்குரியது.  நம் நம்பிக்கையோ: நம் உடலே தேவனின் ஆவியானவருக்கு ஆலயமும் அவருடைய கருவியுமாகும்.  கடவுள் மனிதனானார்.  இதில் நம் சரீரத்தை அவர் அருவருக்காமல் ஏற்றுக் கொண்டார்.  நாம் செய்யும் சிறு அலுவல்களையும் வழிபாடாக ஏற்பார்;: அர்ப்பணி.  உலகுக்கு ஒத்த வேஷம் வேண்டாம்.  மனம் புதிதாக்குவது எப்படி? தேவனுடைய சித்தத்தை அறிவதன் மூலம் புதிய மனதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  உடலின் அங்கங்கள் எப்படிப் பெரிய அல்லது சிறிய காரியங்களைத் தர்க்கம், பொறாமை இல்லாமல் செய்வதுபோல, கிறிஸ்தவ சபை இணைந்து செயல்பட வேண்டும்.  முதலில் நம்மை நாமே அறிய வேண்டும்.  நம் திறமைகள், தகுதிகள், தாலந்துகள் பற்றிய சரியான தீர்வு வேண்டும்.  மற்றும் நம் வரங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  பிறர் வரங்கள் பற்றிப் பொறாமை இல்லாமல், நம் ஒவ்வொருவருடைய தாலந்தும் தேவனுடைய பரிசு என்று உணர்ந்து தாலந்தைப் பயன்படுத்தி அவர் நாமம் மகிமை அடையச் செய்ய வேண்டும்.

இயேசு கிறிஸ்து திரியேக கடவுள்

முன்னுரைப்பு: சகரியா12:10

trinity

 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

(1) நான் = கர்த்தர் (பிதா)

(2) கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் (பரிசுத்த ஆவி)

(3) தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து (குமாரனாகிய இயேசுவை நோக்கிப் பார்த்து)

இவ்விதமாகப் பிதா, குமாரன், பரிசுத்த அவி மூவரும் ஒரே கடவுள் என்பதை இவ்வசனம் ஊர்ஜிதப்படுத்துகிறது.

கீழ்க்கண்ட வசனங்களும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒரே கடவுள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

யோவான் 14:16

 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

அப்போஸ்தலர் 1:4,8

அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்.  நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.  பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

இவ் வசனங்களின்மூலம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரும் ஒன்றாகச் செயல்ப்படுகிறார்கள் என்பதை அறியலாம்.

எவரின் வல்லமை ?

மத்.12:22-37

கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார்.  சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ? கடவுளின் இராஜ்யம் சாத்தானின் ஆட்சியை முறித்தது.  அவன் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றாலும் கட்டப்பட்டுவிட்டான்.  இப்போரில் இங்குமில்லை அங்குமில்லை என்றிருக்க இயலாது.  இயேசுவோடிராதவன் பிறரைக் கடவுளிடமிருந்து பிரிக்கிறான்.  வ. 31-வேண்டுமென்றே உண்மையை உதறித் தள்ளி, நன்மையைத் தீமை என்று கூறுவது, ஆவியானவர் மூலம் செயல்படும் கடவுளின் வல்லமையை நிராகரிப்பதால் மன்னிக்கப்படாத பாவம் ஆகும். கனி காட்டும்: கனி மரத்தைக் காட்டும், வாழ்வின் பண்பு அதன் விளைவால் காணப்படும்.  வ. 34-இருதயத்தில் நிரம்பியுள்ள எண்ணங்கள் சொற்களாக வெளிப்படுகின்றன.  எனவே, நம் உள்நிலையை நம் பேச்சு வெளிப்படுத்தும்.  ஆகையால், நம் சொற்களால் நாம் நியாயந்தீர்க்கப்படுவது முறையே.  என் பேச்சு என் உள்ளத்தில் வாழ்வது யாரெனக் காட்டுகிறதா?

