May

மே 24

மே 24

சாராள் கர்ப்பவதியாகி,தேவன் குறித்திருந்த காலத்தில் (ஆபிரகாமுக்கு) ஒரு குமாரனைப் பெற்றாள் (ஆதி.21:2).

கர்த்தருடைய ஆலோசனைகள்நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும் (சங்.33:11).ஆனால் நாம் அவருடைய நேரம் வரும்வரை காத்திருக்கவேண்டும். அண்டவருக்குக் குறிக்கப்பட்டநேரங்கள் உண்டு. அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது நமக்கு அடுத்ததல்ல. நம்மால்அவற்றைத் தெரிந்து கொள்ளுவதும் முடியாது. அந்த நேரங்களுக்காக நாம்காத்திருக்கவேண்டும்.

ஆபிரகாமுக்குத் தாம்வாக்குத்தத்தம் செய்த குழந்தையை ஆபிரகாம் மார்போடணைத்துக் கொஞ்சுவதற்கு முப்பதுஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று ஆண்டவர் கூறியிருப்பாரேயானால், ஆபிரகாம்மாரடைப்பால் இறந்தேபோயிருப்பார். ஆதலால், ஆண்டவருடைய இரக்கமுள்ள அன்பு, அந்த நீண்டகாலத்தை மறைத்து வைத்தது. அந்த நெடுங்காலம் முடியும் தருவாயில், முடிய இன்னும் சிலமாதங்களே இருக்கையில்தான், ஆபிரகாமுக்கு உற்பவகாலத்திட்டத்தில் சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்(ஆதி.18:14) என்ற வாக்கு அருளப்பட்டது.

குறிக்கப்பட்ட காலம்வந்தது. ஆபிரகாம் என்ற அம் முதியவரின் இல்லத்தில் கேட்ட நகைப்பொலி, நீண்டதனிமையான அவர்களுடைய காத்திருத்தலை மறக்கச் செய்தது.

காத்திருக்கும் அன்பனே!உன்னை ஒருக்காலும் ஏமாற்றாத ஒருவருக்காக நீ காத்திருப்பதனால் ஊக்கங்கொள்.குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் தானும் அவர் தாமதமாகார். சீக்கிரத்தில்உன் துக்கம் சந்தோஷமாக மாறும்.

மகிழ்ச்சியால்நிறைந்திருக்கும் ஆன்மாவே! ஆண்டவர் உன்னை நகைப்பு, மகிழ்ச்சியால் நிறைக்கும்பொழுது நீபேறு பெற்றவன். பொழுது விடிவதைக் கண்டு இருள் ஓடிப்போவதுபோல், உன் துக்கமும், கண்ணீரும்ஓடிப்போய்விடும்.

கடலில் பயணம் செய்யும்நாம், மாலுமிகளின் வரைபடங்களுடனும், திசை காட்டும் கருவியுடனும் விளையாடுதல் கூடாது. அதுநமக்கடுத்ததல்ல. நன்கு திறமையுள்ள மாலுமிகளையே அவைகளைக் கையாளவிட்டுவிடவேண்டும். நமதுவாழ்வின் மாலுமி ஆண்டவர். அவரே அவற்றைக் கையாளட்டும்.

சில காரியங்கள் ஒரேநாளில் செய்து முடித்திட இயலாதவை. உதாரணமாக கதிரவன் சாயும் மாலைப் பொழுதின் வண்ணக்கோலங்களை எடுத்துக்கொள்வோம். பன்நெடு நாட்களாக அதைச் செய்யக்கூடிய பனித்துளிகளையும்,தூசித் துணுக்குகளையும் ஆண்டவர் சேர்த்து வைக்கிறார். அவைகளின்மூலமாக மாலைவேளைகளில்மேற்கில் தோன்றும் அழகிய வண்ணக்காட்சிகளை உருவாக்குகிறார்.

மலைகள் மறைந்துமாபெரும் வெளியாகும்,

மழை பெற்று பாலைமலரால் மறைந்திடும்,

என்றோ ஒருநாள் இவைநடக்கும்,

என்றென்றும் எவரும்தெரிந்திடார்.

வெண்கலக் கதவுகள்நொறுங்கிடும்,

திண்ணெனும் இரும்புக்கம்பிகள்வளையும்,

விண்ணோக்கிச் செல்லும்ஏணியாகிடும்.

மண்ணின் மேடுகள் சமமாகும்.

மண்ணில் கோணலெல்லாம்நேராகும்.

என்றோ ஒருநாள் இவ்வாறெல்லாம்நடக்கும்,

அன்று என்றெனப் பொறுமையுடன்

காத்திருப்போன்தெரிந்திடுவான்

பார்த்திருப்போர் ஆண்டவர்தாம்

குறிப்பிடும் நாளில்நடக்குமென்றுதான்

அறிவார், இன்றோ பிறநாளோஇது நடந்திடும்.