May

மே 28

மே 28

நீர் என்னைஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்…. அங்கே அவனை ஆசீர்வதித்தார்(ஆதி.32:26,29).

யாக்கோபுக்குக் கிடைத்தவெற்றி அவன் போராடினதாலல்ல, அவரைப் பிடித்துக்கொண்டதினால்தான் கிடைத்தது. அவனுடையதொடைச்சதை சுளுக்கிக்கொண்டது. இனி அவனால் போராடமுடியாது. ஆனால் அவன் விடுவதாயில்லை.மேலும் அவனால் போராட இயலாமற்போனபடியால், அவன் தனது எதிரியின் கழுத்தைக்கட்டிக்கொண்டு, தன் முழு பாரத்தையும் அவர்மேல் தொங்குமாறு செய்து, வெற்றியடையும்வரைவிடாப்பிடியாய் பிடித்தான்.

நாமும் போராடுவதைவிட்டுவிட்டு, நமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் கைவிட்டு, தந்தையாகிய நமது ஆண்டவரின்கழுத்தைச் சுற்றி நமது கரங்கள் கொண்டு பற்றிக்கொண்டு, விசுவாசத்தோடு தொங்கிக்கொண்டாலன்றி நமது ஜெபத்தில் வெற்றியடையமாட்டோம்.

சர்வ வல்லவருடையகரங்களிலிருந்து, அற்ப மானிட வல்லமையினால், நாம் என்னதான் எடுத்துக்கொள்ளக்கூடும்?அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக ஆசீர்வதங்களைப் பறித்துக்கொள்ளக்கூடுமோ? சுயசித்தத்தின்வன்முறை ஒருக்காலும் அவரிடமிருந்து வெற்றியைப் பெற்றிடமுடியாது. அவர்மீது பற்றித் தொங்கும்விசுவாசத்தினாலேயேதான், நாம் ஆசீர்வாதங்களையும், வெற்றிகளையும் பெறக்கூடும். நாம்வெற்றி பெறுவது நமது சொந்த சித்தத்தை வற்புறுத்திக் கொள்ளும்போதல்ல. என் சித்தமல்ல,உம்சித்தமே ஆகக்கடவது என்று நாம் நமது பணிவையும் நம்பிக்கையையும் இணைத்துக்கூறும்பொழுதுதான்.நமது சுய சித்தத்தின்மீது நாம் எப்பொழுதும் வெற்றிகண்டு, அதைச் சாகடிக்கிறோமோ,அப்பொழுதுதான், அவ்வகையில்தான் அண்டவரில் நாம் வலிமையுடையவர்களாயிருப்போம்.ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைப்பது, போராட்டங்களினால் அல்ல, நாம் அண்டவரைவிசுவாசத்துடன் உறுதியாகப் பற்றிக்கொள்ளுவதனால்தான்.

நமது ஆத்துமாவையே நாம்பற்றிக்கொண்டிருந்தால், நாம் தொடர்ந்து ஜெபிப்பதற்கு அது எவ்வாறு தடையாயிருக்கும்என்பதற்கு சார்ல்ஸ் எச். ஆஷர் என்பவருடைய ஜெபவாழ்க்கையிலிருந்து எடுத்துக்காட்டு.

என் சிறுமகன் கொடியநோய்வாய்ப்பட்டிருந்தான். அவன் குணமடைவதைப்பற்றி மருத்துவர்களால் எவ்வித நம்பிக்கையும்தரமுடியவில்லை. எனக்கிருந்த ஜெப அறிவு முழுமையும்கொண்டு அவனுக்காக ஜெபித்துப் பார்த்துவிட்டேன். ஆனால் அவனுடைய உடல் நலம் குன்றிக் கொண்டே இருந்தது.

படுக்கையில் கிடந்த அவனைநான் ஒருநாள் பார்த்துக்கொண்டே இருக்கையில், அவனுடைய உடல் நிலையில் அற்புத மாறுதல்ஏதும் இருந்தாலன்றி, அவன் நெடுநாள் வாழமாட்டான் என்று அறிந்தேன். நான்ஆண்டவரிடத்தில், ஆண்டவரே, என் மகனுக்காக நான் அதிகம் ஜெபம் செய்துவிட்டேன். அவன்குணமடைவதாகத் தோன்றவில்லை. இப்பொழுது, அவனை இனி உம்மிடம் விட்டுவிட்டுப்பிறருக்:காக ஜெபிக்க வேண்டும். நீர் அவனை எடுத்துக் கொள்வது உமது சித்தமாயின், அவனைமுற்றிலுமாக உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். உமது சித்தத்தையே நான் தெரிந்துகொண்டேன்என்று ஜெபித்தேன்.

என் மனைவியை அழைத்து,நான் செய்ததைக் கூறினேன். அவள் சற்று அழுதாள். பின்பு, அவளும் அவனை ஆண்டவரிடத்தில்ஒப்படைத்தவிட்டாள். இரண்டு நாட்கள் சென்றபின் ஒரு தேவ மனிதன் எங்களைக் காணவந்தார்.பிராங் என்ற எங்களது மகன்பேரில் அவருக்கும் பற்று உண்டு. அவர் அவனுக்காக மிகவும்ஊக்கமாக ஜெபித்து வந்தவர்.

அவர் உங்கள் மகன்குணமாகிவிடுவான் என்று, நம்ப ஆண்டவர் எனக்கு விசுவாசம் தந்திருக்கிறார். உங்களுக்குவிசுவாசம் உண்டா? என்று எங்களைக் கேட்டார். நான் அவரிடம், நான் அவனை ஆண்டவரிடம்ஒப்படைத்துவிட்டேன். அகிலும் மறுபடியும் நான் அவனுக்காக ஆண்டவரிடம் மன்றாடுவேன் என்றேன்.அவ்வாறே செய்தேன். நான் ஜெபிக்கையில், அவன் குணமடைவான், என்ற விசுவாசம் எனக்குள் இருப்பதைஅறிந்தேன். அந்நேரத்திலிருந்தே அவன் குணமடைய ஆரம்பித்தான். ஆண்டவர் என்ஜெபத்திற்குப் பதில் தருவதைத் தடை செய்தது என்னுடைய ஒருநோக்கு விடாப்பிடித்தனம் ஆகும்.அதை விட்டு அன்று அவனை நான் ஆண்டவரிடம் ஒப்படைக்காவிடில், இன்று அவன்எங்களோடிருந்திருக்கமாட்டான்.

ஆண்டவருடைய பிள்ளையே,அவர் உன் ஜெபங்களுக்குப் பதில் தரவேண்;டுமானால், நீயும் நமது விசவாசத் தந்தையாகியஆபிரகாமைப்போல் தியாகமலைக்கூடாகச் செல்ல வேண்டியதிருக்கும். (ரோ.4:12 காண்க).