May

மே 21

மே 21

இராக்காலத்தில் என்சங்கீதத்தை நான் நினைத்து (சங்.77.6).

பாடும் பறவைஒன்றைப்பற்றி ஒரு சயம் ஒரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். அதன் சொந்தக்காரார்விரும்பும் இசையை அதன் கூட்டில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்பொழுது பாடாதாம். தெளிவாகத்தொடர்ந்த இசையாக இப்பொழுது அது பாடாது. ஆனால், காலை ஒளியை மறைத்து, அதன் கூட்டைமுழுமையாக மூடிவிட்டால், அது தானாகவே முழுக்கீதத்தையும் பாடிவிடுமாம்.

மக்களிலும் அநேகர் இருளாக்கும்நிழல்கள் வரும் வரையும் பாடக் கற்றுக்கொள்ளமாட்டார்கள். கதைகளில் வரும் நைட்டிங்கேல்பறவை, ஒரு முள் முன்னால் தன் மார்பை பதித்து வைத்துத்தான் பாடுமாம். மேய்ப்பர்களுக்கும் இரவில்தான்தூதர்களின் பாட்டுக் கேட்டது. மத்திய இரவில்தான் இதோ, மணவாளன் வருகிறார். அவருக்குஎதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்ற சப்தம் கேட்டது.

ஆண்டவருடைய அன்பை அதன்முழு வளத்திலும் ஆதரவளிக்கும் அதன் முழுமையிலும், ஓர் ஆன்மா, மெய்யாகவே தனது வானம் கறுத்து,மேகங்கள் சூழும்வரை தெரிந்து கொள்ள இயலுமா என்பது ஓர் ஐயப்பாடே.

இருளிலிருந்துதான் ஒளிவரும்.இரவின் இருளுக்குப்பின்தான் காலை ஒளி பிறக்கும்.

நாடு கடத்தப்பட்டசெர்பியா நாட்டு அரசியான நடாலியைத் தேடிச்சென்ற ஜேம்ஸ் கிரீல்மல் என்பவர் தனதுகடிதங்கள் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். மறக்கமுடியாத அந்தப் பயணத்தின்போதுதான்,உலகிற் கிடைக்கும் ரோஜா அத்தர் எனும் நறுமணத்திரவம் பால் கன்மலைப்பிரதேசத்திலிருந்தூன் உலகின் பெரும்பகுதிக்கும் அனுப்பப்படுகிறது என்று அறிந்தேன். அதில்என்னைப் பெரிதும் கவர்ந்ததென்றால் அவ்வேலைக்கான ரோஜா மலர்களைக் காரிருளில்தான்சேகரிக்கவேண்டும். அதிகாலையில், ஒருமணிக்கெல்லாம் மலர்பறிப்போர் தோட்டத்திற்குச்சென்று இரண்டு மணிக்குள்ளாக மலர் பறிப்பை முடித்துவிடுவார்கள்.

முதலாவதாக நான் அதை ஒருபழங்கால மூடநம்பிக்கையின் சின்னம் என்று எண்ணினேன். ஆனால் இதைப்பற்றி நான் சிறிதுஆராய்ச்சி செய்தபொழுதுதோ, மலர்களின் மணத்தில் நாற்பது சதவீதம் சூரிய ஒளியால்குறைந்து போகிறது என்று விஞ்ஞானச் சோதனைகள்மூலம் கண்டுபிடித்துள்ளனர் என்று அறிந்தேன்.

மனித வாழ்விலும்,கலாச்சாரத்திலும் இது மெய்யான ஒரு சம்பவமே. வேடிக்கையான, தற்பெருமைக்கானதல்ல.