May

மே 26

மே 26

ஊற்றுத் தண்ணீரே,பொங்கி வா. அதைக் குறித்துப் பாடுவோம், வாருங்கள் (எண்.21.17).

இஸ்ரவேலர் அன்று இருந்ததுஒரு துயர்மிக்க நிலையாகும். அவர்கள் பாழ்வெளிகளில் நெடுந்தூரம் நடந்து வந்திருக்கின்றனர்.அவர்களுக்குக் குடிக்க தண்ணீர் தானும் எங்கும் கிடைக்கவில்லை. மக்களனைவரும் தாகத்தால்நாவறண்டு நலிந்து போயிருந்தனர். அப்பொழுது ஆண்டவர் மோசேயை நோக்கி, மக்களை ஒன்றாகக்கூட்டிச்சேர், நான் அவர்களுக்குத் தண்ணீர் தருவேன் என்றார்.

மணல் தரையில் அவர்கள்வட்டம், வட்டமாக உட்கார்ந்து தங்கள் கோல்களினால் தரையை ஆழமாகத் தோண்டினார்கள்.அவர்களது பாடலை பாடிக்கொண்டே தோண்டினார்கள். அவர்களது பாட்டு விநோதமான பாட்டு,அவர்களுக்குக் கிடைத்த நீரூற்றுகளும் அற்புதமானவைகளே.

ஊற்று நீரே பொங்கி வா,பொங்கி வா.

ஊற்று நீர் பொங்குவதுகுறித்துப் பாடுவோம்

இதோ, சலசலப்பொலியுடன்நீர் பொங்கி வந்தது. நிரம்பி வழிந்தோடியது. அவ்விடத்தில் வெகு காலமாக கண்களுக்குமறைந்திருந்த நிலத்தின் அடியிலுள்ள ஒரு நீர்ச்சுனையைத் தோண்டி அடைந்தனர்.

எவ்வளவு அழகான படம் ஒன்றுஇங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது! நமது வாழ்க்கையில் பாக்கியங்கள் நிறைந்த ஓர் ஆறுஓடுகிறது. நாம் விசுவாசம் எனும் கோலைக் கொண்டு, துதியின் கீதங்களோடு அதைத் தோண்டிஅடையவேண்டும். அப்பொழுது பாழான நிலத்திலேயும் நமது தேவைகள் நிறைவு செய்யப்படும்.

அவர்கள் எவ்வாறு இந்த நீரூற்றுக்களைஅடைந்தனர்? துதியின்மூலம்தானே? பாலை நிலத்தின் மணலில் விசுவாச கீதங்களைப்பாடிக்கொண்டு, தேவ வாக்குத்தத்தங்களாகிய கோல்களால் அவர்கள் மணலில் நீரூற்றுகளைத்தோண்டினர்.

நமது துதி தோத்திரங்கள்பாலை நிலத்திலும் ஊற்றுக் கண்களைத் திறந்து விடும். ஆனால், நமது முறுமுறுப்புகளோ, நம்மீதுநியாயத்தீர்ப்புகளையே கொண்டுவரும். ஜெபங்கள் கூடச் சில நேரங்களில் பாக்கியமான நீரூற்றுகளைஅடைய வழி திறவாது.

ஆண்டவருக்குமனநிறைவளிக்கும் காரியங்களில் துதியைப் போன்று வேறொன்றுமில்லை. நன்றியறிதலாம்நற்பண்பைப் போல, விசுவாசத்திற்கு எற்படும் சோதனைகளில் மெய்ச் சோதனைவேறொன்றுமில்லை. நீ அண்டவருக்கு போதுமான படி துதி செலுத்துகிறாயா? ஆண்டவர் உனக்குத்தந்தஎண்ணிறந்த ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி கூறுகிறாயா? உனக்கு வரவிருக்கும் துன்பதொல்லைகளுக்காக நீ அவருக்கு நன்றிகூறத் துணிவாயா? உனக்கு இன்னும் வராதிருக்கும்ஆசீர்வாதங்களு;காகத் துதி செலுத்த நீ கற்றுக்கொண்டுள்ளாயா?

விடுதலை வேண்டிக்காத்திருக்கிறாய்,

நெடுங்காலம்காத்திருக்கும் ஆன்மாவே,

விடுதலை உனக்காக இப்போதும்

பாடலுடன்காத்திருப்பதை நம்பு.

கட்டுண்ட கால்கள்விடுதலையாகும்

வரையிலும் பெருமுமூச்சுவிட்டிராதே,

அளவில்லா விடுதலைக்கீதங்கள்

உனைச் சுற்றி வைத்துள்ளார்,ஆண்டவர்.