May

மே 29

மே 29

உங்களைச் சிநேகிதர் என்றேன் (யோ.15:15).

பலஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி நாட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். அவருடைய அழகான வாழ்க்கைஅவருடைய மாணவர்களை மிகவும் கவர்ந்தது. அவர்களுக்கு அது ஆச்சரியத்தை அளித்தது. அதன் இரகசியத்தைத்தெரிந்துகொள்ள அவர்களில் சிலர் ஆவல்கொண்டனர். அவர்களில் ஒருவன் பேராசிரியரின்படிப்பறையில் ஒளிந்து கொண்டான். அவ்வறையில்தான், அவர் தனது மாலை நேரங்களைக்கழிப்பது வழக்கம்.

அவர் உள்ளேவந்தபொழுது சற்று நேரமாகியிருந்தது. அவர் களைப்படைந்திருந்ததனால், அவர் அமர்ந்து ஒருமணிநேரம் தனது வேதாகமத்தை வாசித்துத் தியானிப்பதில் செலவிட்டார். பின்னர் தனி ஜெபம்செய்பவராகத் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். இறுதியாக வேதாகமத்தை மூடிய அவர் நல்லதுகர்த்தராகிய இயேசுவே, நாம் இருவரும் பழைய நட்புறவு நிலையிலேயேயிருக்கிறோம் என்று கூறினார்.

அவரைத்தெரிந்து கொள்வதே வாழ்வில் பெறும் சிறந்த பேறாகும். எது எவ்வாறாயினும் சரி, ஒவ்வொருகிறிஸ்தவனும், பழைய நட்புறவு நிலையிலேயே அவருடனிருக்க முயற்சிக்கவேண்டும்.

கிறிஸ்துநாதர் நம்மோடிருக்கிறார் என்ற உண்மை, தனி ஜெபம் செய்யும் பழக்கத்தாலும், பக்திகவனுத்துடன் வேதாகமத்தைக் கற்பதாலுமே ஏற்படும். கிறிஸ்து நாதரின் முன்னிலையைத்தனதாக்கிக்கொண்டு, அதில் பயிற்சி செய்பவனுக்கே அவர் மென்மேலும்உண்மையுள்ளவராயிருக்கிறார்.

அவரிடம் நீ பேசு, அவர் கவனிக்கிறார்.

உனது ஆவியும், அவருடையதும் சந்திக்கும்

அவர் நெருக்கம் உன் மூச்சிலும் நெருக்கமாம்,

உன் கரங்களைவிட அண்மையாம்.