May

மே 30

மே 30

….அந்தப்பாட்டுபூமியிலிருந்து மீட்கப்பட்ட இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர்களேயல்லாமல் வேறுஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது (வெளி 14:3).

சிலபாடல்கள் இருள் நிறைந்த பள்ளத்தாக்குகளில்தான் கற்றுக்கொள்ளக்கூடும். எவ்விதக்கலையும்அவைகளைக் கற்றுத்தர இயலாது. குரல் நலத்துக்கான எச்சட்டமும் அவற்றைச் சரியாகப்பாடச்செய்ய இயலாது. அவற்றின் இசை இதயத்திலுள்ளது. ஒருவரின் ஞாபகத்திலிருந்து வரும்அனுவப கீதங்கள் அவை. கடந்தகால மறைந்த சம்பவங்களின் பாரங்களை அவை வெளிக்கொண்டுவரும்.அவை நேற்றைய தினத்தின் செட்டைகளில் பறந்துவரும்.

தூயயோவான், விண்ணில்கூட மண்ணின் மக்கள் மட்டுமே பாடிடக்கூடிய கீதங்கள் உண்டு. ஆனால்அவர்கள் இரட்சிக்கப்பட்ட மக்களாயிருப்பர் என்று கூறுகிறார். நமக்கு விடுதலையைப்பெற்றுத்தந்த கிறிஸ்து நாதரின் வெற்றிக்கீதம் அது. ஆனால் அவ் வெற்றிக் கீதமும்கட்டுகளின் நினைவிலிருந்து வரவேண்டும்.

மீட்கப்பட்ட மனிதன் அதைப் பாடுவதுபோன்று ஒரு தேவதூதனும்கூட பாட இயலாது. மீட்கப்பட்டமனிதன் பாடுவது போன்று அவர்கள் பாடவேண்டுமானால், அவர்கள் மீட்கப்பட்ட என்னைப்போல்நாடுகடத்தப்பட்டுப் பாடனுபவதித்திருக்கவேண்டும். அவர்களால் அதைச் செய்யமுடியாது.சிலுவையின் மக்களாலன்றி வேறு எவரும் அதைக் கற்றுக்கொள்ள முடியாது.

உனதுதந்தையாரிடமிருந்தே உன் இசைப்பயிற்சியைப் பெற்றுக்கொள்ளும் என் ஆன்மாவே, நீபேறுபெற்றாய். காணப்படாப் பாடகர் குழுவில் பாடிட நீ பயிற்றுவிக்கப்படுகிறாய்.உன்னையல்லாமல், வேறு எவரும் பாட இயலாத பகுதிகள் அப்பாடலில் உண்டு.

தேவதூதர்பாட இயலாத தாழ்ந்த சுரங்கள் அதிலுண்டு. தேவதூதர்கள் மட்டுமே எட்டக்கூடிய உச்ச சுரங்களும்அதில் உண்டு. அதன் ஆழ்ந்த கருத்துக்கள் உன்னுடையதே. உன்னால் மட்டுமே அவற்றைப்பாடமுடியும்.

உனதுதுயரங்கள்மூலம், தூதர் பாட இயலாத தாழ்ந்த சுரங்களில் பாட நீ உனது தந்தையாரால்பயிற்றுவிக்கப்படுகிறாய். உன்னைப் பரிசோதிக்க அவர் துன்பங்களை அனுப்புகிறார் என்று பலர்கூறக்கேட்டிருக்கிறேன். அது சரியல்ல. உன்னைக் காணாப்பாடகர் கூட்டத்தில் பாடப்பயிற்றுவிக்கவே, துயரங்களை அவர் அனுப்புகிறார்.

உனதுபாடல்களை இரவில் ஆயத்தம் செய்கிறார். பள்ளத்தாக்கில் உனது குரலை வளப்படுத்தகிறார்.மேகங்களின் மத்தியில் உன் குரலைச் சரி செய்கிறார். மழைகளின் மூலம் உனது குரலொலிசீராக்கப்படுகிறது. உனது உச்சரிப்பு அவர் அனுப்பும் குளிரினால் சீர்பெறுகிறது.நும்பிக்கையிலிருந்து நீ அச்சத்திற்குள்ளாகும்பொழுது உனக்கு ஒளியைத் தருகிறார்.

துயரத்தின்மூலம் உனக்கு கிடைக்கும் பயிற்சிகளை அற்பமாக எண்ணாதே. அனைத்துலக இசையில்உயர் இடம் ஒன்றை அது உனக்களித்திடும்.

உன்னைச் சுற்றி நிழல்கள் நீண்டு இருண்டனவோ?

உன்னைச் சுற்றி நடுநிசி இருண்டு வந்ததோ?

அருள் நாதரை அருகில் நீ அழைத்திடு,

அருள் கீதமொன்று எனக்கவர் தந்திடுவார்.

அவர் தந்ததைப் பாடிக் காட்டிடுவார்.

அவர், உன் குரல் தாழும்போது அதனை

அவர் பாடியே உயர்த்திடுவார்

அவர் தம் குரலோடிணைத்துப் பாடுவார்.

அவர்முன் அனந்தம் போரில் ஒருவர்,

அவர் தம் ஒளியதனில் நின்றிடுவோர் ஒருவர்,

அவர் தம் இனிய கீதம் பாடக்கற்றது,

அவரே தநஆ;த இரவிலேயே என்பார்.

இன்பகீதம் இன்றும் இனிதமாய்க் கேட்டிடும்,

இன்ப நாடாம் என் தந்தையின் நாட்டிலே,

இதன் ஆரம்பம் துன்பம் நிறை இரவே,

இருண்ட அறையின் நிழலே.