May

மே 27

மே 27

அவைகளை என்னிடத்தில்கொண்டுவாருங்கள் என்றார் (மத்.14:18).

இந்த நேரத்தில் உமதுதேவைகள் அதிகமாகி உம்மைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருக்கின்றனவா? கஷ்டங்கள்,நெருக்கடிகள் சோதனைகளில் நீர் மூழ்கிப் போய் விட்டிருக்கிறீரோ? ஒன்றை நீர்தெரிந்துகொள்ளவேண்டும். இவைகளெல்லாம் தூய ஆவியானவரால் நிரப்பப்படும்படி உம்மிடம்ஒப்படைக்கப்பட்ட பாத்திரங்களே. நீர் மட்டிலும் சரியாகப் புரிந்து கொண்டிருந்தீரானால்,இவை வேறு எவ்வழியிலும் நீர் பெற்றக்கொள்ளமுடியாத விடுதலைகளையும், ஆசீர்வாதங்களையும் நீர்பெற்றுக் கொள்ளுவதற்கு உமக்குத் தரப்படும் நல்வாய்ப்புகள் ஆகும்.

இப் பாத்திரங்களை நீர்ஆண்டவரிடம் கொண்டு வாரும். ஜெபத்துடனும், நம்பிக்கையுடனும் அவருக்கு முன்னால் நீர்அவைகளைப் பிடித்துக்கொண்டிரும். உங்கள் பதட்டாhன அலுவல்களைப் பிடித்துக்கொண்டிரும்.உங்கள் பதட்டமான அலுவல்களையெல்லாம் நிறுத்தி அமர்ந்திரும். ஆண்டவர் செயலாற்றுமட்டும்காத்திரும். அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதன்றி வேறு எதுவும் செய்யாதிரும். ஆண்டவர்செயலாற்றுவதற்கு வாய்ப்பளியும். அவா நிச்சயம் செயலாற்றுவார். மனமடிவானாலும், அழிவானாலும்உம்மை அச்சுறுத்தி மேற்கொள்ளவிருந்த சோதனைகளெல்லாம், ஆண்டவர் உமது வாழ்வில் தமதுகிருபைகளையும், மேன்மையையும், வெளிப்படுத்தக்கூடிய நல்வாய்ப்புகளாக்கி விடும். இதுவரையும்நீர் இவ்வாறான ஆண்டவரை அறிந்திருக்கவேமாட்டீர். அவைகளை (உனது எல்லாத் தேவைகளையும்)என்னிடத்தில் கொண்டு வாருங்கள்.

என் தேவன், தம்முடையஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலேநிறைவாக்குவார் (பிலி.4:19).

என் தேவன் – எத்தனைசிறப்பான ஆதாரம். மகிமையில் அவருடைய ஐசுவரியம். எத்தனை சிறப்பான வழி கிறிஸ்து இயேசுநாதர். உமது தேவைகளனைத்தையும் அவருடைய ஐசுவரியங்களுக்கு முன்பாக வைக்கும் இனிய உரிமைஉம்முடையது. அவ்வைசுவரியத்திற்குமுன் உமது தேவைகளை நீர் மறந்துவிடலாம். குறையாத அவருடையஐசுவரியம் உமக்கு முன்பாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவருடைய அன்பு உள்ளம் இதை உமக்குஅருளுகிறது. உமது எளிய விசுவாசத்துடன் அதிலிருந்து வேண்டியமட்டும் நீர் பெற்றுக்கொள்ளலாம்.உமது நலனுக்கு நீர் வேறு எந்த வழிகளையும் தேட வேண்டியதில்லை.

என்பாத்திரம் நிரம்பி வழிகிறது

நம் ஆண்டவரை நாம் நம்பிவருகையில்,

நமக்கு எல்லாம் நிரம்பிவழிந்தோடுமே,

நம்மாண்டவர் நிரப்பும்பாத்திரமென்றும்

நிரம்பி வழிந்தோடிடுமே,

அவருடைய ஆறுகள்,குறுகியவையில்லை,

அவர் தரும் யாவும்நிறைவானவையே,

அகிலமாளும் ஆண்டவர்தம்மவர்க்கருளுவார்,

என்று நிறைந்துவழிந்தோடவே.

எந்தையவரிடமிருந்து, ஏழைமக்கள் நாம்,

நன்றியுடன் ஏந்திப்பெறுவது ஏதாகிலும்,

சிந்தைக்கிடமின்றிநிறைந்து வழிந்தோடும்.

நன்றியுடன் துதித்திடுவோம்.நாளுமே நாமே.

ஆழ்ந்த மனநிறைவு ஆன்மாவைநிரப்பும்,

கண்களிலும் ஒளி தந்திடும்,

தந்தை இயேசுவை நம்பும் இதயம்,பெறும்

எத்தேவையும்நிறைவானதேயாம்.

அவர் அன்பை நாம் எடுத்துக்கூறிடில்,

இன்னும் அதிகமாகவேபெருகிடுமே.

அவர் அன்பினாழத்தை யார்அளவிடுவார்?

அதனுயரத்தை எட்டுவோர் யார்?

அவர் இன்பமென்னும்பண்பதனைக்கூறிட

அகிலத்திலேதுவார்த்தைகளுண்டு?

அவர் நாமம் என்றும்துதித்தேற்றிடில் நாம்

பெற்றிடுவோம் பெரும்பேறுகளையே

அவரோடேகூட மற்றெல்லாவற்றையும் நமக்குஅருளாதிருப்பது எப்படி? (ரோ.8:32).