எளியவர்களின் கர்த்தர்

சங்.69:1-36

புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது.  தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை தேவ சமூகத்தில் ஆறுதல் தேடி ஊற்றுகின்றான்.  நெருக்கங்கள் முடிவுறாது தொடர்ந்தாலும் தேவனின் உதவிக்கே காத்திருக்கின்றான்.  எதிரிகளின் எண்ணிக்கையாலும் பொறாமையாலும் அநீதியாலும் கொடூரத்தாலும் தனக்கு ஏற்பட்ட துன்ப நிலையினை தன் தேவனிடமே கூறுகின்றான்.  உறவினரால் உதாசினப்பட்டு நிந்திக்கப் பட்ட நிலையியும் தேவனுக்கே மகிமை செலுத்துவது கிறிஸ்துவின் அனுபவங்களை நினைவுறுத்துகின்றது, தன் பாவத்தை மறைப்பது அறிவீனம் என அறிந்த அவன் அதனையும் தேவனிடம் அறிக்கையிடுகிறான்.  மன்றாட்டு: தன் உபவாசமும் அழுகையும் குடிகாரரின் பாடலானாலும் சோர்வுறாது தன்னை விடுவிக்கும் படி தொடர்ந்து மன்றாடுகின்றார்.  தேவ கிருபைக்காகவும் சத்தியத்திற்காகவும் வேண்டுகின்றார்.  தன் எதிரிகளின் அழிவை நாடாது, அவர்களின் முடிவை முன்னுரைகின்றார்.  அர்பணிப்பு: துக்கத்தோடும் வேதனையோடும் மகிழ்ச்சியோடும் துதியோடும் முடிக்கின்றார்.  தன்னுடன் மற்றவர்களும் சேர்ந்து தேவனை துதிக்க அழைக்கின்றார்.

எச்சரிக்கையுள்ள வாழ்வு

நீதி.18:1-24

  தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.  பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர், கோள்காரர் ஆகியவர்களிடையே வாழ நேரிடுகிற விசுவாசி, பிரிவிற்கும் பகைக்கும் இடம் தராது வாழ்ந்தாலும், சில சமயங்களிலே பிறராலே துன்பங்கள் நேரிடுவது உண்டு.  துன்பம் நேரிடுகின்ற காலங்களில் எல்லாம் ஒரு விசுவாசி தேவனிடத்திலே அடைக்கலம் ஆகவேண்டும் என்று அவர் விரும்புகிறார் (18:10) நாவடக்கம்: தேவன் அளிக்கும் அடைக்கலம் ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு விசுவாசியும் தன் நாவையும், கட்டுப் படுத்துதல் மிக அவசியம்.  நாவின் மூலமாய் நன்மையும் தீமையும் விளைகிறபடியினால், நன்மைக் கேதுவானவைகளையே பேசுதல் நமக்கும் நம் மூலமாய்ப் பிறருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாய் அமையும்.  நாவடக்கத்தோடு நற்பண்புள்ள மனைவியும் நல்ல சிநேகிதருமே ஒரு குடும்பத்தின் நல்வாழ்விற்குக் காரணமாய் அமைவார்கள்.

இயேசு கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறவராய் இருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 35:4-6

Jesus

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான். ஊமையன் நாவும் கெம்பீரிக்கும். வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

ஏசாயா 42:6

நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், ..

நிறைவேறுதல்:

இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தில் வியாதியஸ்தரைச் சுகப்படுத்தியதும், பிசாசு பிடித்திருந்தவர்களைச் சுகப்படுத்தியதும் எண்ணிக்கைக்கு அடங்காததாக இருந்தது. அவர் மனதுருகி தம்மிடத்தில் வந்த எல்லா வியாதிக்காரருக்கும் சுகத்தைக் கட்டளையிட்டார். அவருக்கு விரோதிகளாயிருந்த ஆசாரியர்களும், பரியேசரும் அவரைப்பற்றி, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே நாம் இவனை இப்படி விட்டுவிட்டால் எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள் (யோ.11:47-48) என்று இயேசு அற்புதங்களைச் செய்தார் என்று சாட்சி கொடுத்து  அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள் என்று வேதம் கூறுகிறது.

