May

மே 22

மே 22

அவரே காரியத்தைவாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5).

உன் வழிகளைக் கர்த்தருக்குஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்ற இவ்வசனத்தையெங் என்பவர், உன் வழியை யேகோவாவின்மேல் உருட்டிவிடு, அவரையே நம்பியிரு. அவர்செயலாற்றுகிறார் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

நாம் நமதுபாரங்களனைத்தையும், அவைகள் கவலைகளாயிருக்கலாம், கஷ்டங்களாயிருக்கலாம், உடலுக்கானதேவைகளாயிருக்கலாம், அருமையான ஒருவனுடைய மனந்திரும்புதலைப்பற்றியபெருங்கவலையாயிருக்கலாம், எல்லாவற்றையும் கர்த்தருக்கு ஒப்புவித்து அல்லது அவர்மேல்உருட்டிவிட வேண்டும். அப்போது உடனடியாகவே அவருடைய செயலாக்கத்தைக் காணலாம்.

அவர் செயலாற்றுகிறார்.எப்பொழுது? இப்பொழுதே. அவர் நமது நம்பிக்கையை ஏற்றுக்கொள்கிறார். நாம், அவர்செய்யவேண்டுமென்று கூறியதை, அவர் செய்ய வேண்டியதைச் செய்ய முற்படுகிறார் என்னும்எதிர்பார்ப்பை ஒத்திப்போடும் பேராபத்தில் இருக்கிறோம். அவரிடத்தில் நமது வழிகளைநாம் ஒப்படைக்கும்பொழுது அவர் செயலாற்றுகிறார் என்று கூறுவதற்குப் பதிலாக இவ்வாறுஎதிர்பார்ப்பை ஒத்திப்போடுகிறோம். ஆனால் அவர் இப்பொழுதே செயலாற்றுகிறார். அதற்காகநாம் அவருக்கும் துதிகளை ஏறெடுக்கவேண்டும்.

இந்த எதிர்பார்ப்புத்தான்,நாம் அவர்மேல் உருட்டிவிட்ட பாரங்களின்மீது செயலாற்றுவதற்குத் தூய ஆவியானவருக்கு உதவிசெய்வதாகும். இப்பொழுது அப்பாரங்கள் நம்முடையவையல்ல. நம்மைவிட்டு அப்பாற்போய்விட்டவை. அவற்றை அகற்ற இப்பொழுது நாம் முயற்சிப்பதில்லை. அவர்தாம் செயலாற்றுகிறார்.நமக்கு ஆறுதலான இக்காரியத்தை அவருடைய கரத்திலேயே விட்டுவிடுவோம். நம் கரங்களில்அவற்றை எடுத்துக்கொள்ளாதிருப்போமாக. இவ்வாறு செய்கையில் நாம் பெறும் விடுதலை மகாபெரிதாம். மெய்யாகவே அவர் செயலாற்றுகிறார்.

ஒரு பயனும் எனக்குப்புலப்படவில்லையே என்று கூறலாம். காண இயலாவிடில் பரவாயில்லை. நீ உன் கவலைகளை அவர்மேல் உருட்டி விட்டு விட்டு, இயேசு நாதர் அவற்றின் மீது செயலாற்றுவார் என்று நோக்கியிருந்தால்,அவர் செயலாற்றுகிறார் என்பதைக் காண்பாய். விசுவாசம் சோதிக்கப்படலாம். ஆயினும் அவர்செயலாற்றுகிறார். இவ்வாக்குகள் உண்மையானவை, உறுதியானவை.

எனக்காக யாவையும் செய்துமுடிக்கப்போகிற உன்னதமான தேவைன, நோக்கிக் கூப்பிடுவேன் (சங்.57:2. மிக அழகானபழைய மொழிபெயர்ப்பு ஒன்று, என் கரங்களிலுள்ள காரியத்தை அவர் செய்து முடிப்பார், என்று கூறுகிறது.இவ்விஷயத்தை இது நமக்கு மிகவும் உண்மையான தாக்குகிறதல்லவா? என் கரங்களிலுள்ள காரியம்என்பது என்னுடைய இன்றையச் சொந்த வேலையைக் குறிக்கிறதல்லவா? என்னால் சமாளிக்கமுடியாத இந்தக் காரியம், ஆற்றலை நம்பி எடுத்துக்கொண்ட காரியம். இதை எனக்காகச்செய்திட அவரை நாம் கேட்கலாமா? அவர் இதைச் செய்து முடிப்பார் என்ற உறுதியுடன் நான்அமாந்து இருக்கலாமா? ஞானமுள்ளவர்களும், அவர்களுடைய காரியங்களும் ஆண்டவருடைய கரங்களில் இருக்கின்றன.

ஆண்டவர் தம்முடையஉடன்படிக்கையை முற்றுமாக நிச்சயமாக நிறைவேற்றுவார். அவர் தமது கரத்தில் எதைஎடுத்துக்கொண்டாலும் அதைச் செய்தே முடிப்பார். ஆதலால் முந்திய இரக்கங்கள்வருங்காலத்திற்கான உத்தரவாதமாகும். ஆண்டவரை நோக்கித் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பதற்கானதகுந்த காரணங்கள் அவை.