May

மே 25

மே 25

ஆகையால்,தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினாலுண்டான இரட்சிப்பை, நித்தியமகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்(2.தீமோ.2:10).

யோபு தன் கஷ்டங்களில்அவன் செய்த காரியம், உலகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க ஒரு மனிதன் என்ன செய்யமுடியுமோ அதைத்தான் செய்துகொண்டிருந்தான் என்று அவன் அறியவில்லை. அவன் சாம்பலில்உட்கார்ந்து, தமக்குத் தற்செயலாக நேரிட்ட இப்பிரச்சனையை முன்னிட்டுத் தன் இருதயத்தைக்காயப்படுத்திக் கொண்டிருந்தான். மேலே கூறப்பட்ட உண்மையை மட்டும் அவன்அறிந்திருந்தானானால், அவனுக்கு மனத்திடன் ஏற்பட்டிருக்கும். ஒரு மனிதனாகிலும் தன்மட்டிலேயே, தனக்காக மட்டிலும் வாழ்பவனல்ல. நமக்கு வரக்கூடிய தொல்லைகள் என்னவென்று நாம்அறியாதிருந்தபோதும், நாம் நமது தொல்லைகளின் வழியறியாது, ஆனால், ஒளியைநோக்கிக்கொண்டே போராடும் நாட்கள்தாம், நாம் வாழ்வதற்கென்று அழைக்கப்பட்டகாலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க காலமாகும். யோபுவின் வாழ்க்கையிலும், அவர் தமது இருண்டதுன்பங்களுடன் போராடிய நாட்கள்தான் அவனை நம்முடைய நினைவில் நிறுத்துபவை. அவைகள்மட்டும் இல்லாதிருந்தால், அவனுடைய பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதியிருக்கமாட்டாது.

நமக்குத் துயரம் மிகந்தநாட்களாயிருந்தவைதான், நமது சிறந்த நாட்களாயிருந்தனவென்பதை எவர்தான் அறியார்?வதனங்கள் புன்னகை சிந்தி, வாழ்வின் மலர்கள் நிறைந்த பசும்புற்றரைகளில் நாம் துள்ளிஓடும் நேரங்களில், நமது இதயம் ஆன்மீகத்தில் பயனற்றுப் போகிறது.

எப்பொழுதும் மகிழ்ச்சிநிறநை;ததும், கவலையற்றுமிருக்கும் ஆன்மா, ஆழ்ந்த ஆன்மீக வாழ்க்கையை அனுபவிக்கமாட்டாது. அதற்குரிய வெகுமதி அதற்குக் கிடைக்கும். அது தன்மட்டில் மனநிறைவு கொள்ளுகிறது.ஆனால், அம் மனநிறைவின் அளவு மிகக் குறைவானதே. அதன் இதயப்பாங்கு குறுகிப்போகிறது. அதன்உச்சநிலைகளை எட்ட வேண்டிய இயற்கை சரியான வளர்ச்சி பெறாமல் போகிறது. வாழ்வின்மகிழ்ச்சிகளை அறிந்துகொள்ள இயலாமலே, அதன் வாழக்கையின் இறுதிமட்டும் எரிந்துஅணைந்துபோகிறது.

துயரப்படுகிறவர்கள்பாக்கியவான்கள் (மத்.5:4). குளிர் காலத்தின் இரண்ட இரவுகளில்தான் விண்மீன்கள்மிகவும் பிரகாசமாக ஒளிருகின்றன. உயரமான பனிமூடிய மலையுச்சியில்தான் அழகிய ஜெனிடியன்என்னும் அழகிய மலர்கள் மலருகின்றன.

திராட்சைப்பழ இரசஆலைகளில், பழங்கள் தங்கள் இரசத்தைக் கொடுப்பதற்கு, நோவுதரும் அழுத்தத்திற்காகக்காத்திருப்பது போன்றதே. துக்கங்களின் மனிதன் என்று அழைக்கப்படும் நமது இரட்சகர் என்பதுதுயரங்களை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

உனக்குக் கதிரவனொளிசிறிதுதான் கிடைத்திருக்கிறது. சோர்வைத் தந்த உனது நாட்கள் மிகுதியானவை. ஒருவேளை இவைகோடைபோல் நீடித்திருப்பின், அவை உன்னைப் பாழான நிலமாக ஆக்கிவிடும். ஆனால்,ஆண்டவர் எல்லாவற்றையும் அறிவார். மேகங்களும், கதிரவனும் அவருடைய கரத்தில் தானே உள்ளன.

ஐயோ! இது மந்தாரமானநாளாயிற்றே! ஆம், ஆனால், நீ சிறிதளவாகத் தோன்றும் நீல வானை காணவில்லையோ?