மத்தேயு 9:35

பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து,  ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல  நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

இவ்விதமாய் ஏசாயாவின் மூலமாய் ஆண்டவர் 700 வருடங்களுக்கு முன் முன்னுரைத்தது கிறிஸ்துவில் நிறைவேறியது.

எழும்பி ஆர்ப்பரி

கலாத்தியர்  4:12-31

தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன்.  மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன்.  (22,23) இதன் ஞான அர்த்தமென்ன? தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிற நிலை ஆகாருடையது.  அது இப்பொழுதுள்ள எருசலேம் (25).  ஆனால் விசுவாச சந்ததியான, சுயாதீனமுள்ள நம்மெல்லாருக்கும் தாயானவள் மேலான எருசலேமாவாள்.  ஆகையால் வாக்குத்தத்த பிள்ளைகளான நாம் மேலான மோட்சவீட்டை அடைய காத்திருக்கிறோம்!ஆனந்த பாக்கியம்: பவுல் தனது சரீரபலவீனத்திலும் முதலாந்தரம் அளித்த சுவிசேஷம் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது! (14,15) மீண்டும் வேண்டாத வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டதன் காரணமாக அந்த ஆனந்தபாக்கியத்தை இழந்துவிட்டனர் கலாத்திய சபையார்.  ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று ஆண்டவர் சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோமா? சிந்தித்து பார்ப்போம். பவுலின் பிரயாசம்: (1) சரீரத்தில் உண்டான சோதனையோடும பலவீனத்தோடும் பிரசங்கித்தல்.  (20 கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் வேதனையோடு வழி நடத்துதல்.  (3) என் சிறு பிள்ளைகளே என்று அழைக்குமளவிற்கு அவர்கள் மீது பாசம் காட்டுதல். நான் வாக்குத்தத்ததின் பிள்ளை.  கிறிஸ்து என்னோடு வசனத்தின்மூலம் பேசும்போது நான் களிப்பாய் ஆர்ப்பரித்து அதில் நிலைத்திருக்கிறேனா?

எழும்பி பிரகாசி

யோசு.3:3-17

  சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.  குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல ஆரம்பிக்க வேண்டும்.  கடந்த கால பாவம் சுத்திகரிக்கப்பட்டது.  இப்போது கர்த்தர் செல்லுகிறார்-எழும்பு. . .  போ. . .  செய். . .  எடுத்துக்கொள் (1,2).  தம்வாக்குறுதியை புதுப்பிக்கிறார்-பயப்படாதே(10. திட்டமான கட்டளைகள்: வச.  1,2 ல் ஆயி மக்களுக்கு யோசுவா செய்ய வேண்டியதைக் குறித்துத் திட்டமான கட்டளை கர்த்தர் கொடுக்கிறார்.  வச.  3-8 கடந்த கால தோல்வியை தனக்கு அனுகூலமாக மாற்றுகிறான் (6,7) நேரத்தை வீணாக்கவில்லை (3,10) கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவன் இத்தன்மைகளை உடையவனாயிருக்க வேண்டும்.  தேவனிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சகல யுத்தமக்களையும் யோசுவா ஈடுபடச் செய்கிறான் (30 தோல்விக்கு பின் வெற்றியை ருசிக்க வேண்டும் என்று தேவன் அறிந்து அவ்வாறு செய்கிறார். சாதாரண திட்டம்(10-17): யோசுவா தேவ கட்டளைக்கு கீழ்ப்படிந்து 2)சாதாரண முறையைக் கடைபிடிக்கிறான்.  இஸ்ரவேல் சேனையை தேவன் அரசாளுகிறார்.  ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவனின் திறமைகளும் பயன்படுத்தப்படுகிறது.  நம் பணியில் பயன்படத்தக்கச் சிறந்த திறமைகளை தேவன் நமக்குத் தந்திருக்கிறார்.  தேவ நடத்தலில், ஞானமாக பயன்படுத்தினால் உலகத்தில் அவருடைய பணியைச் செய்து முடிக்க முடியும்.

