May

மே 20

மே 20

பிதா எனக்குக்கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ? (யோ.18:11).

ஓர் ஓவியன் தான் ஓவியம்தீட்டுகையில், பல வர்ணங்களைத் தன் தூரிகையில் தொட்டு பலமுறைகள் ஓவியத்தில் வரைந்துஅதைச் சிறப்பானதாக்குகிறான். அதைவிட இன்னும் அதிகமாகத் தாம் விரும்பும் சிறப்பானமுறையில் நம்மை உருவாக்குவதற்குப் பல துன்பங்களையும் சூழ்நிலைகளையும் ஆண்டவர்அனுப்புகிறார். அவர் தரும் கசப்பான அவ்வனுபவங்களை நாம் தகுந்த முறையில்ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆனால் இத் துன்பங்கள்நீங்கினவுடனே, நம் உணர்ச்சிகள் அடக்கப்பட்டுப் போய்விட்டால், ஆன்மாவுக் கேற்படும்கேடு திருத்தமுடியாதது ஆகிவிடும். ஏனெனில், எத்தனை பெரிதான அன்புடன் இக் சகப்பான துன்பஅனுபவங்களை அவர் நமக்குத் தருகிறாரென்பதை எவரும் ஊகிக்கமுடியாது. இருந்தபோதிலும், நமதுஆன்மாவின் நன்மைக்காக நாம் பெற்றுக்ககொள்ளவேண்டிய இத்துன்ப அனுபவங்களை நமதுகருத்தற்ற நிலையினால் கடந்துசெல்ல விட்டுவிடுகிறோம். அப்பொழுது அவற்றினால் நமக்குஎப்பயனும் ஏற்படுவதில்லை.

அதன் பின் நாம்லு ஐயோ,ஆண்டவரே, நான் வறண்டு போய்விட்டேனே! எல்லாம் எனக்குள் இருளாகிவிட்டதே என்று குறை கூறிஅங்கலாய்க்கிறோம். என் அருமைக் குழந்தையே, உன் இதயத்தைத் திறந்து துன்பங்களைஏற்றுக்கொள். பக்தியாலும், உணர்ச்சிப்பெருக்காலும் நீ நிறைந்திருப்பதைவிட அவை உனக்குநன்மையைத் தருபவை.

மனிதனின் அவலக்குரல்இறைவனை எட்டியது,

மன்னவா, எம் நோவுகளைஅகற்றிவிடும்.

ஒளிமயமாய் நீர்உருவாக்கிய இவ்வுலகம்

ஒளி இழந்து இருண்டுபோய்விட்டது.

சுருண்டு வரும்சங்கிலிகளெல்லாம்

மருண்ட எம் உள்ளத்தைவளைத்தன

பறந்து செல்ல ஏற்பட்டஎம் சிறகுகள்

மறந்த தம் செயலைப்பாரத்தால்,

ஆண்டவா, அகற்றிடும்நோவினை ஈண்டிருந்து,

ஆண்டவா, இவ்வுலகுஉம்மை நேசித்திட,

ஆண்டவர் பதிலுரைத்தார்கூக்குரலுக்கே,

நோவுகளை யெல்லாம்நான் அகற்றிடட்டுமா?

அத்துடன் ஆன்மாவின்சகிப்பு தன்மை சேர்த்து,

அல்லல் தன்னால் வரும்ஆற்றலையும் சேர்த்து,

அகற்றிடட்டுமா, இதயமிணைக்கும்பரிவினையும்?

அனலிலிருந்து அண்ணல்எனைநோக்கி

அலறும் வீரார்களை இழந்திடுவாயோ?

அகற்றிடட்டுமா, அன்பை,இன்பச் சிரிப்பதனை?

அவை தரும்விலைமதிப்பற்ற பண்புகளை?

அப்போது குருசில்மாண்ட என்னிடம்

நீ வந்திடுவாயோ?