ஜெபமே ஜெயம்

Gebet 

(1) ஆபிரகாமின் ஜெபம்:

தன் மனைவியை எடுத்த அபிமெலேக்குக்காக (ஆதி.20:7,18) தன் சகோதரனுடைய மகன் லோத்து குடும்பத்திற்காக (ஆதி.18:23-,24,32)

(2) ஈசாக்கின் ஜெபம்:

மலடியாயிருந்த தன் மனைவிக்காக (ஆதி..25:21)

(3) யாக்கோபின் ஜெபம்:

எல்லாவற்றையும் அக்கரைப்படுத்தி தனித்து தேவனோடு போராடி ஜெபித்தான் (ஆதி.32:22-29,  ஓசி.12:4)

(4) மோசேயின் ஜெபம்:

பின்மாற்ற இஸ்ரவேலருக்காக (யாத்.32:9_13,14) தனக்கு விரோதமாய்ப் பேசின சகோதரிக்காக (எண்.12:1-13)

(5) யோபுவின் ஜெபம்:

தன்னை நிந்தித்து, பரியாசம்பண்ணி தூஷித்த சிநேகிதர்களுக்காக (யோபு 42:10, 19:19, மத்.5:44)

(6) அன்னாளின் ஜெபம்:

ஓர் ஆண் மகனைப் பெற்றெடுக்க (1.சாமு.1:10-15)

(7) எலியாவின் ஜெபம்:

ஊக்கமானது, கருத்தானது (1.இராஜா.18:30-38,39,42-46)

(8) எரேமியாவின் கண்ணீர் ஜெபம்:

பின்மாற்ற இஸ்ரவேலர் மனந்திரும்ப (எரேமி.9:1,  14:17,  7:16,  11:14, புல.2:18-19)

(9) இயேசுவின் ஜெபம்:

வாழ்க்கை முழுவதும் ஜெபமே (எபி.5:7)

(10) விதவையின் பிடிவாத ஜெபம்:

அவளுக்கு நியாயம் கிடைத்தது (லூக்.18:1-8)

(11) கானானிய ஸ்திரீயின் ஜெபம்:

அவள் விசுவாச ஜெபம் கேட்கப்பட்டது (மத்.15:22-28)

(12) பவுலின் ஜெப ஜீவியம்:

சபைகளுக்காக (ரோ.16:32,  எபேசி.1:16-19,  3:14-19,  கொலோ.1:9-11)

(13) எப்பாப்பிராவின் ஜெபம்:

ஜெபங்களில் போராடுகிறான் (கொலோ.4:12)

(14) முதல் நூற்றாண்டு சபையின் ஜெபம்:

அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. சிறைச்சாலைகள் திறவுண்டது.  (அப்.1:14,  2:42,  4:31-32,  12:4-12)

எழுப்பப்பட்டோர்

மத்.28:1-10

எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது.  காவலரும் அஞ்சி விழுந்தனர்.  ஆனால், ஆண்டவர் உடலுக்கு நறுமணப் பொருட்களிட வந்த பெண்களின் அச்சம் விரைவில் ஆனந்தமாக மாறிற்று.  அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார், என்ற மாபெரும் மகிழ்வூட்டும் நற்செய்தி பெற்றனர் இப்பெண்டிர்.  இறைவன்.  கல்லறை கடவுளைக் கட்டி வைக்க இயலவில்லை.  இறைவனின் திருவுளத்திற்கு பிறழாது அடிபணிந்த பங்கமற்ற பரமகுமாரன் சாவின் கட்டை முறித்தார்.  பாவம், பிசாசு, பாதாளம், அனைத்தும் சாவாமை பெற்ற இறைவனின் இறப்பால் வெற்றி கொள்ளப்பட்டன.  கீழ்ப்படிதல் வென்றது, சாவு முறியடிக்கப்பட்டது. இப்பெண்கள் பிறருக்கு அறிவிக்க விரைகையில் இயேசுவே அவர்களுக்கு எதிர்ப்படுகிறார்.  அடியோர் ஆண்டவரின் அடிகளைத் தழுவிப் பணிந்தனர்.  அவர்கள் கலிலேயாவுக்குப் போகப் பணிக்கப்படுகின்றனர். மத்தேயு கலிலேயாவின் கட்சியை மட்டுமே கூறுகிறார் (4:15,16).

இயேசு கிறிஸ்து நமது மேய்ப்பன்

முன்னுரைப்பு: ஏசாயா 40:11

Jesus

மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். 

எசேக்கியேல் 34:23

அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்.  இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார். 

நிறைவேறுதல்: யோவான் 10:11,14-16,27

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். நானே நல்ல மேய்ப்பன். பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்.  ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

இப்படியாக இயேசு கிறிஸ்து நமது மேய்ப்பனும் நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளுமாய் இருக்கிறோம்.

எதிர்ப்பின் மத்தியில் கிறிஸ்தவன்

சங்.56

சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ, எதிரிகளை வசைபாடவோ இல்லை.  ஆனால் ‘ வெகு தொலைவில் சத்தமிடாத புறா ” எனப் பொருள்படும் இசைக் கருவியில் ‘ பொன்னான சங்கீதத்தை” இசைக்கின்றார்.  தேவனிடம் முறையிடுதல்: எண்ணிக்கையாலும் கொடுமையினாலும், தந்திரத்தாலும் தன்னிலும் தன் எதிரிகள் வல்லவர் என மனிதரிடமல்ல: தேவனிடம் முறையிடுகின்றார்.  கெடுதல் செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் எதிரிகள் தம் வார்த்தைகளால் துன்புறுத்தி, குற்றம் கண்டறிய உற்றுக் கவனிப்பார்.  தேவனில் தன்னை உற்சாகப்படுத்தல்: தேவனின் வாக்குறுதிகள், வல்லமை, கிருபை ஆகியவற்றால் தன்னை உற்சாகப்படுத்துகின்றார்.  எதிரிகள் நம்மிலும் பெலசாலிகள் என்றும் தேவனுக்கு முன் பெலவீனரே.  தேவனிடமிருந்து எதிர்பார்ப்பு: மனிதரிடமிருந்து தப்பிய தன் எதிரிகள் தேவனின் நியாயத் தீர்ப்புக்கு உட்படுவர் என தாவீது தேவனிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.  தண்டிப்பது தேவனின் செயலே.  (உபா 32:35) தேவனின் ஆறுதல்: தேவன் தம்மவர்களின் வருத்தங்களை மறப்பதில்லை என்பது தாவீதுக்கு ஆறுதல் அளித்தது.  தேவனைத் துதித்தல்: மனமகிழ்ந்து பொருத்தனைகளை தாவீது ஏறெடுக்கின்றார்.  விடுதலைக்கு முன்னோடி.  தேவனைத் துதித்தல்.

நீதிமொழிகளில் ஏழு வீடுகள்

(1) நீதிமானுடைய வீடு – அதில் அதிக பொக்கிஷமுண்டு (15:6,  12:7)

(2) புத்தியுள்ள ஸ்திரீயின் வீடு – அவள் தன் வீட்டைக் கட்டுகிறாள் (14:1)

(3) விபசார ஸ்திரீயின் வீடு – அது பாதாளத்துக்குப் போகும் வழி (7:27,  2:18)

(4) துன்மார்க்கரின் வீடு – அங்கே கர்த்தரின் சாபம் இருக்கிறது (3:33,  14:11)

(5) அகங்காரியின் வீடு – அதைக் கர்த்தர் பிடுங்கிப் போடுவார் (15:27)

(6) பொருளாசைக்காரன் வீடு – அவன் தன் வீட்டைக் கலைக்கிறான் (15:27)

(7) சண்டைக்காரியின் வீடு – ஓயாத ஓழுக்கு (21:9,  25:24,  21:19,  27:15)